கம்மியான விலையில் வாங்கினாலும் 6 ஏர்பேக்ஸ் கிடைக்கும்! புக்கிங் துவங்கப்பட்டுள்ள ஸ்கோடா காரில் எது பெஸ்ட்?

இந்தியாவில் 2026 குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Kushaq facelift) காரை ஸ்கோடா ஆட்டோ (Škoda Auto) சமீபத்தில் வெளியீடு செய்துள்ளது. விலைகள் மட்டுமே இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதை தவிர்த்து, காரை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் கார் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஒவ்வொரு வேரியண்ட்டும் அதன் தனித்துவமான அம்சங்களுடன் நடுத்தர வகுப்பு முதல் பிரீமியம் வாடிக்கையாளர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில், அந்த வேரியண்ட்களையும் அவற்றின் முக்கிய சிறப்பம்சங்களை பற்றியும் தான் பார்க்க போகிறோம்.

கிளாசிக் ப்ளஸ் (Classic +) வேரியண்ட், குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான ஆரம்ப நிலை வேரியண்ட்டாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க அம்சங்களை வழங்குகிறது.

Feature Category Classic Plus Trim Features (Standard)
Safety & Security 6 Airbags, 25+ Active and Passive Safety Features, ABS with EBD, ESC, Hill Hold Assist, TPMS, Rear Parking Sensors, Optional Front Parking Sensors
Exterior Styling 16-inch Alloy Wheels, LED Headlamps, Sequential LED Turn Indicators, Connected Tail Lamps, Single Pane Sunroof, Plenty Colour Options Available
Interior & Comfort 17.7cm Infotainment System, Auto AC Control, Auto Dimming IRVM, Power Windows, Cruise Control
Convenience & Tech Rain-Sensing Wipers, Rear Wiper with Defogger, Paddle Shifters (AT), Sports Mode (AT)
Colours Available (2026) Cherry Red, Brilliant Silver, Candy White, Carbon Steel, Lava Blue
skoda kushaq facelift variants-wise features

இது 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 115 பிஎஸ் ஆற்றலையும், 178 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும்.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள சிக்னேச்சர் (Signature) வேரியண்ட்டும் 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே கிடைக்கும். இதனால், இதற்கான 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் மாற்றமில்லை. இது மேலே கண்ட கிளாசிக் ப்ளஸ் வேரியண்ட்டின் அனைத்து அடிப்படை அம்சங்களையும் உள்ளடக்கி, மேலும் சில கூடுதல் மேம்பாடுகளையும் வழங்குகிறது.

Category Signature Trim Features (Additional over Classic+)
Exterior & Wheels 17-inch Vega Silver Alloy wheels (Standard)
Technology & Display 20.32cm Digital Cluster (Standard); Large 25.6cm Touchscreen Infotainment System with Skoda Speakers (Standard)
Safety & Driver Assist Front Parking Sensors (Standard)
Performance (AT Only) Paddle Shifters; Sports Mode
Colours Available (2026) Cherry Red, Brilliant Silver, Candy White, Carbon Steel, Lava Blue, Deep Black
skoda kushaq facelift variants-wise features

இதற்கடுத்த, ஸ்போர்ட்லைன் (Sportline) வேரியண்ட் ஸ்போர்ட்டியான தோற்றத்தை விரும்புவோருக்கானது. இதுவும் 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜினுடன், சிக்னேச்சர் மற்றும் கிளாசிக் ப்ளஸ் வேரியண்ட்களில் உள்ள அதே கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வருகிறது. இந்த வேரியண்ட் முந்தைய இரண்டு வேரியண்ட்களின் அனைத்து அம்சங்களையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், தோற்றத்தில் சில சிறிய காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் கிடைக்கும்.

ஸ்போர்ட்லைன் (Sportline) வேரியண்ட்டில் 17-இன்ச் வேகா கருப்பு நிற அலாய் சக்கரங்கள், கருப்பு மற்றும் பழுப்பு என்கிற இரட்டை நிறங்களில் கேபின், அலுமினியத்தால் ஆன பெடல்கள் மற்றும் புதிய டூயல் ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இது செர்ரி ரெட், பிரில்லியன்ட் சில்வர், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், லாவா ப்ளூ, டீப் பிளாக், ஷிம்லா கிரீன், ஸ்டீல் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

Category Sportline Trim Features (Standard)
Base Package Includes all features from the Signature Trim
Exterior Styling 17-inch Vega Black Alloy Wheels; Black-themed cosmetic upgrades (Grille, Scuff Plates, and Roof Rails)
Interior & Cabin Dual-Tone Black and Beige Cabin; New Dual Fabric Upholstery with Dual Stripes; Aluminium Pedals
Performance (AT Only) Paddle Shifters; Sports Mode
Colours Available (2026) New for 2026: Shimla Green, Steel Grey, Cherry Red
Standard: Brilliant Silver, Candy White, Carbon Steel, Lava Blue, Deep Black
skoda kushaq facelift variants-wise features

ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட்டின் முதல் பிரீமியம் வேரியண்ட் பிரெஸ்டீஜ் (Prestige) ஆகும். இது 1.0 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் (115 PS/178 Nm) மற்றும் அதிக சக்திவாய்ந்த 1.5 லிட்டர் TSI (150 PS/250 Nm) பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது. 1.5 லிட்டர் TSI என்ஜின் ஆனது 7-ஸ்பீடு டிஎஸ்ஜி (DSG) கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும்.

Category Prestige Trim Features (Top-of-the-line)
Exclusive Comfort Rear Seat Massager, Panoramic Sunroof, 6-way Electrically Adjustable Front Seats with Ventilation, Premium Beige Interior, Leatherette Seats
Advanced Tech 1st in Segment 26.03 cm Digital Cockpit, 25.6 cm Infotainment System, AI Companion (Powered by Google), Amplifier & Subwoofer
Exterior & Lighting LED Package (Headlights, Taillights, Foglamps), Front Grille with Chrome Ribs, Illuminated Front Grille Light Band, Illuminated Škoda Rear Lettering, R17 Alloy Wheels, Sequential Rear Turn Indicators
Safety & Performance Front Parking Sensors, Disc Brakes (1.5 TSI), Paddle Shifters (AT), Sports Mode (AT)
2026 Colour Palette Cherry Red, Brilliant Silver, Candy White, Carbon Steel, Lava Blue, Deep Black, Shimla Green, Steel Grey
skoda kushaq facelift variants-wise features

மான்டே கார்லோ (Monte Carlo) வேரியண்ட் புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலையுயர்ந்த உச்சநிலை வேரியண்ட் ஆகும். இதில் இரட்டை நிற வெளிப்புற கலர் ஆப்ஷன்கள் மட்டுமே கூடுதலாக கிடைக்கின்றன. மற்றப்படி, மேலே கூறப்பட்ட பிரெஸ்டீஜ் வேரியண்ட்டில் கிடைப்பவையே பெரும்பாலும் இந்த வேரியண்ட்டிலும் கிடைக்கும். இந்த வகையில், இந்த இரு வேரியண்ட்களுக்கும் என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் வித்தியாசமில்லை. இருப்பினும், பிரெஸ்டீஜ் வேரியண்ட்டில் இருந்து வேறுபட்டு, மான்டே கார்லோ வேரியண்ட் முழுவதும் கருப்பு நிற உட்புற இன்டீரியர் உடன் கிடைக்கிறது.

Category Monte Carlo Trim Features (Exclusive Over Prestige)
Exclusive Branding Monte Carlo Exclusive Badging, Front Grille with Sporty Red Stripes, Illuminated Škoda Rear Lettering
Exterior Styling Sporty Blacked-Out Elements: Dual Tone Roof, Blacked-out Grille, Mirrors, and Decor; R17 Alloy wheels & Sagittarius Alloys (1.5 TSI)
Interior & Comfort Sporty Black Interior Theme: Leatherette Seats, Rear Seat Massager, 6-way Electrically Adjustable Ventilated Front Seats, Panoramic Sunroof
Tech & Lighting 26.03 cm Digital Cockpit, 25.6 cm Infotainment with AI Companion (Google), Amplifier & Subwoofer, LED Package with Illuminated Grille Light Band, Sequential Rear Turn Indicators
Performance & Safety Disc Brakes (1.5 TSI), Front Parking Sensors, Paddle Shifters (AT), Sports Mode (AT)
2026 Dual-Tone Colours Dual Tone: Cherry Red, Brilliant Silver, Candy White, Shimla Green, Steel Grey
Monotone: Lava Blue, Deep Black

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Upgrade) செய்யப்பட்ட குஷாக் காருக்கான அதிகாரப்பூர்வ விலையை ஸ்கோடா இந்தியா இன்னும் அறிவிக்கவில்லை. தற்போதைய மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.66 லட்சம் முதல் தொடங்குகிறது. இந்த வேரியண்ட்களின் கூடுதல் அம்சங்கள் மற்றும் நிலையான மேம்பாடுகளை எல்லாம் பார்த்தால், புதிய குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் (Ex-Showroom Prices) ரூ.11.49 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். மேற்கூறப்பட்ட புதிய குஷாக் காரின் வேரியண்ட்களுள் உங்களது தேவைக்கு ஏற்றதை பார்த்து தேர்வு செய்து வாங்கவும்.

More from DriveSpark

Article Published On: Friday, January 23, 2026, 20:32 [IST]
English summary
Skoda kushaq facelift variants wise features list classic plus and signature
மேலும்... #skoda #skoda kushaq #suv car #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X