சுத்தியல் வச்சு சைலென்சரை உடைத்த போலீஸ்! வைரலாகும் வீடியோ!
வாகனங்களை மாடிஃபிகேஷன் செய்வது சட்டப்படி குற்றம். மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகனம் மாடிஃபிகேஷன் ஸ்டேஷன் தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருக்கிறது. வாகனம் டாக்டரியிலிருந்து சான்றிதழ் பெற்று எப்படி வருகிறதோ அப்படியே பயன்படுத்த வேண்டும். ஆனால் அதையும் மீறி சிலர் அதை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். இப்படியாக நடந்த ஒரு சம்பவத்தில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட சைலென்சரை சுத்தியல் கொண்டு ஒரு டிராபிக் போலீஸ் உடைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகனங்களில் மாடிஃபிகேஷன் செய்வது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமான விஷயமாகும் குறிப்பாக டூவீலர்களில் பலர் அதிக சுத்தம் வரவேண்டும் என தங்கள் சைலன்ஸர்களை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்கில் பயன்படுத்தும் பலர் தான் இப்படியான மாடிஃபிகேஷன்களை செய்து வருகிறார்கள். இது குறித்து போலீசார் அவ்வப்போது சோதனைகள் நடத்தினாலும் மக்கள் மத்தியில் இந்த மாடிக்கேஷன் செய்யும் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் என்ற பகுதியில் போக்குவரத்து போலீசார் இப்படியாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை தணிக்கை செய்வதற்காக ஆய்வில் இருந்தனர். அப்பொழுது அந்த பகுதி வழியாக ராயல் என்ஃபீல்டு பைக்கில் வந்த ஒருவர் அதிக சத்தம் எழுப்பும் எக்ஸாஸ்ட் உடன் வந்ததை கண்டுபிடித்து அவரை நிறுத்தினார்கள். மேலும் இப்படியாக பொருத்தப்பட்ட எக்ஸாஸ்ட் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது.இதற்காக அவர்கள் சுத்தியலை கொண்டு அந்த எக்ஸாஸ்டை உடைத்தனர். இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இப்படியாக எக்ஸாஸ்ட் அதிக சத்தம் வரும் வகையில் வெளி மார்க்கெட்டில் வாங்கி பொருத்தினால் அதை போலீசார் கைப்பற்றி அதை முழுமையாக அளிக்கும் சம்பவத்தை இதற்கு முன்னர் பல இடங்களில் பார்த்திருக்கிறோம். மொத்தமாக வரிசையாக வைத்து அளிப்பதை பார்த்திருக்கிறோம். இந்த முறை நேரடியாக போலீசாரே கையில் சுத்தியலை எடுத்து அதை சேதப்படுத்தி பயன்படுத்த முடியாத வகையில் அதை மாற்றி ஒரு நபரிடம் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடும் வாகனங்களில் இருந்த இவ்வளவு அளவு சத்தம் தான் வெளியே வரவேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது அதற்கு ஏற்றார் போல் தான் வாகன தயாரிக்கும் நிறுவனங்கள் சைலென்சர்களை மாற்றியமைக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் பழைய தயாரிப்புகளாக இருக்கும்போது அதிக சத்தம் எழுப்பும் வாகனங்களாக இருந்தன. தற்போது அந்த சத்தம் எல்லாம் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பழைய சத்தத்தை விரும்பும் வாடிக்கையாளர்கள் சிலர் வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் சட்டவிரோதமான செயல்களை வாங்கி தங்கள் வாகனங்களில் பொருந்தி வருகிறார்கள். இதன் காரணமாக தான் இது அப்புறப்படுத்தப்படுகிறது. பொதுவாக வாகனங்களில் இப்படியாக செயலாட்சிகளை மாட்டி வரும்போது அவர்களுக்கு அபராதம் விதிப்பது தான் வழக்கம். ஆனால் எவ்வளவு அபரதாரம் விதித்தாலும் மக்கள் மத்தியில் இருந்து விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதற்காக அவர்களுக்கு புரியும் வகையில் இதை முற்றிலுமாக பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தி விடுகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிக்கும் நிறுவனங்கள் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை தங்கள் வாகனங்களில் பயன்படுத்த மாட்டார்கள் இந்நிலையில் இப்படியாக அதிக சத்தம் எழுப்பும் சைலன்ஸர்கள் பயன்பாட்டிற்கு வந்தது நிச்சயம் மிகப்பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது நீங்கள் உங்கள் வாகனங்களில் வெளிமார்க்கெட்டில் உள்ள செயல்களை பயன்படுத்த வேண்டாம் என நாங்களும் கேட்டுக் கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








