முதல் 1001 பேர் குடுத்து வெச்சவங்க... எந்த வேரியண்ட்டில் காரை வாங்குவதுனு குழம்பவே வேணாம்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிசான் கிராவைட் (Nissan Magnite) சப்-காம்பாக்ட் எம்பிவி (Sub-Compact MPV) ரக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.5.65 லட்சம் முதல் ரூ.8.93 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த எம்பிவி கார் ஐந்து வேரியண்ட்களில், முதல் 1001 வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக 'அறிமுக பதிப்பு' (Launch Edition)-இல் கிடைக்கும். இந்த சிறப்பு பதிப்பு உள்பட கிராவைட் காரில் கிடைக்கும் வேரியன்ட்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நிசான் கிராவைட் விசியா மேனுவல் (Visia MT), இது ஆரம்ப நிலை வேரியன்ட் ஆகும். வேரியன்ட்டின் பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், இது மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கும். இந்த எண்ட்ரி-லெவல் வேரியன்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், மடக்கக்கூடிய மற்றும் சாய்த்து கொள்ளக்கூடிய வசதியுடன் கூடிய இரண்டாம் வரிசை இருக்கைகள், கழற்றக்கூடிய மூன்றாம் வரிசை இருக்கைகள், இரும்பு சக்கரங்கள் போன்ற அம்சங்கள் அடங்கும்.

new nissan gravite variants-wise specifications

மேலும், இதன் அனைத்து இருக்கைகளும் கருப்பு நிற துணி உறைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், நான்கு பவர் விண்டோக்கள், ஆறு ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (Electronic Stability Program) ஆகிய முக்கியமான பாதுகாப்பு அம்சங்களும் இதில் உள்ளன.

நிசான் கிராவைட் ஆக்சென்டா (Acenta) MT, கிராவைட் வரிசையில் இது இரண்டாவது வேரியன்ட் ஆகும். இதுவும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே கொண்டுள்ளது. மேலே கூறப்பட்ட விசியா வேரியன்ட்டின் அம்சங்களுடன் கூடுதலாக, அசென்டா வேரியன்ட்டில் 8.0-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் மிரரிங் வசதி மற்றும் ஸ்டீயரிங் சக்கரத்தில் பொருத்தப்பட்ட ஆடியோ கன்ட்ரோல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கான AC வென்ட்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, இது பயணிகளின் வசதியை மேம்படுத்துகிறது. இந்த கூடுதல் அம்சங்கள் ஆக்சென்டா வேரியண்ட்டை ஒரு படி மேலே கொண்டு செல்கின்றன.

new nissan gravite variants-wise specifications

நிசான் கிராவைட் என்-கனெக்டா (N-Connecta) MT/AMT என்பது இந்த காரின் வேரியன்ட்கள் வரிசையில் இரண்டாவது உயர்நிலை வேரியன்ட் ஆகும். இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இந்த வேரியன்ட்டில் டைனமிக் கைடு லைன்களுடன் கூடிய ரிவர்ஸ் கேமரா, க்ரிஸ்டல் எட்ஜ் LED டெயில் லேம்ப்கள், பின்புற வைப்பர் மற்றும் டிஃபாகர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், 50 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்ட ரூஃப் ரெயில்கள், குளிரூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ், சென்டர் கன்சோல், பழுப்பு மற்றும் கருப்பு என இரு நிறங்களில் அப்ஹோல்ஸ்டரி ஆகியவையும் இந்த வேரியன்டின் சிறப்பு அம்சங்களாகும்.

நிசான் கிராவைட் டெக்னா (Tekna) MT/AMT, கிராவைட் வேரியன்ட்கள் வரிசையின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டான இது என்-கனெக்டா வேரியன்ட்டை விட பல மேம்பட்ட அம்சங்களை வழங்குகிறது. இதில் 7.0-இன்ச் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், LED ஹெட்லைட்கள், 15-இன்ச் டூயல்-டோன் ஃப்ளெக்ஸ் சக்கரங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், புஷ்-பட்டன் ஸ்டார்ட் சிஸ்டம், முன்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற பிரீமியம் வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

கிராவைட் டெக்னா லான்ச் எடிஷன் MT/AMT, இது காருக்கு ஒரு கூடுதல் ஆடம்பரம் சேர்க்கும் வகையில் நிசான் அறிமுகப்படுத்தியுள்ள குறுகிய கால வேரியன்ட் ஆகும். அதாவது இது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மற்ற வேரியன்ட்களில் இல்லாத ஐந்து பிரத்யேக அம்சங்களை இதுக் கொண்டுள்ளது, அவை சில மாதங்களுக்குப் பிறகு டெக்னா வேரியன்ட்டில் ஸ்டாண்டர்ட் அம்சங்களாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லான்ச் எடிஷனில் JBL சவுண்ட் சிஸ்டம், டூயல் டேஷ்கேம், காற்று சுத்திகரிப்பான், கேபினை சுற்றிலும் விளக்குகள், முதல் வரிசை இருக்கை பயணிகளுக்கான கழுத்து குஷன்கள், இரண்டாவது வரிசை இருக்கை பயணிகளுக்கான இடுப்புக் குஷன்கள் மற்றும் கவர்ச்சிகரமான பாடி கிராபிக்ஸ் ஆகியவை அடங்கும்.

கிராவைட் கார், நிசான் நிறுவனத்தின் 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் என்ஜின் உடன் வந்துள்ளது. அதிகப்பட்சமாக 71 பிஎச்பி ஆற்றலையும், 96 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (AMT) கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிசான் கிராவைட் காரை இதில் எந்த வேரியண்ட்டில் வாங்க போகிறீர்கள் என்பதை முதலில் உறுதிச் செய்துக் கொள்ளவும். நிசான் கிராவைட்டிற்கு மாருதி ஸ்விஃப்ட், மாருதி டிசையர், டாடா டிகோர், ஹூண்டாய் எக்ஸ்டர், டாடா பன்ச் மற்றும் ரெனால்ட் ட்ரைபர் போன்ற கார் மாடல்கள் சந்தையில் போட்டியாக உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 18, 2026, 5:00 [IST]
English summary
New nissan gravite variants wise specifications include limited launch edition
மேலும்... #nissan #mpv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+