5 பேர் மட்டும்தான் போக முடியும்னாலும் 10.5 லட்ச ரூபாயில் புதிய கார்! ஸ்கோடா கம்பெனி உருவாக்கத்தில் அறிமுகம்!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் (Slavia Facelift) செடான் காரை இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, காரின் வடிவமைப்பு மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Kushaq Facelift) காரில் இருந்து பல புதிய அம்சங்களை ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் பெற்று வரக்கூடும் எனத் தெரிகிறது.

நடுத்தரப் பிரீமியம் செடான் கார்கள் பிரிவில் நிலைநிறுத்தப்படும் இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை, தற்போதுள்ள ஸ்லாவியாவை விட சற்று அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்லாவியா புதுப்பிக்கப்பட்ட வெளிப்புற ஸ்டைலைப் பெறுகிறது. இதில் புதிய LED விளக்குகள், மேம்படுத்தப்பட்ட கிரில் வடிவமைப்பு, புதிய அலாய் சக்கரங்கள், பம்பர்கள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில் லேம்ப்கள் ஆகியவை அடங்கும்.

expected things in new skoda slavia facelift

கூடுதலாக, புதிய வெளிப்புற கலர் ஆப்ஷன்கள் மற்றும் ஒளிரும் ஸ்கோடா லோகோவும் அறிமுகப்படுத்தப்படலாம். இன்டீரியரைப் பொறுத்தவரை, குஷாக் காரைப் போலவே புதுப்பிக்கப்பட்ட கேபின் அமைப்பை புதிய ஸ்லாவியா கொண்டிருக்கும். புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கூகுள் (Google) அடிப்படையிலான இணைப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய ஸ்கோடா பிராண்டிங்குடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

வசதிகள் மற்றும் சௌகரியங்களைப் பொறுத்தவரை, பனோரமிக் சன்ரூஃப், பவர் மற்றும் வெண்டிலேட்டட் (Ventilated) முன் இருக்கைகள், இரட்டை-வண்ண கேபின் விளக்குகள், மேம்படுத்தப்பட்ட கிளைமேட் கண்ட்ரோல், தானாக மங்கும் பின்புறத்தை காட்டும் உட்புற கண்ணாடி (IRVM), மழை வருவதை உணர்ந்து செயல்படும் சென்சார்கள் கொண்ட வைப்பர்கள், மேம்படுத்தப்பட்ட டச் கண்ட்ரோல்கள், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின் இருக்கைக்கான கூடுதல் வசதிகள் ஆகியவை இடம்பெறலாம்.

expected things in new skoda slavia facelift

பாதுகாப்பு அம்சங்களுக்கு ஸ்கோடா தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதன்படி, மேம்பட்ட ஓட்டுநர் உதவி அம்சங்கள் (ADAS), அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்டவை புதிய ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தற்போதைய ஸ்லாவியா ஏற்கனவே 5-நட்சத்திர குளோபல் என்சிஏபி (Global NCAP) பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது, இது புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கும் ஒரு வலுவான அளவுகோலை அமைக்கிறது. என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் எந்த மாற்றமும் இருக்காது. 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின், காரின் விலை குறைவான வேரியண்ட்களில் வழங்கப்படும்.

expected things in new skoda slavia facelift

அதிகப்பட்சமாக 115 பிஎஸ் ஆற்றலையும், 178 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடிய இந்த நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் புதிய ஸ்லாவியாவில் வழங்கப்படலாம். இது இல்லாமல், விலைமிக்க டாப் வேரியண்ட்களில் அதிக சக்தி வாய்ந்த 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் இந்த புதிய காரில் வழங்கப்படும்.

150 பிஎஸ் ஆற்றலையும், 250 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் (Volkswagen Virtus) காரிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய ஸ்லாவியாவின் ஆரம்ப விலை சுமார் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் சிறப்பாக விற்பனையாகும் ஸ்கோடா காரான ஸ்லாவியா, ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்படுவது அதன் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி. புதிய அப்கிரேட்கள் (Upgrades) இருந்த போதிலும், ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.50 லட்சம் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கிறோம். ஃபோக்ஸ்வாகன் விர்டுஸ் மட்டுமின்றி, ஹோண்டா சிட்டி (Honda City) மற்றும் ஹூண்டாய் வெர்னா (Hyundai Verna) போன்ற செடான் கார்களுக்கும் ஸ்கோடா ஸ்லாவியா விற்பனையில் போட்டியாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, February 13, 2026, 5:00 [IST]
English summary
New skoda slavia facelift launch in india soon expected things price all details here
மேலும்... #skoda #sedan car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X