6 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த கார்! கஸ்டமர்ஸை முந்திக்கொண்டு முதல் ஆளாக டீலர் வாங்கிய கார்!
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தில் இருந்து இந்த ஜூலை மாத துவக்கத்தில் கோடியாக் RS கார் அறிமுகம் செய்யப்பட்டதைப் பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த ஜூன் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட புதிய கோடியாக் RS இந்த ஜூலை மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
காருக்கான முன்பதிவுகளும் கூட அப்போதே துவங்கப்பட்டன. இந்த நிலையில், இந்தியாவில் முதல் புதிய ஸ்கோடா கோடியாக் RS கார் வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் முதல் கோடியாக் RS காரை டெலிவிரி பெற்று இருப்பவர் வேறு யாரும் இல்லை, ஸ்கோடா டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றின் உரிமையாளர் ஆவார்.

அதாவது, அவரது ஷோரூமுக்கு அவரே தனக்கான கோடியாக் RS காரை ஆர்டர் போட்டு வரவழைத்து, முழு தொகையை செலுத்தி டெலிவிரி பெற்றுள்ளார். இந்த சுவாரஸ்யமான சம்பவம் எங்கு நடந்ததுள்ளது என்றால், மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் நகரத்தில் உள்ள 'யுனிக் ஸ்கோடா' என்கிற ஸ்கோடா டீலர்ஷிப் ஷோரூமில் ஆகும்.
இந்த ஸ்கோடா டீலர்ஷிப் ஷோரூமின் உரிமையாளர்களுள் ஒருவராக இருப்பவர், ராகுல் சோர்டியா. இந்த ஷோரூம் மட்டுமின்றி, இன்னும் பல ஆட்டோமொபைல் டீலர்ஷிப் ஷோரூம்களும் இவரது கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. இத்தகையவர் தான் தற்போது இந்தியாவின் முதல் கோடியாக் RS காரை டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பான பதிவு ஒன்று சம்பந்தப்பட்ட யுனிக் ஸ்கோடா ஷோரூமின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வாகன் டிகுவான் காரில் தனது ஸ்கோடா ஷோரூமுக்கு ராகுல் சோர்டியா வந்த நிலையில், அவரது வயதான பெற்றோர்கள் ஹூண்டாய் டக்ஸன் காரில் வந்து இறங்கினர். ஷோரூமின் மத்தியில் கருப்பு நிற துணியால் மூடி வைக்கப்பட்டு இருந்த தனக்கான கோடியாக் RS காரை குடும்பத்துடன் ராகுல் சோர்டியா டெலிவிரி பெற்றுச் சென்றார்.
ஷோரூமில் இருந்து காரை ஓட்டிச் சென்றது, ராகுல் சோர்டியா ஆவார். ஸ்டீல் கிரே நிறத்தில் இந்த ஸ்கோடா காரை ராகுல் சோர்டியா வாங்கியுள்ளார். இது உள்பட மொத்தம் நான்கு விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. கோடியாக் RS காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.66.99 லட்சமாக தற்சமயம் உள்ளது.
இது, வழக்கமான ஸ்கோடா கோடியாக் காரை காட்டிலும் சுமார் ரூ.20 லட்சம் அதிகம் ஆகும். இந்த கூடுதல் விலைக்கு ஏற்ப, மிகவும் வேகமான ஸ்கோடா SUV காராக கோடியாக் RS விளங்குகிறது. எந்த அளவிற்கு வேகம் என்றால், 0-இல் இருந்து மணிக்கு 100கிமீ வேகத்தை இந்த காரில் வெறும் 6.3 வினாடிகளில் எட்டிவிடலாம். காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 231கிமீ ஆகும்.
இந்த அளவிற்கு செயல்திறன்மிக்கது என்பதினாலேயே இந்த காருக்கு RS முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்கோடா SUV RS கார் இதுவாகும். RS கார் என்பது செயல்திறனில் மட்டுமின்றி, தோற்றத்திலும் தெரிகிறது. இதற்கேற்ப முன்பக்கத்தில் பம்பர் ஆனது பெரிய ஏர் இண்டேக்கை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான ஸ்கோடா கோடியாக் காரை காட்டிலும் இதன் விலை அதிகமாக நிர்ணயிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், இது முழுக்க முழுக்க வெளிநாட்டில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதினால் ஆகும். அதிக விலை கொண்டிருப்பது மட்டுமின்றி, முதல் தொகுப்பில் இது வெறும் 50 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications