தமிழில் இரண்டே இரண்டு பாடல்களை பாடி BMW காரை வாங்கிய இளம் பாடகர்! செகண்ட்-ஹேண்ட் கார் என்றாலும் விலை 2 கோடி

ஜூபின் நாவுடியல் (Jubin Nautiyal), இந்த பெயரில் சினிமா பின்னணி பாடகரை நம்மில் நிறைய பேர் கேள்விப் பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இவர் அதிகமாக இந்தி மொழி பட பாடல்களை தான் பாடியிருக்கிறார். இருப்பினும், தற்போதைக்கு இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகர்களுள் ஒருவராக இருக்கிறார். இந்த நிலையில், இவர் தற்போது விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஒன்றை வாங்கியுள்ளார். புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார் கிடையாது; செகண்ட்-ஹேண்ட் (Second-hand) கார் ஆகும்.

கோடிக்கணக்கில் சொத்து வைத்திருந்தாலும், ஒரு சில செல்வந்தர்கள் பிராண்ட்-நியூ (Brand-new) கார்களை வாங்காமல், செகண்ட்-ஹேண்டில் சொகுசு கார்களை வாங்குவதை பார்க்க முடியும் இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவ்வாறுதான், பாடகர் ஜூபின் நாவுடியலும் செகண்ட்-ஹேண்டில் பிஎம்டபிள்யூ ஐ7 (i7) என்கிற எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளார்.

singer jubin nautiyal buys second-hand bmw i7 electric car

பாடகர் ஜூபின் நாவுடியல் அதிகமாக வடஇந்திய மொழி படங்களுக்கான பாடல்களையே பாடியுள்ளார் என்றாலும், சில தென்னிந்திய மொழி பட பாடல்களையும் பாடியுள்ளார். இவ்வளவு ஏன், தமிழில் கூட இரு பாடல்களை பாடியுள்ளார். இயக்குனர் மோகன்.ஜி-இன் இயக்கத்தில் உருவான திரௌபதி (Draupathi) மற்றும் ருத்ர தாண்டவம் (Rudra Thandavam) திரைப்படங்களில் தலா ஒன்று என இரு பாடல்களை பாடியுள்ளார்.

இது இல்லாமல், தெலுங்கு, பெங்காலி மொழி பட பாடல்களையும் பாடி கவனத்தை ஈர்த்துள்ள பாடகர் ஜூபின் நாவுடியல் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகர் டேராடூனை சேர்ந்தவர் ஆவார். திரைப்படங்களுக்கான பாடல்களை சிறப்பாக பாடியதற்காக IIFA உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள ஜூபின் நாவுடியல் செகண்ட்-ஹேண்டில் பிஎம்டபிள்யூ ஐ7 எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளதை 'பிக்பாய்டாய்ஸ்' (BigBoyToyz) என்கிற ஃபேஸ்புக் (Facebook) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

singer jubin nautiyal buys second-hand bmw i7 electric car

பிக்பாய்டாய்ஸ் ஆனது இந்தியாவில் விலையுயர்ந்த சொகுசு கார்களை செகண்ட்-ஹேண்டில் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகும். பாடகர் ஜூபின் நாவுடியலின் பிஎம்டபிள்யூ ஐ7 கார் அவரது இருப்பிடத்திற்கே வந்து டெலிவிரி (Delivery) செய்யப்பட்டுள்ளது. அதன்பின், உடனடியாக காரை ஜூபின் நாவுடியல் ஓட்டிப் பார்த்துள்ளார். அந்த அளவிற்கு பார்க்கும் எவரையும் உடனே ஓட்டிப் பார்க்க தூண்டக்கூடிய எலெக்ட்ரிக் கார் ஐ7 ஆகும்.

பொதுவாகவே பிஎம்டபிள்யூ கார்களில் தொழிற்நுட்ப அம்சங்கள் அதிகமாக வழங்கப்படும் என்பது நமக்கு தெரிந்ததே. இது எலெக்ட்ரிக் கார் என்பதால் இன்னும் பல மாடர்ன் வசதிகள் ஐ7 காரில் இடம்பெறுகின்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், பின் இருக்கைகளில் அமர்பவர்களுக்கு தியேட்டர் உணர்வை வழங்கும் வகையில் 31.3 இன்ச்சில் 8கே ரெசொல்யூஷன் திரை இந்த காரில் வழங்கப்படுகிறது.

அமேசான் ஃபயர் டிவி (Amazon FireTV) வசதியை கொண்ட இந்த திரை மட்டுமில்லாமல், ஸ்கை லாஞ்ச் பனோராமிக் கண்ணாடி சன்ரூஃப், டாஷ்போர்டில் கர்வ்டு இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, கைகளால் உருவாக்கப்பட்ட மெட்டீரியல்கள், டச் ஸ்க்ரீன்கள் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட பின் கதவுகள், போயர்ஸ் & வில்கின்ஸ் டைமண்ட் சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் ஐ7 எலெக்ட்ரிக் காரில் இடம்பெறுகின்றன.

இந்த எலெக்ட்ரிக் காரில் அளவில் பெரியதாக 101.7kWh திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரியை பிஎம்டபிள்யூ வழங்குகிறது. இந்த பேட்டரி உடன் இரட்டை-மோட்டார் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இந்த மோட்டார் சிஸ்டத்தின் மூலமாக அதிகப்பட்சமாக 544 எச்பி மற்றும் 745 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை இந்த காரில் பெற முடிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாடகர் ஜூபின் நாவுடியலிடம் உள்ள பணத்திற்கு இந்த பிஎம்டபிள்யூ எலெக்ட்ரிக் காரை பிராண்ட்-நியூ ஆக வாங்க முடியும். ஐ7 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.2.05 கோடியில் இருந்து ரூ.2.58 கோடி வரையில் உள்ளன. இருப்பினும், ஏற்கனவே கூறியதுபோல் சில பணக்காரர்களை போன்று செகண்ட்-ஹேண்டில் இந்த காரை வாங்கியுள்ளார்.

Article Published On: Tuesday, May 12, 2026, 14:50 [IST]
English summary
Singer jubin nautiyal buys second hand bmw i7 electric car check all details here
மேலும்... #celebrity cars #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+