சிறிய கார்களின் ரேட் எக்குதப்பா ஏறப்போகுது! இப்பவே வாங்குனா தான் லாபம்!

இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வாகனங்களின் மைலேஜ் குறித்து விரைவில் வரவுள்ள புதிய விதிமுறையில் சிறிய வாகனங்களுக்கான விதி விதிக்கு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே இது பலனளிக்கும் என்பதால் இந்த விதிவிலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இத குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியா முழவதும் காற்று மாசுவை கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் தேவையை குறைக்கவும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் கம்பஷன் இன்ஜின் வாகனங்கள் குறைந்தபட்சம் இவ்வளவு மைலேஜை வழங்கும் வகையில் இருக்க வேண்டும் என்ற விதிமுறையை அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசு வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

new fuel emission rules

கடந்த செப்டம்பர் மாதம் வரையில் எடுக்கப்பட்ட முடிவில் இந்த புதிய மைலேஜ் விதி சிறிய ரக கார்களுக்கு பொருந்தாது என்ற விதி விலக்கை வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் இது குறித்து நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் தரப்பிலிருந்து இந்த விதிவிலக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமே பலன் தரும் வகையில் உள்ளது என வாதிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த விதிவிலக்கை தற்போது நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான வரைவில் 909 கிலோ வரையிலான எடை கொண்ட வாகனங்களுக்கு இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த வகையில் விற்பனையாகி வரும் 95 சதவீதமான கார்கள் மாருதி நிறுவனத்தின் கார்கள் தான் அதனால் அந்த விதிவிலக்கு மாருதி நிறுவனத்திற்காக வழங்கப்படும் விதி விலக்காக இருப்பதாக பேசப்பட்டது.

new fuel emission rules

இந்நிலையில் டாடா மற்றும் மஹிந்திராவின் வாதத்திற்கு பிறகு இந்த விதிவிலக்கு நீக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்ப்டடுள்ளது. இதனால் சிறிய ரக கார்களுக்கு எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன் விலை அதிகரிக்ககூடும் அல்லது விற்பனையிலிருந்து அந்த கார்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவிற்கு தேவைப்படும் எரிபொருளில் 12 சதவீதம் போக்குவரத்திற்காவே பயன்படுத்தப்படுகிறது. இதனால் காற்ற மாசு அதிமாகிறது. போக்குவரத்தில் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் தான் 90 சதவீதமான எரிபொருளை பயன்படுத்துகின்றனர். இதை கட்டுப்படுத்தவே CAFE என்ற விதி முறையை அரசு வகுத்துள்ளுது. இதன்படி 3500 கிலோக்கு குறைவான எடை கொண்ட வாகனங்களுக்கான மைலேஜ் விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.

new fuel emission rules

இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இவி, சிஎன்ஜி மற்றும் ஃபிளக்ஸ் ஃப்யூயல் ரக வாகனங்களை நோக்கி தங்கள் கவனத்தை திசை திருப்பி விட்டனர். இந்த புதிய விதிமுறை 2027ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுகு்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே அதற்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக துவங்கிவிட்டனர்.

இந்த விதிமுறை எப்பொழுது இறுதி வடிவத்தை பெறும் என்பது தெரியவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் இது குறித்து வந்த வரைவில் சிறிய ரக கார்களுக்கு வழங்கப்பட்ட விலக்கு மட்டும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளுது. இது போக இன்னும் சில மாற்றங்கள் செய்து இந்த விதிமுறைகள் இறுதி செய்யப்படலாம் என தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய மைலேஜ் விதிமுறை சிறிய ரக கார்களுக்கு வந்தால் அந்த கார்களில் உள்ள இன்ஜினை புதிய விதிமுறைக்கு ஏற்பட அப்டேட் செய்ய வேண்டும். இதனால் அந்த வாகனங்களின் விலை கணிசமாக அதிகமாகும் என எதிர்பார்க்கலாம். இது நேரடியாக வாகன விற்பனையை பாதிக்க வாய்ப்புள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 6, 2026, 19:30 [IST]
English summary
New fuel emission rules india drops small car concession
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X