ஃபார்ச்சூனர் காரை வெச்சு ஆட்டம் காட்டும் டொயோட்டாவுக்கு சரியான போட்டி! 7-சீட்டர் கார்களில் இத்தனை மாடல்களா!!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், தனது புதிய முதன்மை எஸ்யூவி (SUV) ரக காரான எம்ஜி மெஜஸ்டர் (Majestor)-ஐ அறிவித்தது போல் இன்று (பிப்.12) வெளியீடு செய்துள்ளது. இது எம்ஜி பிராண்டின் பிரீமியம் தரத்திலான, அளவில் பெரிய கார்களை கொண்ட டி+ எஸ்யூவி பிரிவில் ஒரு குறிப்பிடத்தக்க நுழைவாகும்.

விற்பனையில் உள்ள எம்ஜி க்ளோஸ்டர் (Gloster) காரை காட்டிலும் விலைமிக்கதாக கொண்டுவரப்படும் புதிய மெஜஸ்டர், 2025 ஆட்டோ எக்ஸ்போவில் முதலில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காரின் கம்பீரமான தோற்றத்தையும், நேர்த்தியான வடிவமைப்பையும் முழுமையாக காண முடிந்துள்ளது. மெஜஸ்டரின் விலை விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை; மற்றப்படி காரை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

mg majestor vs toyota fortuner

2026 ஏப்ரலில் விலை தொடர்பான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதனை தொடர்ந்து, 2026 மே முதல் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விநியோகங்கள் தொடங்கும். இந்திய சந்தையில், மெஜஸ்டர் மிகவும் பிரபலமான டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காருக்கு எதிராகப் போட்டியிட தயாராக உள்ளது. இதன்படி, பிரீமியம் எஸ்யூவி கார்கள் பிரிவுக்கு ஒரு புதுமையான போட்டியாளரை எம்ஜி கொண்டு வருகிறது.

புதிய எம்ஜி மெஜஸ்டர், அதிகப்பட்சமாக 216 ஹெச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் ட்வின்-டர்போ டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸைப் பெற்று விற்பனைக்கு வருகிறது. இதன் கேபினில் காற்றோட்டமான மசாஜ் இருக்கைகள், 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் (JBL) ஆடியோ சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

mg majestor vs toyota fortuner

பாதுகாப்புக்கு, மெஜஸ்டரில் லெவல்-2 அடாஸ் (ADAS), அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் 360-டிகிரி HD கேமரா ஆகியவை உள்ளன. ஆஃப்-ரோடு திறனுக்காக மூன்று டிஃப்ரென்ஷியல் லாக்குகள் மற்றும் தேர்ந்தெடுக்கக்கூடிய டிரைவ் மோடுகள் (2H, 4H, 4L) வழங்கப்பட்டுள்ளன.

அப்படியே டொயோட்டா ஃபார்ச்சூனர் பக்கம் சென்றால், ஃபார்ச்சூனரில் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 48-வோல்ட் அமைப்புடன் கூடிய 2.8 லிட்டர் டீசல் என்ஜின் (201 ஹெச்பி, 500 என்.எம்) உடன் 2WD/4WD ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் க்ரூஸ் கண்ட்ரோல், டூயல்-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் (ஆப்பிள் கார்ப்ளே/ ஆண்ட்ராய்டு ஆட்டோ) மற்றும் 11 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.

mg majestor vs toyota fortuner

ஃபார்ச்சூனரில் பவர்-அட்ஜஸ்டபிள் முன் இருக்கைகள், சாய்க்கக்கூடிய இரண்டாவது/ மூன்றாவது வரிசை இருக்கைகள் மற்றும் பவர்டு டெயில்கேட் போன்ற வசதிகளும் உள்ளன. பாதுகாப்பிற்காக ஏழு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டிராக்‌ஷன் கண்ட்ரோல், ISOFIX, ஏறுமுகமான பாதையில் ஏறுவதற்கான ஹில் அசிஸ்ட், டிஃபரன்ஷியல் லாக் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் போன்ற விரிவான அம்சங்கள் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அளவில் பெரியதான ஃபுல்-சைஸ் (Full-size) எஸ்யூவி கார்கள் பிரிவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் நீண்ட வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனை தங்கள் பக்கம் திருப்ப பல கார் நிறுவனங்கள் கடந்த காலங்களில் இருந்து முயற்சி செய்துள்ளன. அவ்வாறான ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முயற்சியே புதிய மெஜஸ்டர் ஆகும். ஃபார்ச்சூனரின் ஆதிக்கத்தை மெஜஸ்டர் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 12, 2026, 23:51 [IST]
English summary
New jsw mg majestor vs popular toyota fortuner full size suv cars comparison
மேலும்... #car comparison #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X