ஒரேயொரு தமிழ் படத்திற்கு தான் மியுசிக் போட்டாரு... இப்போ BMW கார் ஷோரூமில்!
நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் திரைக்குவந்து விமர்சனம் ரீதியாக பெரிதும் கவனத்தை ஈர்த்த 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்திற்கு இசையமைத்தவர், இசையமைப்பாளர் விஷ்ணு விஜய். மலையாளத்தில் நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால், இவர் திருவனந்தபுரத்தில் பிறந்த ஒரு மலையாளத்தவர் ஆவார். தமிழில் முதல் படமாக 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படத்திற்கு இசையமைத்தார்.
பிரபல இசையமைப்பாளர்கள் தேவி ஸ்ரீபிரசாத், ஜிவி பிரகாஷ் குமார், விஜய் ஆண்டனி, சந்தோஷ் நாராயணன், கோபி சுந்தர், வித்யாசாகர் உள்ளிட்ட தென்னிந்திய இசையமைப்பாளர்கள் உடன் மட்டுமின்றி, பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி உடனும் இணைந்து பணியாற்றியுள்ள விஷ்ணு விஜய் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமானின் குழுவில் பல வருடங்களாக புல்லாங்குழல் வாசிப்பவராக பணியாற்றியவர் ஆவார்.

இவரது இசையில் முதல் திரைப்படம் 2016இல் மலையாளத்தில் வெளிவந்தது. சிறந்த பின்னணி இசைக்காக இந்த முதல் திரைப்படம் கேரள மாநில திரைப்பட விருதை வென்று இருந்தாலும், விஷ்ணு விஜய்யின் இசையில் அடுத்த திரைப்படம் 2019ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது. 'தல்லுமாலா', 'பிரேமலு', 'ஆலப்புழா ஜிம்கானா' உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள விஷ்ணு விஜய் தமிழை போன்று கன்னடத்திலும் ஒரேயொரு திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இவரது இசையில் அடுத்ததாக 'பெத்லேஹம் குடும்ப யூனிட்' என்கிற மலையாள திரைப்படம் திரைக்குவர உள்ள நிலையில், இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் புதியதாக பிராண்ட்-நியூ BMW X5 என்கிற லக்சரியான SUV காரை வாங்கியுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட BMW டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த BMW காரை பிரத்யேகமான அடர் பச்சை நிறத்தில் விஷ்ணு விஜய் வாங்கியுள்ளார்.

அதாவது, இந்த நிறத்தில் இந்தியாவில் BMW X5 கார் விற்பனை செய்யப்படுவது இல்லை. இந்த பெயிண்ட்டை அவர் விரும்பி கேட்டு பெற்றுள்ளார். இந்தியாவில், கார்பன் பிளாக் மெட்டாலிக், மினரல் வெள்ளை மெட்டாலிக், டான்சானைட் ப்ளூ மெட்டாலிக், கருப்பு சாப்பைர் மெட்டாலிக், ப்ரூக்ளின் கிரே மெட்டாலிக், ஸ்கைஸ்க்ராப்பர் கிரே மெட்டாலிக் உள்ளிட்ட நிறங்களில் X5 கார் விற்பனை செய்யப்படுகிறது.
BMW X5 காரின் முன்பக்கத்தில் வழங்கப்படும் கிட்னி வடிவிலான க்ரில், தேவைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளக்கூடிய LED ஹெட்லைட்கள் மற்றும் பெரிய அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இந்த காருக்கு ஸ்போர்டியான தோற்றத்தை வழங்குகின்றன. இந்த SUV காருக்கு உள்ளே டாஷ்போர்டில் BMW கர்வ்டு டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
டாஷ்போர்டில் 12.3 இன்ச்சில் டிரைவருக்கான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் முன் இருக்கை பயணிக்கு பொழுதுப்போக்கிற்கான பெரிய அளவில் 14.9 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுதிரை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும் இந்த காரில் உயர் தரத்திலான ஹர்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் 4-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படுகின்றன.
BMW X5 கார் ஆனது பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடனும் கியர்பாக்ஸுக்கு 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், BMW நிறுவனத்தின் எக்ஸ்டிரைவ் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.97 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: BMW X5 போன்ற காருக்கு இந்த பளபளப்பான அடர் பச்சை நிறத்திலான பெயிண்ட் மிகவும் எடுப்பாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். மேலே கூறப்பட்ட ரூ.97 லட்சம் என்பது காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் பல இலட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். இவ்வளவு விலைமிக்க கார் என்பதால், இந்த காரை தான் இனி வரும் நாட்களில் அதிகமாக இசையமைப்பாளர் விஷ்ணு விஜய் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications