காருக்கு இணையாக, அதை இந்தியாவுக்கு கொண்டுவர செலவு செய்த நடிகர்! இரவில் ஓட்டிப் பார்ப்பு!

நடிகர் ஷாரூக்கான் புதியதாக சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான கேடில்லாக் எஸ்கலேட் காரை வாங்கியதுதான் அவரது ரசிகர்கள் மத்தியில் தற்சமயம் பேசு பொருளாக உள்ளது. அப்படி இந்த காரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதையும், எதனால் இந்த காருக்கு இவ்வளவு அதிகமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்திய சினிமாவின் கிங் கான் என அழைக்கப்படும் ஷாரூக்கானிடம் உள்ள சொகுசு கார்களை எல்லாம் பார்த்தால் நமக்கு தலையே சுற்றிவிடும். ஏனெனில், அந்த அளவிற்கு பிரம்மாண்டமான கார் கலெக்‌ஷனை வைத்திருக்கிறார் இந்த மனுஷன். அவற்றுள் புதியதாக இணைந்திருப்பது, கேடில்லாக் எஸ்கலேட் கார் ஆகும். இந்தியாவில் இப்படியொரு கார் விற்பனையிலேயே இல்லை.

shah rukh khan recently bought cadillac escalade car

வெளிநாட்டில் இந்த அமெரிக்கன் எஸ்யூவி காரை வாங்கி ஷாரூக்கான் இந்தியாவிற்கு கொண்டுவந்துள்ளார். அப்படியென்றால், காரின் விலையில் கூடுதலாக 2- 3 மடங்கு அதிகமாக செலவாகி இருக்கும். எங்களுக்கு தெரிந்தவரையில், இந்த ஒரு காருக்காக மட்டும் ரூ.4 கோடியில் இருந்து ரூ.5 கோடி வரையில் ஷாரூக்கான் செலவு செய்திருப்பார்.

இதில் பாதி தொகை வெளிநாட்டில் இருந்து காரை இந்தியாவிற்கு கொண்டுவரவே செலவாகி இருக்கும். ஏனெனில், கார் நிறுவனங்கள் தங்களது கார்களை அதிக எண்ணிக்கையில் இந்தியாவிற்கு கொண்டுவந்து விற்பனை செய்தாலே மத்திய அரசு பெரிய தொகையை இறக்குமதி வரியாக விதிக்கிறது. அப்படியிருக்கையில் இவ்வாறு சொந்த பயன்பாட்டிற்காக காரை இறக்குமதி செய்வதற்கு இன்னும் அதிக வரி விதிக்கப்படும்.

shah rukh khan recently bought cadillac escalade car

கேடில்லாக் எஸ்கலேட் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இதில் 6.2 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 682 எச்பி பவர் மற்றும் 885 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

இந்த கியர்பாக்ஸ் வாயிலாக என்ஜினின் இயக்க ஆற்றல்கள் காரின் நான்கு சக்கரங்களுக்கும் செல்கின்றன. அளவில் பெரியதான லக்சரியான எஸ்யூவி காராக இருப்பினும், இதில் 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை வெறும் 4.4 வினாடிகளில் எட்டிவிடலாம். சில கோடி ரூபாய் அளவிற்கு விலை கொண்ட இந்த காரில் உட்புற கேபின் எப்படியிருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.

ரோல்ஸ்-ராய்ஸ் கார்களை போன்று இது நிமிர்ந்த தோற்றம் கொண்ட உயரமான எஸ்யூவி வகை கார் ஆகும். ஆதலால், சொகுசான இருக்கைகள் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்கள் உடன் நன்கு விசாலமான உட்புற கேபின் இந்த காரில் கிடைக்கும். மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், பொதுவாக கார்களில் எல்இடி திரை வழங்கப்படும் நிலையில், இந்த கேடில்லாக் காரில் OLED திரை வழங்கப்படுகிறது.

அதுவும் 38 இன்ச்சில் நன்கு பெரியதாக. இவை மட்டுமின்றி, உயர் தரத்திலான சவுண்ட் சிஸ்டம் மற்றும் குளிர்சாதன பெட்டி கூட கேடில்லாக் எஸ்கலேட் காரில் வழங்கப்படுகிறது. ஷாரூக்கானுக்கு சொந்தமான இத்தகைய கார் மும்பையில் இரவு நேரத்தில் செல்லும் வீடியோ ஒன்று கடந்த வாரத்தில் அறிமுகமான பின்பே இப்படியொரு காரை ஷாருக்கான் வாங்கிய விஷயம் வெளியே தெரியவந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்சமயம் அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி நட்சத்திரமாக ஷாரூக்கான் விளங்குகிறார். ஆதலால், அத்தகையவருக்கு ரூ.4 கோடி- ரூ.5 கோடியில் இவ்வாறான ஒரு கேடில்லாக் காரை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமே கிடையாது. நடிகர் ஷாரூக்கானிடம் ஏற்கனவே பெண்ட்லீ காண்டினெண்டல் ஜிடி மற்றும் பி.எம்.டபிள்யூ ஐ8 உள்ளிட்ட அல்ட்ரா-லக்சரி கார்கள் உள்ளன.

Article Published On: Saturday, May 23, 2026, 6:17 [IST]
English summary
Shah rukh khan recently bought cadillac escalade luxury car details
மேலும்... #celebrity cars #luxury car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+