இனி விபத்துல ஒரு உசுருகூட போகாது! காசே இல்லாம உசுர காப்பாத்த புதிய திட்டம்!
சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணத்தை குறைப்பதற்காக தற்போது மத்திய அரசு PM RAHAT என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி இனி சாலைகளில் விபத்து நடந்தால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கலாம். இந்த திட்டம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துக்களின் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழிக்கின்றனர். இவர்கள் உயிரிழிப்பதற்கு சரியான நேரத்தில் இவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காதது முக்கிய காரணமாக இருக்கிறது. இப்படியாக மருத்துவஉதவி கிடைக்காமல் போவதற்கு பணம் மிகப்பெரிய தடையாக உள்ளது. விபத்து நடந்தவுடன் அதில் காயமடைந்தவர்கள் உயிரை காப்பாற்ற பணம் தேவைப்படுமே என்ற பயம் அவர்களை மருத்துவத்திற்கு அழைத்து செல்ல கால தாமதத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் பலர் உயிரிழக்கிறார்கள். இந்நிலையில் விபத்து நடந்தால் மக்கள் பணம் பற்றி கவலையின்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு PM RAHAT என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் RAHAT என்பதற்கு Road Accident Victim Hospitalization and Asssured Treatment என அர்த்தகம் ஆகும்.
இதன்படி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ1.5 லட்சம் வரை பணம் இல்லாமல் மருத்துவ உதவியை வழங்கும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விபத்து நடந்தவுடன் விபத்தில் சிக்கியவர்களின் உயிரை காப்பாற்ற வழங்கப்படும் சிகிச்சை ஆகும். இதனால் விபத்தில் சிக்கியவர்கள் பணம் குறித்து வகலைப்பட தேவையில்லை.

இந்த திட்டம் கேஸ்லெஸ் முறையில் வழங்கப்படும். இதற்காக அதிகபட்சம் ரூ1.5 லட்சம் வரை வழங்கப்படும். விபத்து நடந்த 7 நாட்கள் வரை கவரேஜ் இருக்கும். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், சிட்டி சாலைகள் என எந்த சாலையில் விபத்து நடந்தாலும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.
இந்த திட்டம் எப்படி வேலை செய்யும் என்றால் விபத்து நடந்தவுடன் விபத்தில் சிக்கியவரோ, அருகில் உள்ளவரோ அல்லது விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற நினைப்பவரோ உடனடியாக 112 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். அவர்கள் விபத்து குறித்து, விபத்து நடந்த இடம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை, ஆம்புலன்ஸ், போலீஸ் ஆகியோருக்கு 112 உதவி மையத்திலிருந்து தகவல் சென்றுவிடும்.

சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் சென்று அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் அங்கு வைத்து இவர்களுக்கு சிகச்சை வழங்கப்பட்டு அவர்களது உயிர் காப்பாற்றப்படும்.
இப்படியாக விபத்தில் சிக்கியவர்களுக்கு வழங்கப்படும் பணம் மத்திய அரசின் மோட்டார் வாகன விபத்து நிதியிலிருந்து வழங்கப்படும். ஒருவேலை விபத்தில் ஈடுபட்ட வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தால் அந்நிறுவனம் அதற்கான பணத்தை வழங்கும். வாகனம் இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை என்றாலோ அல்லது விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றுவிட்டாலோ அதற்கான பணத்தை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும் 10 நாட்களுக்குள் இந்த பணம் மருத்துவமனைக்கு சென்றுவிடும். இதனால் எந்த தாமதமும் இல்லாமல் மருத்துவ உதவி கிடைக்கும்.
இதனால் சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கைகணிசமாக குறையும். மக்கள் உடனடியாக நிதிஉதவியை தேடி அழைய வேண்டியதில்லை. இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது நேரடியாக 112 என்ற அவசர உதவி எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாலை விபத்துக்களின் நடக்கும் மரணங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறது. இந்த திட்டம் நிச்சயம் பல உயிர்களை காப்பாற்றும் என எதிர்பார்க்கலாம். நிச்சயம் வாகன விபத்துக்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஒவ்வொரு தனி மனிதனிற்கும் ஏற்படுத்துகிறது. இதை இந்த திட்டம் நிச்சயம் மிகப்பெரிய அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









