பெட்ரோல் இல்லாமலும் இயங்கும் டூ-வீலர்கள்! இந்தியாவில் மட்டும் இத்தனை கிடைக்குதா!!
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) எந்த அளவிற்கு வேகமாக பிரபலமாகி வருகின்றன என்பதை நான் சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு சாலையில் எங்கு பார்த்தாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களாக தான் காட்சித் தருகின்றன. ஆனால் அதேநேரம், வாங்கினால் வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர் தான் என இருப்போரும் இருக்கதான் செய்கின்றனர்.
அத்தகையவர்களுக்காகவே, ஹைப்ரீட் (Hybrid) மற்றும் சிஎன்ஜி (CNG) 2-வீலர்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை வழக்கமான பெட்ரோல் 2-வீலர்களை கட்டிலும் சிறந்த மைலேஜை வழங்கி, வாகனத்தை பயன்படுத்துவதற்கான செலவை குறைக்கின்றன. அவ்வாறான, ஹைப்ரீட் மற்றும் சிஎன்ஜி பவர்டிரெயின் கொண்ட ஐந்து 2-வீலர்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

யமஹா ஃபேஸ்சினோ 125 எஃப்.ஐ ஹைப்ரீட் (Yamaha Fascino 125 Fi Hybrid): இந்த யமஹா ஹைப்ரீட் ஸ்கூட்டரில் 125சிசி ப்ளூ கோர் ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்படுகிறது. பெட்ரோலில் இயங்கும் இந்த என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்படும் ஸ்மார்ட் மோட்டார் ஜெனரேட்டர் (SMG) ஆனது ஸ்கூட்டருடன் வழங்கப்படும் பேட்டரியை சார்ஜ் செய்ய பயன்படுகிறது. இதன் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 8.2 பிஎஸ் மற்றும் 10.3 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ளது.
யமஹா ரே இசட்.ஆர் 125 எஃப்.ஐ ஹைப்ரீட் (Yamaha Ray ZR 125 Fi Hybrid): மேலே கண்ட ஃபேஸ்சினோவை விட ஸ்போர்டியான ஸ்கூட்டரை விரும்புவோருக்கு இது ஏற்றதாக இருக்கும். இதிலிலும் அதே 125சிசி ப்ளூ கோர் ஹைப்ரீட் என்ஜின் தான் எஸ்.எம்.ஜி டெக்னாலஜி உடன் வழங்கப்படும் நிலையில், மைலேஜிலும் இரண்டிற்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. இந்த இரு யமஹா ஹைப்ரீட் ஸ்கூட்டர்களும் தோற்றத்தில் தான் வித்தியாசம் அடைகின்றன.

பஜாஜ் ஃப்ரீடம் 125 சிஎன்ஜி (Bajaj Freedom 125 CNG): இந்தியாவின் முதல் சிஎன்ஜி பைக்கான இது பை-ஃபியுல் (Bi-fuel) சிஸ்டத்துடன் உருவாக்கப்படுகிறது. அதாவது, சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கக்கூடியதாக இந்த பைக் உள்ளது. பிரதானமாக இது சிஎன்ஜி பைக் என்றாலும், 2 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் உள்ளது.
யமஹா எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ ஹைப்ரீட் (Yamaha FZ-S Fi Hybrid): இந்தியாவின் முதல் ஹைப்ரீட் பைக்கான இதில் 149சிசி ஏர்-கூல்டு SOHC 2-வால்வு என்ஜின் எஸ்.எம்.ஜி டெக்னாலஜி உடன் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 12.4 பிஎஸ் மற்றும் 13.3 என்.எம் டார்க் திறனை வழங்கக்கூடிய இந்த என்ஜின் + மோட்டார் சிஸ்டத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

யமஹா எஃப்.இசட்-எக்ஸ் ஹைப்ரீட் (Yamaha FZ-X Hybrid): மேலே கண்ட எஃப்.இசட்-எஸ் பைக்கின் அதே என்ஜின் மற்றும் பேட்டரி சார்ஜ் ஜெனரேட்டர் உடன் வரும் நியோ-ரெட்ரோ ஸ்டைல் யமஹா பைக் ஆக இது விளங்குகிறது. இதனால், பவர்டிரெயின் சிஸ்டத்தில் இருந்துவரும் பவர் மற்றும் டார்க் திறனிலும் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகரித்துவரும் பெட்ரோல் செலவை தவிர்க்கவும், மாசற்ற பசுமையான போக்குவரத்தை பெறவும் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் மட்டுமே ஒரு ஆப்ஷன் என்றில்லை. இவ்வாறான ஹைப்ரீட்/ சிஎன்ஜி இருசக்கர வாகனங்களும் இருக்கின்றன. பெட்ரோல் மற்றும் அதற்கு மாற்றான எரிபொருள் என இரண்டிலும் இயங்கக்கூடியதாக பைக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஏற்றது.


Click it and Unblock the Notifications









