ஒரே நாளில் 70 ஆயிரம் பேர் புக் செய்த கார் குறைந்த விலையில் இப்படித்தான் இருக்கும்! பல விதங்களில் விலை குறைப்பு
புதிய அவதாரத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா சியரா (Tata Sierra), 24 மணிநேரத்திற்குள் 70,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வருகிற ஜனவரி 15 முதல் இந்த காரின் டெலிவிரிகள் (Deliveries) தொடங்கப்பட உள்ள நிலையில், குஜராத் சனந்த் பகுதியில் உள்ள டாடா ஆலையில் காரின் உற்பத்தி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதிய டாடா சியரா காரின் விலை குறைவான வேரியண்ட் எப்படி இருக்கும் என்பது குறித்த படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. புதிய சியரா ஸ்மார்ட்+ (Smart+), ப்யூர் (Pure), அட்வென்ச்சர் (Adventure), அக்கம்ப்ளீஷ்டு (Accomplished) என நான்கு முக்கிய வேரியண்ட்களில் கிடைக்கிறது.

இதில், ஸ்மார்ட்+ வேரியண்ட்டிற்கு அடுத்த நிலையில் உள்ள டாடா சியரா காரின் ப்யூர் வேரியண்ட்டின் தோற்றம் தான் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. பெட்ரோல் என்ஜின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும் இந்த வேரியண்ட் ரூ.12.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது அத்தியாவசிய தொழில்நுட்பம், விரிவான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றம் ஆகியவற்றின் சிறந்த கலவையாகும்.
புதிய சியராவின் பிரம்மாண்டமான தோற்றம் ஆனது இந்த இரண்டாம் நிலை ப்யூர் வேரியன்ட்டைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் முழுமையாகக் கிடைக்கும். இதன் முக்கிய அம்சங்களில், ஒருங்கிணைந்த டர்ன் இன்டிகேட்டர்களுடன் கூடிய உயரத்தில் பொருத்தப்பட்ட மெலிதான LED DRL-கள் மற்றும் முழு அகல LED லைட் ஸ்ட்ரிப் ஆகியவை அடங்கும்.

மேலும், கூர்மையான வடிவில் இரு விதமாக செயல்படக்கூடிய LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 'SIERRA' பேட்ஜிங் மற்றும் உறுதியான பம்பர் டிசைன் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஃபாக் விளக்குகள், ADAS-க்கான முன்பக்க ரேடார், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை ப்யூர் வேரியன்ட்டில் இல்லை. இவை சியரா உயர்நிலை வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கின்றன.
காரின் பக்கவாட்டில், சதுர வடிவிலான வீல் ஆர்ச்சுகள், பியானோ கருப்பு நிற பாடி கிளாடிங், கருப்பு நிற 'A' பில்லர்கள் மற்றும் அடர்த்தியான உடல் நிறத்தில் 'B' பில்லர்கள் உள்ளன. சியரா ப்யூர் காரில் கருப்பு நிற ORVM-கள் டர்ன் இண்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. வெளிச்சத்திற்காக விளக்கு உடன் கூடிய ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஸ்போர்ட்டியான டோர் டிரிம்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தானாக மடிந்து கொள்ளும் வசதியுடன் வந்துள்ள ORVM-கள் மின்சாரம் மூலம் சரிசெய்யக்கூடியவை. ப்யூர் வேரியன்ட்டில் அலாய் சக்கரங்கள் இல்லை. இருப்பினும், டூயல்-டோன் வீல் கவர்கள் பிரீமியம் மற்றும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கின்றன. சியரா ப்யூர் வேரியன்ட், 215/65 குட்இயர் டயர்களுடன் 17-இன்ச் ஸ்டீல் சக்கரங்களைப் பயன்படுத்துகிறது.
காரின் முன் கதவுகளில் மெட்டாலிக் ஃபினிஷ் கொண்ட 'SIERRA' பேட்ஜிங் உள்ளது. இந்த ப்யூர் வேரியன்ட்டில் முழு நீளத்திற்கு கண்ணாடி மேற்கூரை இல்லை. அதற்குப் பதிலாக, மேற்கூரையின் பளபளப்பான கருப்பு நிற பெயிண்ட் ஆனது பெரிய கண்ணாடி மேற்கூரை இருப்பதுபோல் காட்டுகிறது. பானரோமிக் சன்ரூஃப்க்கு, Pure+ அல்லது அதற்கு மேற்பட்ட வேரியன்ட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

காரின் பின்பக்கத்தில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டெனா, 'SIERRA' பேட்ஜிங், இணைக்கப்பட்ட கூர்மையான வடிவிலான டெயில் லேம்ப்கள், பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரிக் டெயில்கேட் ரிலீஸ் ஆகியவை உள்ளன. எனினும், பின்பக்க வைப்பர் மற்றும் டிஃபாகர் போன்ற முக்கிய அம்சங்கள் ப்யூர் வேரியன்ட்டில் இல்லை. டாடா சியரா ப்யூர் மாடலின் பூட் ஸ்பேஸ், 622 லிட்டர் கொள்ளளவுடன், அதன் பிரிவிலேயே சிறந்ததாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் சியரா காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த காரின் விலை குறைவான ப்யூர் வேரியண்ட்டின் வெளிப்புற அம்சங்களை மட்டும் தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். உட்புற அம்சங்களையும் பார்த்தால் லிஸ்ட் பெரியதாக நீளூம்.


Click it and Unblock the Notifications









