பெட்ரோல் என்ஜின்தான்... ஆனா சிட்டிக்குள் ஓட்டும்போது 90% எலெக்ட்ரிக்கில்! ஹூண்டாய், கியா என எந்த காரிலும் இல்ல

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புடன், 2026ஆம் ஆண்டுக்கான புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) எஸ்யூவி கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 2012இல் இந்தியாவில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காரின் விற்பனை 2022ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, இந்த 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் மீண்டும் விற்பனைக்கு வரும் நிலையில், தற்சமயம் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா ஹைரைடர் (Toyota Hyryder) மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கியா செல்டோஸ் (Kia Seltos), டாடா சியரா (Tata Sierra) போன்ற கார் மாடல்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த பிரிவில், புதிய ரெனால்ட் டஸ்டர் பரிமாண அளவுகளிலும், என்ஜின் & கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் எந்த அளவிற்கு மற்ற மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) கார்களுக்கு சவாலாக இருக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

new renault duster suv car vs its rivals

பரிமாண அளவுகள்: புதிய ரெனால்ட் டஸ்டர் 4,343 மிமீ நீளம் கொண்டதாக உள்ளது. இது கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் (4,345 மிமீ) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் சற்றே குறைவாகவும், க்ரெட்டாவை (4,330 மிமீ) விட 13 மிமீ கூடுதல் நீளமானதாகவும் இருக்கிறது. செல்டோஸ் (4,460 மிமீ) இந்த பிரிவில் மிக நீளமான எஸ்யூவியாக உள்ளது. உயரம் 1,659 மிமீ ஆகவும், வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,657 மிமீ ஆகவும் உள்ளது.

அகலத்தைப் பொறுத்தவரை, டஸ்டர் தனித்து நிற்கிறது. 1,813 மிமீ அகலத்துடன், இது க்ரெட்டாவை (1,790 மிமீ) விட 23 மிமீ அகலமானது. மாருதி மற்றும் டொயோட்டா போட்டியாளர்களை (1,795 மிமீ) விட 18 மிமீ அகலமானது. இருப்பினும், டாடா சியரா (1,841 மிமீ) மற்றும் கியா செல்டோஸ் (1,830 மிமீ) ஆகியன டஸ்டரை விட அகலமாக உள்ளன. டஸ்டரின் வீல்பேஸ் (2,657 மிமீ) ஆனது க்ரெட்டா (2,610 மிமீ) மற்றும் ஹைரைடர் (2,600 மிமீ) கார்களை விட நீளமானது.

அதிக பூட் ஸ்பேஸ் (பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதி) மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து காரின் அடிப்பகுதி அமைந்துள்ள உயரம்): டஸ்டரின் பூட் ஸ்பேஸ் 518 லிட்டர் ஆகும், இது மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒப்பீட்டளவில், க்ரெட்டா 433 லிட்டர் மற்றும் செல்டோஸ் 447 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகின்றன.

டாடா சியராவின் 622 லிட்டர் பூட் ஸ்பேஸ் மேற்கூரை வரை அளவிடப்பட்டுள்ளது, மற்றவை பார்சல் ஷெல்ப் வரை அளவிடப்பட்டுள்ளன. 212 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், புதிய டஸ்டரின் மற்றொரு சிறப்பம்சமாகும். ஹோண்டா எலிவேட் (220 மிமீ) அடுத்த நிலையில் உள்ளது. டாடா சியரா (205 மிமீ), செல்டோஸ் (200 மிமீ) மற்றும் க்ரெட்டா (190 மிமீ) ஆகியவற்றை விட டஸ்டர் முன்னணியில் நிற்கிறது.

என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்: புதிய தலைமுறை டஸ்டர், சக்தி வாய்ந்த 1.3 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வந்துள்ளது. இது அதிகப்பட்சமாக 163 குதிரைத்திறன் மற்றும் 280 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக் கூடியது. இது இந்த பிரிவில் உள்ள பெட்ரோல் எஸ்யூவி கார் மாடல்களிலேயே மிக சக்தி வாய்ந்ததாக அமைகிறது.

new renault duster suv car vs its rivals

க்ரெட்டா மற்றும் செல்டோஸின் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 158 ஹெச்பி ஆற்றலை வழங்குகின்றன. அதேசமயம் டாடா சியராவின் டர்போ ஆப்ஷன் 160 ஹெச்பி (255 என்எம்) ஆற்றலை வழங்குகிறது. புதிய டஸ்டர் 1.0 லிட்டர், 3-சிலிண்டர் டர்போ என்ஜின் ஆப்ஷனையும் வழங்குகிறது. இது 100 குதிரைத்திறனையும், 160 என்எம் வரையிலான டார்க் திறனையும் வழங்கக்கூடியதாக உள்ளது.

புதிய டஸ்டரின் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிசிஏ (DCT) ஆகியவை அடங்குகின்றன. இருப்பினும், க்ரெட்டா மற்றும் செல்டோஸ் கார்கள் 6-ஸ்பீடு மேனுவல், IVT, IMT, DCT போன்ற பல்வேறு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகின்றன. டஸ்டரின் ஸ்ட்ராங் ஹைப்ரிட் மாடல், சந்தையில் தற்போதுள்ள மற்ற பிரபலமான கார் மாடல்களை விட அதிக ஆற்றலை வழங்கும் வகையில் உள்ளது.

டஸ்டர் ஹைப்ரீட் கார் என்ஜின் உடன் பெரிய பேட்டரியையும் கொண்டுள்ளது. இதனால் நகர சாலைகளில் 80% வரை எலெக்ட்ரிக் பவரில் காரை பயன்படுத்த முடியும் என ரெனால்ட் கூறுகிறது. டஸ்டர் ஹைப்ரிட் கார்களின் டெலிவரி 2026 தீபாவளிக்கு முன்னதாகவும், டர்போ-பெட்ரோல் வேரியண்ட்களின் டெலிவரி 2026 ஏப்ரலில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டஸ்டரில் டீசல் என்ஜின் ஆப்ஷன் எதையும் ரெனால்ட் வழங்கவில்லை. ஆனால் இது அதன் போட்டியாளர்களில் சிலவற்றில் உள்ளது. டாடா சியராவின் டீசல் என்ஜின் இங்கு மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பிரிவில், ஹோண்டா எலிவேட் (Honda Elevate) முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து எம்ஜி அஸ்டர் (MG Astor), ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவை உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ரெனால்ட் டஸ்டரின் விவரங்கள் அதை மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஒரு வலுவான போட்டியாளராக காட்டுகின்றன. ரெனால்ட் கவர்ச்சிகரமான விலையில் இந்த காரை வெளியிட்டால், இது அதன் பிரிவில் முதலிடத்தில் உள்ள க்ரெட்டாவையும், சியரா, செல்டோஸ் மற்றும் விக்டோரிஸ் போன்ற புதிய போட்டியாளர்களுக்கும் கடுமையான சவாலை ஏற்படுத்தும். ரெனால்ட் டஸ்டரின் விலைகள் வருகிற மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்.

புதிய ரெனால்ட் டஸ்டர், அதன் கூடுதல் அகலம், கணிசமான கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் தாராளமான பூட் ஸ்பேஸ் போன்ற எஸ்யூவி கார்களுக்கான அடிப்படை அம்சங்களுடன், சக்திவாய்ந்த ஹைப்ரிட் (Hybrid) என்ஜின் ஆப்ஷன் உட்பட பல்வேறு பவர்டிரெய்ன் அமைப்புகளுடன் களமிறங்குகிறது. டஸ்டரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆனது அதன் போட்டித்திறனை உறுதி செய்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 28, 2026, 5:00 [IST]
English summary
New renault duster suv car vs its rivals hyundai creta and kia seltos and tata sierra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+