கர்நாடகா முதலமைச்சர் கூட அவங்க ஊரில் இப்படி போய் இருக்க மாட்டார்... ஜன்னலை திறந்து வைத்த படி கார் ஓட்டிய விஜய்

பொதுவாக, கார் ரேசராக இருப்பினும் மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்துவிட்டால் தனது சொந்த பயன்பாட்டு காரை இயக்குவதற்கு கூட டிரைவரை வைத்துக் கொள்வார்கள். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பும் தனது காரை தானே ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது, முதலமைச்சரின் பயன்பாட்டிற்கு என்று ஒதுக்கப்படும் அலுவலக காரையும் விஜய் அவ்வப்போது ஓட்டுகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் கர்நாடகாவிற்கு சென்ற முதலமைச்சர் விஜய் தனது அலுவலக காரான டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300 காரை டிரைவர் சீட்டில் அமர்ந்து ஓட்டிச் சென்றுள்ளார். இதுதொடர்பான படங்கள் 'முரளி மகேஷ் பீட்ஸ்' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக நமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

tamil nadu chief minister vijay drives toyota land cruiser lc300

இந்த படங்களில், கருப்பு நிறத்திலான தமிழ்நாடு முதலமைச்சருக்கான அலுவலக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300 காரை, வெள்ளை சட்டை அணிந்திருந்த முதலமைச்சர் விஜய் ஓட்டிச் செல்வதை காணலாம். மேலும், டிரைவர் சீட்டிற்கு அருகே இருக்கும் ஜன்னல் கண்ணாடி திறந்த நிலையில் இருப்பதையும் இந்த படங்களில் காணலாம். ஏற்கனவே கூறியதுபோல், பெரும்பாலும் அரசியல்வாதிகள் தங்களது கார்களே தாங்களே ஓட்ட மாட்டார்கள்.

அதுவும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கார் ஓட்டுவதை காண்பது மிகவும் அரிது. அரசியல்வாதிகள் கார் ஓட்டினாலும், பாதுகாப்பு கருதி ஜன்னல் கண்ணாடிகளை மூடிக்கொண்டே காரை ஓட்டுவர். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது அலுவலக காரை தானே ஓட்டியது மட்டுமின்றி, டிரைவர் சீட்டிற்கு அருகே இருக்கும் ஜன்னல் கண்ணாடியை திறந்து வைத்துக் கொண்டும் காரை ஓட்டி சென்றுள்ளார்.

tamil nadu chief minister vijay drives toyota land cruiser lc300

தமிழ்நாடு முதலமைச்சர் வருவதை அறிந்து சாலைக்கு இருபுறமும் நின்றிருந்த மக்களை நோக்கி கையசைப்பதற்காக டிரைவர் இருக்கை-பக்க ஜன்னல் கண்ணாடியை மூடவில்லை. வழக்கம்போல், இந்த பயணத்திலும் முதலமைச்சரின் காருக்கு முன்னாலும், பின்னாலும் Z+ பிரிவு பாதுகாப்பு வாகனங்கள் வரிசைக் கட்டி சென்றன. கான்வேயில் முதலாவதாக வெள்ளை நிறத்தில் இரு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் சென்றன.

அவற்றிற்கு பின்னால் சில டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார்கள் செல்ல, அவற்றிற்கு அடுத்து முதலமைச்சரின் கருப்பு நிறத்திலான டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300 கார் சென்றது. மேலும், முதலமைச்சரின் காருக்கு பின்னாலும் Z+ பிரிவு பாதுகாப்பு வாகானங்கள் வரிசைக்கட்டி சென்றன. Z+ பிரிவு பாதுகாப்புடன், முதலமைச்சருக்கான அலுவலக காரை ஓட்டியப்படி, ஜன்னலை திறந்து கூடியிருந்த மக்களுக்கு கையசைத்து மாஸ் காட்டியப்படி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சென்றுளார்.

அதுவும் இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை; கர்நாடாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கொல்லூர் ஸ்ரீ முகாம்பிகை அம்மன் திருகோயிலுக்கு செல்லும்போது நடந்துள்ளது. விமானத்தில் மங்களூரு விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர் விஜய் அங்கிருந்து 130கிமீ தொலைவிற்கு டொயோட்டா லேண்ட் க்ரூஸர் LC300 காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

இது முதலமைச்சரின் கார் என்பதை வெளிக்காட்டும் விதமாக காரின் முன்னால் தேசிய கொடியும், விட்டு விட்டு ஒளிரக்கூடிய சிவப்பு மற்றும் நீல நிறத்திலான பெக்கான் விளக்குகள் இருப்பதையும் காணலாம். மற்றப்படி, இந்த கார் புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்டது கிடையாது. ஏனெனில், புல்லட்-ப்ரூஃப் கார்களில் ஜன்னல் கண்ணாடிகளும் புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்டதாக, தடினமாக இருக்கும் என்பதால் அதனை கீழ் இறக்க முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொதுவாக, மாநிலத்தின் முதலமைச்சர்கள் புல்லட்-ப்ரூஃப் செய்யப்பட்ட காரில் பயணிப்பதே வழக்கம். இருப்பினும், ஆபத்து இல்லாத பகுதிகளுக்கு செல்லும்போது சில சமயங்களில் புல்லட்-ப்ரூஃப் செய்யப்படாத காரை கொண்டுச் செல்வார்கள். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் வேற்று மாநிலத்தில் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு காரை ஓட்டி சென்று பிரம்மிக்க வைத்துள்ளார்.

Article Published On: Monday, June 15, 2026, 23:15 [IST]
English summary
Tamil nadu chief minister vijay drives toyota land cruiser lc300 car in karnataka
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out