உச்சகட்ட பாதுகாப்புடன் வந்த 10 கோடி ரூபா கார்! உள்ளே இருந்தவர் போன் பண்ணினா எல்லா சிஎம்-மும் எடுத்து பேசுவாங்க

சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வைரல் வீடியோவில், வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) கார் ஒன்று செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது.

அந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முன்பும், பின்பும் மேலும் ஒரு சில கார்கள் செல்கின்றன. இதில், பாதுகாப்பிற்காக வந்த போலீஸ் காரும் அடக்கம். இந்த வாகன கான்வாய் யாருடையது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. கார்கள் தொடர்புடையது என்பதால், இந்த சந்தேகத்திற்கு விடை அளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

Shah Rukh Khan Vehicle Convoy

இது பாலிவுட் திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானின் (Shah Rukh Khan) வாகன கான்வாய் ஆகும். ஏனெனில் இந்த வைரல் வீடியோவில் நாம் காணும் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷாருக்கானுடையது. இந்த வைரல் வீடியோவில் ஷாருக்கானை நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் உள்ளே அவர் இருந்திருக்கலாம்.

அந்த வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் பதிவு எண் MH O2 FZ 0555 ஆகும். இந்த பதிவு எண்ணை வைத்து பாலிசி பஜார் தளத்தில் தேடியபோது, அது ஷாருக்கானின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் ஆகும்.

Shah Rukh Khan s Rolls Royce Cullinan Black Badge

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக கார் (Rolls Royce's First SUV Car) என்ற பெருமை இதற்கு உண்டு. அத்துடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் கார் (Rolls Royce's First All Wheel Drive Car) என்ற பெருமையும் கல்லினனையே சாரும்.

ஷாருக்கான் வைத்திருப்பது சாதாரண ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கிடையாது. அது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் பிளாக் பேட்ஜ் (Black Badge) வெர்ஷன் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருக்கும், அதன் பிளாக் பேட்ஜ் வெர்ஷனுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உதாரணத்திற்கு இன்ஜின் செயல்திறனை (Engine Performance) குறிப்பிடலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷனில் 6.75 லிட்டர், ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் (Petrol) இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 600 பிஎஸ் பவர் மற்றும் 900 என்எம் டார்க் ஆகும். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் ஒப்பிடும்போது, அதன் பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் பவர் அவுட்புட் 29 பிஎஸ் மற்றும் 50 என்எம் அதிகம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாக இருக்கிறது.

செயல்திறன் மட்டுமல்லாது, உட்புற மற்றும் வெளிப்புற டிசைன் ஆகிய அம்சங்களிலும், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் ஒப்பிடும்போது, அதன் பிளாக் பேட்ஜ் வெர்ஷன் சற்று மாறுபட்டதாக உள்ளது. எனவே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காருடன் ஒப்பிடும்போது, அதன் பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் விலை அதிகம். ஷாருக்கானின் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெர்ஷனின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மற்ற பெரும்பாலான நடிகர், நடிகைகளை போலவே, ஷாருக்கானும் தீவிரமான கார் காதலர் ஆவார். ஏனெனில் அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் மட்டுமல்லாது, ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் (Rolls-Royce Phantom) சொகுசு கார் ஒன்றும் இருக்கிறது.

அத்துடன் புகாட்டி வேரான் (Bugatti Veyron), காடிலாக் எஸ்கலேட் (Cadillac Escalade), பிஎம்டபிள்யூ ஐ8 (BMW i8) மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) போன்ற கார்களையும், ஷாருக்கான் வைத்துள்ளார். அவரது விலை உயர்ந்த கார் கலெக்ஸன் (Car Collection) மூலமாகவே, அவர் எவ்வளவு தீவிரமான கார் காதலர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Article Published On: Tuesday, June 30, 2026, 11:47 [IST]
English summary
Shah rukh khan once again spotted in rolls royce cullinan black badge worth rs 10 crore viral video
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out