இவ்வளவு குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் உருவாக்கியதற்காகவே டாடா லாபத்தை அள்ள போகுது!மஹிந்திரா மட்டுமே போட்டி
2026ஆம் ஆண்டு துவங்கிய 2 மாதங்களுக்கு உள்ளாகவே டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் சியரா (Sierra) காரின் விற்பனையை துவங்கியதுடன், பன்ச் பெட்ரோல் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்சன்கள் என தொடர்ச்சியாக புதிய கார்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இதில், புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் கார் நேற்று (பிப்.20) மும்பையில் வெளியான நிலையில், குறிப்பிடத்தக்க உட்புற மற்றும் சில வெளிப்புற மேம்பாடுகளைக் பெற்றுள்ளது.
டாடா மோட்டார்ஸ் முதன்முறையாக பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் BaaS (பேட்டரி சேவை) விலை நிர்ணயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக, புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சம் + கிமீ-க்கு ரூ.2.6 ஆகக் குறைந்துள்ளது. இந்த தொகுப்பில், புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரை அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பார்ப்போம்.

BaaS இல்லாமல் பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.69 லட்சம் ஆகும். இது முன்பை விட ரூ.30,000 குறைவு. இந்த விலையில் 30 kWh பேட்டரி கிடைக்கிறது. முன்னதாக டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் 25 kWh பேட்டரி வழங்கப்பட்டது. விலைகளை பொறுத்தவரையில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் காரை தவிர்த்து மற்ற எலெக்ட்ரிக் கார்கள் அனைத்தை விடவும் பன்ச் இவி முன்னணியில் உள்ளது.
அந்த மற்ற எலெக்ட்ரிக் கார்களில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி (Mahindra XUV3XO EV), சிட்ரோன் இசி3 (Citroen eC3) அடங்குகின்றன. எம்ஜி கோமெட் இவி ஆனது விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்பது மட்டுமில்லாமல், குறைந்த பேட்டரி வாடகையையும் கொண்டுள்ளது. பரிமாண அளவுகளில் பன்ச் இவி மற்ற கார்களுக்கு நிகரானதாக உள்ளது.

ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி காரின் 2,600 மிமீ வீல்பேஸ் (Wheelbase) நீளமானதாக உள்ளது. பன்ச் இவி உயரமானது என்பதுடன், 366 லிட்டர் அளவில் பெரிய பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி அகலமானது; 17-இன்ச் சக்கரங்கள் மற்றும் 215-செக்ஷன் டயர்களை கொண்டது ஆகும்.
சிட்ரோன் இசி3 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சிறிய பேட்டரி மற்றும் குறைந்த ரேஞ்ச் உடன் ரூ.12.9 லட்சம் முதல் தொடங்குகின்றன, இதன் ஆரம்ப விலை பன்ச் இவி காரை விட ரூ.3.3 லட்சம் அதிகம் ஆகும். செயல்திறனில், 148 பிஎச்பி மற்றும் 310 என்.எம் டார்க் திறன் உடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி முதலிடம் வகிக்கிறது.

இந்த சப்-காம்பாக்ட் எஸ்யூவி காரில் 7.2 kW ஏசி சார்ஜரை மஹிந்திரா ஸ்டாண்டர்ட் அம்சமாக வழங்குகிறது; இந்த ஏசி சார்ஜர் (AC Charger) ஆனது பன்ச் இவி காரில் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ள நிலையில், சிட்ரோன் இசி3 காரில் இல்லை. டாடா பன்ச் இவி காரின் டிசி (DC) சார்ஜிங் வசதி 65 kW ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது; இது 15 நிமிடங்களில் 135கிமீ பயணத்திற்கான ரேஞ்சை சேர்க்கும்.
இந்த அனைத்து எலெக்ட்ரிக் கார்களிலும் வாகனத்தின் செயல்திறனை மாற்றியமைக்கும் டிரைவிங் மோட்கள் (Driving Modes) உள்ளன. பன்ச் இவி 9 வினாடிகளுக்கு உள்ளாகவும், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி 8.3 வினாடிகளிலும் 0-100 கிமீ/மணி வேகத்தை எட்டுகின்றன. புதிய பன்ச் இவி ஃபேஸ்லிஃப்ட் காரின் 40 kWh பேட்டரிகளுக்கு வரம்பற்ற முழு ஆயுட்கால கிமீ-க்கான வாரண்டியை டாடா வழங்குகிறது.
இவ்வாறான முழு ஆயுட்கால பேட்டரி ஆனது இந்த தொகுப்பில் நாம் பார்க்கும் வேறெந்த எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படுவது இல்லை. ஆதலால், டாடா மோட்டார்ஸின் இந்த நடவடிக்கை கார் வாங்குபவர்களுக்கு மன அமைதியை அளிக்கிறது. உற்பத்தி செலவை குறைப்பதற்காக, பன்ச் இவி காரின் 40kWh பேட்டரி வேரியண்ட்களில் பின் டிஸ்க் பிரேக்குகளுக்குப் பதிலாக டிரம் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி கார் இன்னும் டிஸ்க் பிரேக்குகளை தான் பின்பக்கத்தில் கொண்டுள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, 2026 டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் முந்தைய மாடலைப் போலவே உள்ளது. இருப்பினும், புதிய பவர் விண்டோ சுவிட்சுகள், கதவு பேட்களில் ORVM-க்கான கண்ட்ரோல்கள் மற்றும் ஹை-பீம் அசிஸ்ட் போன்ற குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் உள்ளன.
டாடா பன்ச் இவி மற்றும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி கார்கள் உடன் ஒப்பிடுகையில் சிட்ரோன் இசி3 காரில் அம்சங்கள் குறைவாகவே உள்ளது. லெவல்-2 அடாஸ் (ADAS), பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்ற மேம்பட்ட அம்சங்களை மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி கார் மட்டுமே வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் பெரிதும் கவனத்தை ஈர்த்த காரணத்தினாலே அதில் விரைவாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை மஹிந்திரா வழங்கியுள்ளது. விலை மற்றும் பல தொழிற்நுட்ப அம்சங்களில் பன்ச் இவி மிகவும் வலுவானதாக உள்ளதால், மற்ற எலெக்ட்ரிக் கார்களின் போட்டி இதனை பெரியதாக எதுவும் செய்யாது என்றே எதிர்பார்க்கிறோம். மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி கார் மட்டுமே சற்று சவாலான போட்டியாக இருக்கும். ஆனால், அதன் விலை சற்று அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications









