யூடியூபில் வீடியோ போட்டே கோடி கணக்குதுல சம்பாதிச்சிட்டாங்க போல! கார் மட்டும் இவ்வளவு லட்சமா?
சமீப காலமாக சமூக வலைதளங்களில் தம்பதிகளாக இணைந்து வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாக மாறும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. இப்படியாக பிரபலமான நபர்கள் தான் பின்பார்ம் லைப் ஸ்டைல் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தி வரும் தம்பதியினர் இவர்கள் பிரபலமானது மட்டுமல்லாமல் சொந்தமாக ஹேர் ஆயில் தயாரிப்பு ஒன்றை உருவாக்கி ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் நன்கு சம்பாதித்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் 2025 ஆம் ஆண்டு மே மாதம் இவர்கள் ஒரு காஸ்ட்லியான லிமிடெட் எடிசன் காரை புக் செய்தார்கள். அதாவது ஜீப் நிறுவனத்தின் விராங்குளர் வில்லிஸ் 41 என்ற ஸ்பெசலிஸ்ட் காரை புக் செய்தார்கள். இந்த கார் உலகம் முழுவதும் 30 வாடிக்கையாளர்களால் மட்டுமே வாங்க முடியும் என்ற சூழ்நிலை நிலவிய நிலையில், இதில் ஒரு காராக இவர்கள் இந்தியாவில் இந்த காரை இறக்குமதி செய்து வாங்கியுள்ளார்கள்.

இந்த காரை இவர்கள் ஆறு மாதத்துக்கு முன்னர் புக் செய்து இருந்தாலும் தற்போது தான் இந்த காரின் டெலிவரி துவங்கியுள்ளது. இவர்கள் இந்த காரை டெலிவரி எடுத்துள்ளார்கள். அதன் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இவர்கள் வாங்கிய ஜீப் விராங்கிளர் கார் என்பது ஒரு ஸ்பெஷல் எடிசன் காராகும். இந்த கார் ஜீப் விராங்குளர் காரின் டூபிகான் என்ற வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 71 என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த காரில் ஏற்கனவே இருக்கும் கலர் ஆப்ஷன் உட்பட ஸ்பெஷல் எடிஷனுக்காக 41 கிரீன் என்ற கலர் ஆப்ஷனும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த கார் ஒரு ஸ்பெஷல் எடிசன் கார்வதற்காக இதில் சில கூடுதல் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் பவர்டு சைடு ஸ்டெப்ஸ் அதாவது பக்கவாட்டில் உள்ள படிக்கட்டை பவர்டு படிக்கட்டாக வழங்கியுள்ளார்கள். இதுபோக கிராப் ஹேண்டில், ஃப்ளோர் மேட், முன்பக்கமும் பின்பக்கமும் டேஷ் கேமராக்கள் உள்ளிட்ட சில முக்கியமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இன்ஜின் அம்சங்களில் எந்த மாறுபாடும் இல்லை ரெகுலர் காரில் உள்ள அதே 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. இது 266 பிஎச்பி பவரையும் 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
நாம் முன்னரே சொன்னத படி இந்த கார் ஒரு லிமிடெட் எடிஷன் கார் என்பதால் இந்தியா முழுவதும் 30 கார்கள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. அதில் ஒரு காராக இவர்கள் இந்த காரை வாங்கியுள்ளார்கள். இது குறித்து ஏற்கனவே அவர்கள் வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது இந்த காரை டெலிவரி எடுத்து அது குறித்த வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூக வலைதள பிரபலங்கள் பலர் ஆட்டோமொபைல் விரும்பிகளாக இருந்து இந்த காரை தேர்வு செய்து வாங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இந்த கார் இவர்களுக்கு ஒரு தனித்துவமான அந்தஸ்தை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். சமூக வலைதளங்களில் தனித்துவமான விருப்பத்தை எதிர்பார்க்கும் மக்கள் அதிகம் இருப்பதால் இந்த கார் நிச்சயம் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









