சின்ன பசங்களை எல்லாம் புடிச்சுட்டாரு! விஜய் வந்தா கூட இப்படி கூட்டம் கூடாது! 3 கோடி ரூபா கார்ல போனது அவரா!

இந்தியாவில் நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்கள் பொது இடங்களுக்கு வந்து செல்லும்போது பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அவர்களை காண பெரிய அளவில் கூட்டம் கூடுகிறது. இதனால் கரூர் போன்ற இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டதை கூட, கடந்த காலங்களில் நாம் பார்த்துள்ளோம்.

அத்துடன் பிரபலங்கள் உடன் கை குலுக்குவதற்காகவும் மற்றும் செல்ஃபி எடுப்பதற்காகவும், ரசிகர்கள் மிகவும் ஆபத்தான காரியங்களில் ஈடுபடுகின்றனர். இந்த வரிசையில் பிரபலம் ஒருவர், மிகவும் விலை உயர்ந்த காரில் வந்தபோது, சிறுவர்கள் சிலர், அவருடன் கை குலுக்கவும், செல்ஃபி எடுக்கவும் முயன்றனர்.

Rohit Sharma Spotted In New Land Rover Range Rover

அப்போது காரின் ஜன்னல் கண்ணாடி மேலே ஏறி கொண்டிருந்தது. இதனால் சிறுவர்களின் கைகள் நசுங்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த சிறுவர்கள் சரியான நேரத்தில் கைகளை வெளியே எடுத்து கொண்டனர். இருப்பினும் சிறுவர்களின் இந்த செயல், அந்த பிரபலத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் அவர்களை கண்டிப்பது போன்ற செய்கையை அந்த பிரபலம் காட்டி சென்றார். அந்த வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. Instant Bollywood யூடியூப் (YouTube) பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் (Land Rover Range Rover) கார் ஆகும்.

Rohit Sharma

இன்னும் சரியாக சொல்வதென்றால், இது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காரின் 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட ஹெச்எஸ்இ (HSE) வேரியண்ட் ஆகும். LWB என்று சுருக்கமாக அழைக்கப்படும் Long Wheel Base மாடலில் இந்த கார் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலையே (Ex-Showroom Price) 2.31 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 3 கோடி ரூபாய் வரும். இவ்வளவு விலை உயர்ந்த காரில் பயணம் செய்தது யார்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

அவர் இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரான ரோஹித் ஷர்மா (Rohit Sharma) ஆவார். அவர் தனது காரில் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான், நாங்கள் மேலே குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் நல்ல வேளையாக பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை. இந்த வைரல் வீடியோவில் நாம் பார்க்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார், ரோஹித் ஷர்மாவின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதம், ரோஹித் ஷர்மா இந்த காரை பதிவு செய்துள்ளார். ரோஹித் ஷர்மாவிடம் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் தவிர, இன்னும் ஏராளமான விலை உயர்ந்த கார்கள் உள்ளன. உண்மையில் மற்ற பெரும்பாலான கிரிக்கெட் வீரர்களை போலவே, ரோஹித் ஷர்மாவின் கார் கலெக்ஸனும் (Car Collection) மிகப்பெரியது.

இதில், லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்எஸ் 400டி 4மேட்டிக் (Mercedes-Benz GLS 400d 4MATIC), பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3), பிஎம்டபிள்யூ எம்5 எஃப்1 எடிசன் (BMW M5 F1 Edition) போன்ற கார்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவற்றுடன் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற கார்களையும் கூட, ரோஹித் ஷர்மா வைத்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பிரபலங்களை பார்க்கும் ஆர்வத்தில், ஆபத்தான காரியங்கள் எதிலும் ரசிகர்கள் ஈடுபட கூடாது என நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒரு சில ரசிகர்கள், பிரபலங்கள் பயணிக்கும் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்குவதை, தமிழ்நாட்டில் சமீப காலமாக காண முடிகிறது. இது போன்ற ஆபத்தான காரியங்களை எல்லாம் உடனடியாக நிறுத்தி கொள்வது நல்லது.

More from DriveSpark

Article Published On: Monday, January 5, 2026, 17:28 [IST]
English summary
Rohit sharma spotted in new land rover range rover viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+