ஃபார்ச்சூனரை விட 2.6 லட்ச ரூபா விலை குறைவு! ஆனாலும் டொயோட்டா கம்பெனி காரனை அடிச்சிக்க முடியாது!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் தனது புதிய டைரோன் ஆர்-லைன் (Tayron R-line) எஸ்யூவி காரை ரூ.46.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்கிற அறிமுக விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய எஸ்யூவி கார் ஆனது விற்பனையில் உள்ள ஸ்கோடா கோடியாக் எல்&கே (Skoda Kodiaq L&K) விட சற்று அதிக விலையுடனும், அதே நேரத்தில் அதிக விற்பனையாகும் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) காரை விட ரூ.2.6 லட்சம் குறைவான விலையிலும் விற்கப்படுகிறது. இப்போது, இந்த மூன்று சக்திவாய்ந்த எஸ்யூவி கார்களின் சிறப்பம்சங்களை விரிவாக ஒப்பிட்டுப் பார்ப்போம்.

பரிமாண அளவுகள்: டைரோன் ஆர்-லைன் 4,792 மிமீ நீளமும், 1,866 மிமீ அகலமும், 1,665 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 2,785 மிமீ ஆகும். மேலும் இது 19-அங்குல சக்கரங்களைக் கொண்டுள்ளது.

new volkswagen tayron r-line

ஃபார்ச்சூனர் 4,795 மிமீ நீளமும், 1,855 மிமீ அகலமும், 1,835 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் நீளம் 2,745 மிமீ ஆகவும், 18-அங்குல சக்கரங்களும் உள்ளன. இது டைரோன் ஆர்-லைன் காரை விட சற்று குறைவு ஆகும். கோடியாக் 4,758 மிமீ நீளமும், 1,864 மிமீ அகலமும், 1,679 மிமீ உயரமும் கொண்டுள்ளது.

இதன் வீல்பேஸ் நீளம் 2,791 மிமீ ஆக இருப்பதால், டைரோன் ஆர்-லைனை விட சற்று நீளமாகவும் அகலமாகவும் இருக்கிறது. இந்த மூன்று கார்களிலும் ஃபார்ச்சூனர் மிக நீளமான எஸ்யூவி ஆகும். டைரோன் ஆர்-லைன் மிக அகலமான மாடலாக இருக்கும் நிலையில், கோடியாக் மிக நீண்ட வீல்பேஸை கொண்டுள்ளது. கோடியாக் மற்றும் ஃபார்ச்சூனர் இரண்டும் 18-அங்குல சக்கரங்கள் உடன் வருகின்றன.

toyota fortuner

பூட் ஸ்பேஸ் மற்றும் வேரியண்ட்கள்: டைரோன் ஆர்-லைன் 850 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸை வழங்குகிறது. ஃபார்ச்சூனர் 716 லிட்டர் பூட் ஸ்பேஸ் இடத்தையும், கோடியாக் 786 லிட்டர் வரையிலான பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது. இதில் டைரோன் ஆர்-லைன் தான் அதிக அளவு பூட் ஸ்பேஸ் கொண்டதாக உள்ளது.

வேரியண்ட்களைப் பற்றி பேசுகையில், ஃபார்ச்சூனர் எட்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. கோடியாக் கார் ஆனது லவுஞ்ச், ஸ்போர்ட்லைன் மற்றும் லாரின் & க்ளெமென்ட் ஆகிய மூன்று வெவ்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. டைரோன் ஆர்-லைன் தற்போது ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

skoda kodiaq

வடிவமைப்பு: ஃபார்ச்சூனர் ஒரு கரடுமுரடான தோற்றத்தையும், சாலையில் ஒரு கம்பீரமான தனித்துவத்தையும் கொண்டுள்ளது. டைரோன் ஆர்-லைன் மற்றும் கோடியாக் இரண்டும் மிகவும் அதிநவீன வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. இவை இரண்டின் வடிவமைப்புகளும் ஐரோப்பிய பாணியில் அமைந்துள்ளன. இந்த மூன்று எஸ்யூவி கார்களும் ஏழு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கின்றன.

உட்புறம் மற்றும் அம்சங்கள்: ஃபார்ச்சூனர் நீண்ட தொழிற்நுட்ப அம்சப் பட்டியல் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கவில்லை. இதன் கேபின் கரடுமுரடாகவும், நடைமுறைக்குரியதாகவும், செயல்பாட்டு ரீதியாகவும் உள்ளது. டூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், 8-அங்குல தொடுதிரை, 11-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஒரேயொரு வயர்லெஸ் சார்ஜர் போன்ற போதுமான வசதிகள் இதில் உள்ளன.

கோடியாக் மற்றும் டைரோன் ஆர்-லைன் கார்கள் இரண்டும் தொழில்நுட்பம் நிறைந்த கேபின்களைக் கொண்டுள்ளன. பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS, மூன்று-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், காற்றோட்டமான மற்றும் மசாஜ் வசதியுடன் பவர் அட்ஜஸ் செய்யக்கூடிய முன் இருக்கைகள், 11-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், 10.25-அங்குல விர்ச்சுவல் காக்பிட் (டிஜிட்டல் கிளஸ்டர்), பார்க் அசிஸ்ட்+ போன்ற அம்சங்கள் டைரோன் ஆர்-லைனில் கிடைக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் புதிய ஃபோக்ஸ்வேகன் டைரோன், டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஸ்கோடா கோடியாக் கார்களுக்கு இடையேயான அவற்றின் தோற்றம், பரிமாண அளவுகள், தொழிற்நுட்ப அம்சங்களை பற்றி மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இன்னும் முழு விபரங்களை ஒப்பிட்டு பார்த்தால் லிஸ்ட் நீண்டுக் கொண்டே போகும்.

More from DriveSpark

Article Published On: Friday, February 20, 2026, 5:00 [IST]
English summary
New volkswagen tayron r line vs toyota fortuner vs skoda kodiaq car comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X