5-சீட்டர் காரை வாங்குறதுக்கு பதிலா 7-சீட்டரை வாங்கலாம்! விலையில் பெருசா வித்தியாசம் இல்ல!!
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய ஃபோக்ஸ்வேகன் டைரான் ஆர்-லைன் (Volkswagen Tayron R-Line) எஸ்யூவி கார் இந்த பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது தற்போது விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் (Tiguan R-Line) எஸ்யூவி காரின், ஏழு இருக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும்.
இந்த இரண்டு கார் மாடல்களுக்கும் இடையே உள்ள குறிப்பிட்ட ஒற்றுமைகளைக் கருத்தில் கொண்டு, இதில் சரியான எஸ்யூவி காரை தேர்வு செய்ய உதவும் வகையில், இவற்றின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்களை இந்த தொகுப்பில் ஒப்பிட்டு பார்க்கலாம். இந்த ஒப்பீடு, இந்த இரு கார்களில் எதை வாங்குவது என்பதில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முடிவை எடுக்க உதவும்.

பரிமாண அளவுகள்: புதிய டைரான் ஆர்-லைன், டிகுவான் ஆர்-லைன் காரை விட சற்றே பெரியது என்பதை அதன் பரிமாணங்கள் காட்டுகின்றன. டைரான் ஆர்-லைன் 4,792 மிமீ நீளமும், 1,866 மிமீ அகலமும், 1,665 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,789 மிமீ ஆகும்.
| Dimensions | 2026 Volkswagen Tayron R-Line | Volkswagen Tiguan R-Line | Difference |
|---|---|---|---|
| Length | 4,792 mm | 4,539 mm | + 253 mm |
| Width | 1,866 mm | 1,859 mm | + 7 mm |
| Height | 1,665 mm | 1,656 mm (without roof rails) | + 9 mm |
| Wheelbase | 2,789 mm | 2,680 mm | + 109 mm |
| Boot Space | 345L / 850L (with third row down) | 652 litres | + 198 litres |
டிகுவான் ஆர்-லைன் 4,539 மிமீ நீளத்திலும், 1,859 மிமீ அகலத்திலும், 1,656 மிமீ உயரத்திலும் உள்ளது. இதன் வீல்பேஸ் 2,680 மிமீ ஆகும். இதன் மூலம் டைரான், டிகுவானை விட 253 மிமீ நீளமும், 7 மிமீ அகலமும், 9 மிமீ உயரமும், 109 மிமீ கூடுதல் வீல்பேஸையும் கொண்டுள்ளது. மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட 7-சீட்டர் மாடலாக டைரான் இருப்பதால், டிகுவானை விட இது கூடுதல் நீளத்தையும் நீண்ட வீல்பேஸையும் கொண்டிருப்பது இயல்பு.

எனினும், 5-சீட்டர் மாடலான டிகுவானை விட இது அகலத்திலும், உயரத்திலும் சிறிய அளவிலேயே பெரியதாக உள்ளது. கூடுதல் பரிமாண அளவுகள் காரணமாக, டைரான் ஆர்-லைன் பெரிய பூட் ஸ்பேஸ் உடன் வருகிறது. மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கினால், 850 லிட்டர் வரை பூட்ஸ்பேஸை பெரியதாக்கி கொள்ள முடியும். மடக்காவிடின், 345 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது. இது வார இறுதி பயணங்களுக்கு மிகவும் தாராளமானது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கூற்றுப்படி, டைரான் ஆர்-லைனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கினால், பூட் ஸ்பேஸ் சுமார் 1,905 லிட்டர் கொள்ளளவு வரை விரிவடையும். அதுவே, டிகுவான் ஆர்-லைனில் பின் வரிசை இருக்கைகளை மடக்கினால் பூட் ஸ்பேஸ் 1,650 லிட்டர் கொள்ளளவில் கிடைக்கும்.

கலர் ஆப்ஷன்கள்: டைரான் ஆர்-லைன் ஏழு வெளிப்புற கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. ஆனால், டிகுவான் ஆர்-லைன் ஐந்து வண்ணங்களில் மட்டுமே கிடைக்கிறது. இரண்டு எஸ்யூவி கார்களும் நைட்ஷேட் ப்ளூ மற்றும் சிப்ரசினோ க்ரீன் உட்பட நான்கு பொதுவான கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளன.
| Color Name | 2026 VW Tayron R-Line | VW Tiguan R-Line |
|---|---|---|
| Nightshade Blue Metallic | ✔ Available | ✔ Available |
| Ultra Violet Metallic | ✔ Available | — Not Offered |
| Persimmon Red Metallic | — Not Offered | ✔ Available |
| Grenadilla Black Metallic | ✔ Available | ✔ Available |
| Dolphin Grey Metallic | ✔ Available | — Not Offered |
| Oryx White Mother of Pearl | ✔ Available | ✔ Available |
| Cipressino Green Metallic | ✔ Available | ✔ Available |
| Oyster Silver Metallic | ✔ Available | ✔ Available |
தொழிற்நுட்ப அம்சங்கள்: ஃபோக்ஸ்வேகனின் இந்த இரண்டு எஸ்யூவி கார்களிலும் பல முக்கிய தொழிற்நுட்ப அம்சங்கள் பொதுவானதாக உள்ளன. ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்கள், 19-இன்ச் டூயல்-டோன் அலாய் சக்கரங்கள், சில்வர் ஃபினிஷ் ரூஃப் ரெயில்கள், எல்இடி டெயில் லைட்கள், 30-வண்ண கேபின் விளக்குகள், பயணிகளின் கால் தொடைக்கான சப்போர்ட், 3-நிலை ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இந்த இரு கார்களிலும் இடம்பெற்றுள்ளன.
| Features | 2026 Volkswagen Tayron R-Line | Volkswagen Tiguan R-Line |
|---|---|---|
| Auto-LED headlights (Cornering) | ✅ | ✅ |
| Alloy wheels | 19-inch dual-tone | 19-inch dual-tone |
| Roof rails | Silver-finished | Silver-finished |
| LED tail lights | ✅ | ✅ |
| Upholstery | Leatherette | Fabric |
| Seating layout | 7-seater | 5-seater |
| Ambient lighting | 30-colour | 30-colour |
| Automatic climate control | 3-zone | 3-zone |
| Ventilated front seats | ✅ | ❌ |
| Power-adjustable front seats | 12-way | ❌ |
| Digital driver’s display | 10.25-inches | 10.25-inches |
| Powered tailgate | ✅ | ❌ |
| Touchscreen infotainment | 15-inches | 15-inches |
| Sound system | 11 speakers (Harman Kardon) | 8 speakers |
| 360-degree camera | ✅ | ❌ |
| Airbags / Level-2 ADAS | 9 / ✅ | 9 / ✅ |
*Data compiled based on official Volkswagen R-Line specifications.
மேலும், மசாஜ் வசதியுடன் கூடிய ஹீட்டட் முன் இருக்கைகள், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 15 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர்கள், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி, 9 ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ISOFIX குழந்தை இருக்கைக்கான மவுன்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) மற்றும் லெவல்-2 அடாஸ் (ADAS) போன்ற சிறப்பம்சங்கள் இரண்டு எஸ்யூவிகளிலும் காணப்படுகின்றன. இருப்பினும் உன்னிப்பாக பார்த்தோமேயானால், தொழிற்நுட்ப அம்சங்களின் அடிப்படையில், புதிய டைரான் ஆர்-லைன் ஒரு படி மேலே உள்ளது.

என்ஜின் சிஸ்டம்: ஃபோக்ஸ்வேகன் டைரான் ஆர்-லைன் மற்றும் டிகுவான் ஆர்-லைன் இரண்டு எஸ்யூவிகளும் ஒரே மாதிரியான என்ஜின் சிஸ்டத்துடன் வருகின்றன. இரண்டு கார்களிலுமே 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை ஃபோக்ஸ்வேகன் வழங்குகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 204 பிஎஸ் பவரையும், 320 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்) மற்றும் ஆல்-வீல்-டிரைவ் (AWD) சிஸ்டத்துடன் இணைக்கப்படுகிறது.
| 2-litre Turbo-petrol Engine Specifications | |
|---|---|
| Power | 204 PS |
| Torque | 320 Nm |
| Transmission | 7-speed DCT* |
| Drivetrain | AWD^ |
^AWD: All-Wheel Drive
விலை: 2026 ஃபோக்ஸ்வேகன் டைரான் ஆர்-லைனின் எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.48 லட்சம் முதல் இருக்கும். டிகுவான் ஆர்-லைனின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.45.73 லட்சம் ஆகும். டிகுவான் ஆர்-லைனைப் போலவே, டைரான் ஆர்-லைனும் ஒரே ஒரு டாப்-ஸ்பெக் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. 3-வரிசை எஸ்யூவி காரான டைரான் ஆர்-லைன், பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவதால், இதன் விலை கணிசமாக குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் டைரான் ஆர்-லைன் மற்றும் டிகுவான் ஆர்-லைன் இரண்டும் அடிப்படையில் ஒரே கார்கள் என்பதால், இதில் எந்த எஸ்யூவியை தேர்வு செய்தாலும், நீங்கள் தவறாக தேர்வு செய்யவில்லை. இரண்டு மாடல்களும் டிரைவிங் அனுபவத்திலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கூடுதல் நடைமுறை செயல்பாடுகளையும், மேம்பட்ட அம்சங்களையும் கருத்தில் கொண்டு, சற்று அதிகமான விலையைச் செலுத்தி டைரான் ஆர்-லைனைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனமாக இருக்கும். இது உங்கள் குடும்பப் பயணங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.


Click it and Unblock the Notifications









