துரேந்தர் படம் பார்த்தவர்கள் சொல்றது உண்மை இல்ல! பாகிஸ்தானில் இந்த பைக்கை வாங்கனும்னா சொத்தை விற்கனும்!

துரேந்தர் (Dhurandhar) திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரேந்தர்: தி ரிவேஞ்ச்-க்கு புக்கிங்குகள் குவிந்து வருகின்றன. எளிதாக ரூ.1,000 கோடி வசூலை தாண்டி, இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக பாக்ஸ் ஆபிஸ் (Box Office) வசூலை ஈட்டிய திரைப்படமாக துரேந்தர் 2ஆம் பாகம் இடம்பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஆக்‌ஷன் திரைப்படங்கள் என்றாலே கார்களும், பைக்குகளும் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் என்பதை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். துரேந்தர் முதல் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட கார் & பைக்குகளை பற்றி ஏற்கனவே நமது தளத்தில் பார்த்திருந்தோம். இருப்பினும், படத்தின் கதாநாயகன் ரன்வீர் சிங் (Ranveer Singh) பயன்படுத்தும் பைக் என்ன என்பதில் இன்னமும் பலருக்கு சந்தேகம் உள்ளது.

ranveer singh bike in dhurandhar movie

பலரும் இதனை மாடிஃபை (Modify) செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக் என்கின்றனர். ஆனால், உண்மையில் இது 1200சிசி டிரையம்ப் (Triumph) பைக் என சொன்னால் நம்ப முடிகிறதா... அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

துரேந்தர் முதல் பாகத்தில், ரெஹ்மான் டகெயிட் (Rehman Dakait) கதாபாத்திரத்தில் நடித்த அக்சய் கண்ணா (Akshay Khanna) இந்த பைக்கை கதாநாயகன் ரன்வீர் சிங்கிற்கு பரிசளித்து இருப்பார். படத்தின் கதைக்களத்திற்கு ஏற்ப இந்த பைக் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் இருப்பதுபோல் காட்டியிருப்பார்கள். ஹீரோவின் உடலமைப்பிற்கும் பைக் கச்சிதமாக இருக்கும்.

ranveer singh bike in dhurandhar movie

இதனாலேயே படத்தின் இடைவேளை வரையில் அந்த பைக்கை ரன்வீர் சிங் அதிகமாக பயன்படுத்துவதை பார்த்திருப்பீர்கள். குறிப்பாக, கதாநாயகி உடனான காதல் காட்சிகளில் இந்த பைக்கை அதிகமாக பார்க்க முடியும். திரையரங்கில் இந்த காட்சிகளை பார்க்கும்போதே இது மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்காக இருக்கலாம் என சில பார்வையாளர்கள் கூறினர்.

சமூக வலைத்தளங்களிலும் இதையே பலரும் தெரிவித்து இருந்தனர். ஏனெனில், படத்தில் எந்த காட்சியிலும் பைக்கை நெருக்கமாக காட்டவில்லை. மேலும், பைக்கில் இருந்து லோகோவையும் நீக்கி, ஹீரோவின் மாஸ்க்கு ஏற்ப வேறொரு லோகோவை பொருத்தியிருந்தனர். எல்லாவற்றையும் விட முக்கியமாக, பைக்கில் சிறு சிறு மாடிஃபிகேஷன்கள் (Modifications) செய்யப்பட்டு இருந்தன.

இவை எல்லாவற்றையும் பார்த்த பின்னர், இது மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக் என்று ரசிகர்கள் எண்ணியதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், உண்மையில் இது டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் பொன்னேவில்லே டி120 (Triumph Bonneville T120) ஆகும். அதுவும், இந்த டிரையம்ப் பைக்கையும் கொஞ்சம் மாடிஃபை செய்தே பயன்படுத்தி உள்ளனர்.

பைக்கின் பின்பக்க மட்கார்டை நீக்கிவிட்டு, இருக்கையை மாற்றி, பைக்கில் பளபளப்பான பகுதிகள் அனைத்தையும் கருப்பு நிறத்திற்கு மாற்றி பயன்படுத்தி உள்ளனர். பொன்னேவில்லே டி120 பைக் இந்தியாவில் இப்போதும் விற்பனையில் உள்ளது. ஸ்டாண்டர்ட் என்கிற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே இந்த டிரையம்ப் பைக் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.12.35 லட்சமாக தற்சமயம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் பொன்னேவில்லே டி120 பைக் பாகிஸ்தானில் விற்பனையில் இருந்ததே கிடையாது. ஏனெனில், பாகிஸ்தானில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்திற்கு டீலர்ஷிப் ஷோரூமே கிடையாது. இருப்பினும் சிலர் பாகிஸ்தானில் இந்த 1200சிசி டிரையம்ப் பைக்கை பயன்படுத்துகின்றனர். எப்படியென்றால், வெளிநாட்டில் வாங்கி பாகிஸ்தானுக்கு கொண்டுவந்து பயன்படுத்துகின்றனர்.

ஆனால், இந்த லாஜிக்கை எல்லாம் பார்த்தால் எந்த திரைப்படத்தையும் பார்க்க முடியாது. ரன்வீர் சிங்கின் கட்டுக்கோப்பான உடலமைப்பிற்கும், திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் செல்வாக்கை உயர்த்தி காட்டவும் பொன்னேவில்லே டி120 பைக் கச்சிதமாக உள்ளது. துரேந்தர்: தி ரிவேஞ்ச் என்கிற இரண்டாம் பாகத்திலும் இந்த டிரையம்ப் பைக்கை ரன்வீர் சிங் அதிகமாக பயன்படுத்தி உள்ளார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, March 19, 2026, 16:55 [IST]
English summary
Ranveer singh used modified bike in dhurandhar movie check all details here
மேலும்... #celebrity bike #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+