ராயல் என்ஃபீல்டு கம்பெனிக்கு எப்படி கட்டுப்பிடி ஆகுது! கவாஸாகியை விட சுமார் 44 ஆயிர ரூபாய் கம்மியான விலையில்!!

இந்தியாவின் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் சந்தையில், விலை குறைவான அட்வென்ச்சர் பைக்குகளுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருப்பினும், கவாஸாகியும் அதே ஆரம்ப நிலை அட்வென்ச்சர் பைக்காக வெர்சிஸ்-எக்ஸ் 300 (Versys-X 300)-ஐ வழங்குகிறது. இந்தப் பிரிவில் இவை இரண்டும் எப்படிப் போட்டியிடுகின்றன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஹிமாலயன் 450 அதன் திடமான கட்டமைப்பு, சிறந்த செயல்திறன் மற்றும் ஆஃப்-ரோடு திறன் காரணமாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் சக்திவாய்ந்த என்ஜின் மற்றும் குறைந்த விலை பலரை ஈர்க்கிறது. கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 ஒரு திறமையான பைக்காக இருந்தாலும், ஹிமாலயன் 450-க்கு மாற்றாக கூற முடியுமா என்றால் சந்தேகமே.

royal enfield himalayan 450

வடிவமைப்பு ஒப்பீடு: ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மற்றும் கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 ஆகிய இரண்டும் உயரமான, அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்ற தோற்றத்தைக் கொண்டுள்ளன. இவை இரண்டும் ஆஃப்-ரோடு பயணம் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றவை. இருப்பினும், இவை இரண்டிற்கும் இடையே ஹேண்டில்பார் வடிவமைப்பு, ஹெட்லைட் அமைப்பு, பாடி பேனல்கள் மற்றும் இருக்கை பொசிஷன் போன்ற விஷயங்களில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

ராயல் என்ஃபீல்டு ஒரு பாரம்பரியமான ரெட்ரோ-ஸ்டைல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மாறாக, கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 கூர்மையான மற்றும் நவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது. வெர்சிஸ்-எக்ஸ் 300 இன்றைய கால மாடர்ன் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு உண்டான ஃபெண்டர் மற்றும் ஹாலோஜன் ஹெட்லேம்ப் அமைப்பைக் கொண்டுள்ளது. ஹிமாலயன் 450 ஒரு உயரமான மற்றும் ஆக்ரோஷமான முன்பக்க ஃபெண்டர் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்களுடன், கம்பீரமான தோற்றத்தை கொண்டுள்ளது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் ஸ்போக் (spoke) சக்கரங்களைக் கொண்டுள்ளன.

kawasaki versys-x 300

என்ஜின் ஒப்பீடு: ஹிமாலயன் 450 பைக்கில் 452சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் உள்ளது. நான்கு வால்வுகள், DOHC அமைப்புடன் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8000 ஆர்பிஎம்-இல் 40.02 பிஎஸ் ஆற்றலையும், 5500 ஆர்பிஎம்-இல் 40 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் சிஸ்டத்தில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் லிக்யுடு-கூலிங் சிஸ்டம் உள்ளது.

கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கில் 296சிசி இரட்டை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. எட்டு வால்வுகள், DOHC அமைப்புடன் இது அதிகப்பட்சமாக 11,500 ஆர்பிஎம்-இல் 40 பிஎஸ் ஆற்றலையும், 10,000 ஆர்பிஎம்-இல் 26 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இதிலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் லிக்யுடு-கூலிங் சிஸ்டம் உள்ளது.

கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கில் உள்ள இரட்டை சிலிண்டர் என்ஜின், ஹிமாலயன் 450 பைக்கின் சிங்கிள் சிலிண்டர் என்ஜினை விட மென்மையான மற்றும் தொடர்ச்சியான ஆற்றலை வழங்குகிறது. இதன் 8-வால்வு DOHC என்ஜின் அமைப்பு சிறந்த டாப்-எண்ட் செயல்திறனை வழங்குகிறது. மறுப்புறம், ஹிமாலயன் 450 அதிக டார்க் திறன் மூலம் குறைந்த மற்றும் நடுத்தர வேகத்தில் இயங்கும்போதும் சிறந்த செயல்திறனை அளிக்கிறது.

பரிமாண அளவுகள் ஒப்பீடு: ஹிமாலயன் 450 பைக்கின் நீளம் 2245 மிமீ, அகலம் 852 மிமீ, உயரம் 1316 மிமீ ஆகும். வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கின் நீளம் 2170 மிமீ, அகலம் 860 மிமீ, உயரம் 1390 மிமீ ஆகும். இந்த வகையில் பார்த்தால், ஹிமாலயன் 450 சற்று நீளமானது. ஹிமாலயன் 450 பைக்கின் வீல்பேஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்) 1510 மிமீ, வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கின் வீல்பேஸ் 1450 மிமீ ஆகும்.

மேலும் ஹிமாலயன் 450 பைக் 230மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரைக்கும் பைக்கின் அடிப்பகுதிக்கும் இடையேயான தூரம்) கொண்டுள்ளது, இது வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கின் 180 மிமீ-ஐ விட அதிகம். ஹிமாலயன் 450 பைக்கில் ரைடர் இருக்கை உயரம் 825மிமீ-இல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாக உள்ளது, வெர்சிஸ்-எக்ஸ் 300 பைக்கில் ரைடர் இருக்கை 815 மிமீ உயரத்தில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முறையே ரூ.3.05 லட்சம் மற்றும் ரூ.3.49 லட்சத்தில் விற்பனை செய்யப்படும் இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களையும் ஒப்பிடுகையில், ஹிமாலயன் 450 ஒரு சிறந்த ஒட்டுமொத்த தொகுப்பாகத் தெரிகிறது. இது அதிக என்ஜின் ஆற்றல் வெளியீடு, வலுவான ஆஃப்-ரோடு திறன், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வழங்குகிறது. மேலும், இது கவாஸாகியை விட கணிசமாக குறைந்த விலையில் கிடைக்கிறது. கவாஸாகி வெர்சிஸ்-எக்ஸ் 300 ஒரு சிறந்த எஞ்சினியரிங் செய்யப்பட்ட இயந்திரம். அதன் பேரலல்-ட்வின் சிலிண்டர் என்ஜின் மென்மையான செயல்திறனை வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 23, 2026, 5:00 [IST]
English summary
Royal enfield himalayan 450 vs kawasaki versys x 300 motorcycle comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+