சாதாரண டாக்ஸியில் வந்து இறங்கிய விஜய் மனைவி... அவ்ளோ சொத்து இருந்தும் வாடகை கார்ல வர்றாங்க...
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 18.70 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 32.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், டாக்ஸியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரபல நடிகர், நடிகைகள் கூட ஒரு சில சமயங்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் டாக்ஸியில் பயணம் செய்து வருகின்றனர். இதை நிரூபிக்கும் வகையில், பிரபல நடிகை ஒருவர், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் டாக்ஸியை தற்போது பயன்படுத்தியுள்ளார்.

தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இவரது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
Instant Bollywood இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியாகியுள்ள இந்த வைரல் வீடியோவில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் டாக்ஸியில் இருந்து ராஷ்மிகா மந்தனா கீழே இறங்கி விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வைரல் வீடியோ, மும்பை விமான நிலையத்தில் (Mumbai Airport) எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்திற்கு பிரபலங்கள் வாடகை காரில் வருவது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah) கூட தனது குடும்பத்துடன், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டாக்ஸியில், மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
ராஷ்மிகா மந்தனா தற்போது வாடகை காரில் மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தாலும் கூட, அவரிடம் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் சி-க்ளாஸ் (Mercedes Benz C-Class), ஆடி க்யூ3 (Audi Q3) மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) போன்ற விலை உயர்ந்த கார்கள் எல்லாம், ராஷ்மிகா மந்தனாவிடம் இருக்கின்றன.
ராஷ்மிகா மந்தனா மட்டுமல்லாது, அவரது கணவரும், நடிகருமான விஜய் தேவரகொண்டாவின் (Vijay Deverakonda) கார் கலெக்ஸனும் (Car Collection) மிகப்பெரியதுதான். ரேஞ்ச் ரோவர் (Range Rover), வால்வோ எக்ஸ்சி90 (Volvo XC90), பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) மற்றும் ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang) போன்ற கார்கள் எல்லாம், விஜய் தேவரகொண்டாவிடம் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் விலை உயர்ந்த கார்கள் எல்லாம் இருந்தாலும் கூட, மிகவும் எளிமையான டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரில் ராஷ்மிகா மந்தனா மும்பை விமான நிலையத்திற்கு வந்தது திரையுலக ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா மந்தனா போன்ற பிரபலங்களுக்கு டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மிகவும் எளிமையான ஒரு கார்தான். இருப்பினும் இது சௌகரியமான பயணத்தை வழங்க கூடியது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications