ஃபாஸ்டேக் கார்டுல ஏகப்பட்ட திருட்டு வேலை நடக்குது! உங்க காசை பத்திரம வச்சுக்க இதை ஃபாலோ பண்ணுங்க!
ஃபாஸ்டேக் கார்டில் வழங்கப்படும் வருடாந்திர பாஸ் முறையில் மிகப்பெரிய அளவில் மோசடி நடப்பதாக மத்திய சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த மோசடியை கண்டறிவது எப்படி? இதில் சிக்காமல் தப்பிப்பது எப்படி ஒரிஜனல் வெப்சைட்டை எப்படி கண்டறிவது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
நீங்கள் சொந்தமாக வாகனம் வைத்திருக்கிறீர்களா உங்களுக்கு ஃபாஸ்ட்டேக் கார்டு கட்டாயம். தனி நபர் வாகனங்களுக்கு சுங்கட்டணத்தில் தள்ளுபடி வழங்கும் வகையில் வருடாந்திர பாஸ் முறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி முதலில் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டால் வருடத்தில் 200 முறை முறை சுங்கசாவடிகளை கடந்து செல்ல முடியும். இதனால் ஒரு முறை சுங்கசாவடியை கடக்க வெறும் ரூ15 தான் செலவாகிறது. இது வழக்கமான செலவிலிருந்துபல மடங்கு சேமிப்பை வழங்குகிறது. இது நிச்சயம் உதவிகரமான விஷயம் தான்.

இந்நிலையில் இந்த வருடாந்திர பாஸ் முறைய வழங்குவதில் சில மோசடிகள் நடந்து வருநதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி போலியான இணைய தளங்கள் மூலம் பாஸ் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு பணத்தை கொள்ளையடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில இணையதளங்கள் ஃபாஸ்டேக் கார்டில் வருடாந்திர பாஸ் முறையை ஆக்டிவேட் செய்துதருவதாக விளம்பரம் செய்கின்றனர். அந்த வெப்சைட்களை பார்ப்பதற்கு தேசிய நெடுஞ்சாலைதுறையின் அதிகாரப்பூர்வ வெப்சைப் போலவே இருக்கும். இங்கு சென்று வாகனம் குறித்த தகவல்களை அளித்து அதன் மூலம் பணம் செலுத்த சொல்லப்படுகிறது. இப்படியாக பணம் செலுத்தினால் பணம் போய்விடுகிறது. பாஸ் வருவதில்லை.

இது முற்றிலுமாக ஒரு மோசடி வேலையாக நடக்கிறது. சமீபத்தில் இப்படி மோசடியில் சிக்கிய பலர் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு நெடுஞ்சாலை துறையே இந்த விழிப்புணர்வை வழங்கியுள்ளது. நீங்கள் வருடாந்திர பாஸ் வாங்க வேண்டும் என்றால் அதிகாரப்பூர்வ வெசப்சைட்டிற்கு செல்லுங்கள்.
நீங்கள் இந்த பாஸை வாங்க வேண்டும் என்றால் அந்த வெப்சைட்டில் URL முழுமையாக சோதனை செய்யுங்கள். எல்லாம் உறுதி செய்த பிறகு பணம் செலுத்துங்கள் சிறிது சந்தேகம் இருந்தால் கூட பணம் செலுத்த வேண்டாம். அருகில் உள்ள விபரம் தெரிந்தவர்களிடம் தெளிப்படுத்திக்கொள்ளுங்கள்.
நீங்கள் வெப்சைட்டை தேர்வு செய்யும் போது கூகுள் போன்ற சர்ச் இன்ஜின் களில் பணம் கொடுத்து முதலில் வருவது போல விளம்பரம் செய்யப்பட்ட லிங்க்களில் நுழையாதீர்கள். இது ஸ்கேம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இப்படியாக நீங்கள் பணம் செலுத்தும் போது நெடுஞ்சாலைதுறை தரப்பில் இருந்து ஓடிபி, கார்டு தகவல்கள், தனி நபர் தகவல்கள் எதுவும் கேட்படமாட்டாது. இது எல்லாம் கேட்ப்பட்டால் உடனடியாக அந்த வெப்சைட்டிலிருந்து வெளியேறிவிடுங்கள்.இது முற்றிலுமாக ஒரு மோசடி வேலையாக நடக்கிறது. சமீபத்தில் இப்படி மோசடியில் சிக்கிய பலர் இருக்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு நெடுஞ்சாலை துறையே இந்த விழிப்புணர்வை வழங்கியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது போன்று நீங்கள் ஏமாற்றமடைந்தீர்கள் என்றால் உடனடியாக சைபர் கிரைம் துறையில் புகார் அளியுங்கள். அப்பொழுது தான் அரசுக்கு இப்படியான முறைகேடு பற்றி தெரியவரும் நீங்கள் இழந்த பணத்தை திரும்ப பெறவும் வாய்ப்பு கிடைக்கும். இது போன்று ஃபாஸ்டேக் கார்டிற்கான வருடாந்திர பாஸ் வாங்கும் போது விழிப்புணர்வுடன் ஏமாறாமல் இருங்கள்.


Click it and Unblock the Notifications








