இந்த லுக்குக்கே மொத்த சொத்தையும் குடுக்கலாம்! விலை உயர்ந்த காரில் வந்து இளைஞர்களை கிறங்கடித்த இன்ஸ்டா பிரபலம்!

திரைப்பட நடிகைகள் தங்கள் உடலை 'ஃபிட்' ஆக வைத்து கொள்ள உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வது வழக்கம். எனவே பிரபலமான உடற்பயிற்சி கூடங்களில், நடிகைகளை அதிக அளவில் காண முடியும். இதற்காகவே உடற்பயிற்சி கூடங்களின் வாசல்களில் நாள் முழுக்க காத்து கிடக்கும் ரசிகர்களும் இருக்கின்றனர்!

அப்படிப்பட்ட ரசிகர்களால் எடுக்கப்படும் பிரபல நடிகைகளின் வீடியோக்கள், சமூக வலை தளங்களில் வைரலாவது வழக்கம். இந்த வரிசையில் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த பிரபல நடிகை ஒருவரின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Sakshi Malik Spotted In BMW X3

இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வைரல் வீடியோவில் நாம் பார்ப்பது, பிரபல பாலிவுட் நடிகையான சாக்ஸி மாலிக் (Sakshi Malik) ஆவார். இன்ஸ்டாகிராம் தளத்தில் மட்டும் இவரை 70 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். நடிகை என்பதை கடந்து, மாடல், ஃபிட்னஸ் இன்ஃப்ளூயன்சர் போன்ற முகங்களும் சாக்ஸி மாலிக்கிற்கு உள்ளன.

எனவேதான் அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சூழலில், உடற்பயிற்சி கூடத்திற்கு சாக்ஸி மாலிக் காரில் வந்து இறங்கிய வைரல் வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அவர் வந்த கார் பார்ப்பதற்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்3 (BMW X3) போல் இருக்கிறது. இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாகும்.

Sakshi Malik

இந்த கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்படுகிறது. அவை BMW X3 xDrive20 M Sport, BMW X3 30 xDrive M Sport Pro மற்றும் BMW X3 xDrive20d M Sport ஆகியவை ஆகும். இதில் முதலாவது வேரியண்ட்டின் ஆரம்ப விலை 70 லட்ச ரூபாயாக உள்ளது. மற்ற 2 வேரியண்ட்களின் ஆரம்ப விலையும் தலா 75 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இவை அனைத்துமே பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்படுகின்றன. அவை 2.0 லிட்டர் 4 சிலிண்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் மைல்டு ஹைப்ரிட் டீசல் ஆகியவை ஆகும்.

இந்த 2 இன்ஜின்கள் உடனும் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இன்ஜின் உருவாக்கும் சக்தி, இதன் மூலமாக காரின் 4 சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் xDrive ஆல் வீல் டிரைவ் (AWD) தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வசதிகளை (Features) பொறுத்தவரை, 14.9 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய முன் பக்க இருக்கைகள், 4 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவை எல்லாம் இந்த காரின் முக்கியமான அம்சங்கள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சாக்ஸி மாலிக் பயன்படுத்திய பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காரானது, இந்திய சந்தையில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்சி (Mercedes-Benz GLC), ஆடி க்யூ5 (Audi Q5) மற்றும் வால்வோ எக்ஸ்சி60 (Volvo XC60) ஆகிய கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

Article Published On: Wednesday, June 24, 2026, 15:19 [IST]
English summary
Sakshi malik spotted in bmw x3 viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out