டாடா சியராவை டெலிவிரி எடுத்த உடன் நேரா மெக்கானிக் கடைக்கு தான்... கார் இன்ஸ்சூரன்ஸில் சல்லி பைசா கிடைக்காது!
புத்தம் புதிய டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி கார், கடந்த 2025 நவம்பர் மாத இறுதியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) கொடுக்கும் பணிகள் துவங்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது, நாட்டின் முதல் மாடிஃபிகேஷன் (Modification) செய்யப்பட்ட டாடா சியரா கார் ஒன்றின் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
இதுகுறித்த விபரங்கள், பஞ்சாப் (Punjab) மாநிலத்தில் உள்ள 'KB டயர்கள்' என்ற டயர் கடையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட சியரா கார், 'பியூர் கிரே' (Pure Grey) என்கிற இரட்டை வண்ணங்களின் கலவையில் காட்சியளிக்கிறது. ஆனால், இந்த புதிய டாடா எஸ்யூவி கார் மார்க்கெட்டில் ஆறு கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

அவை, பிரதான மஞ்சள் (Andaman Adventure), பிரெஸ்டீஜ் வெள்ளை (Prestige White), பெங்கால் ரோக் (Bengal Rouge), கூர்க் க்ளவுட்ஸ் (Coorg Clouds) மற்றும் மூணார் மிஸ்ட் (Munnar Mist) என்பன ஆகும். இந்த குறிப்பிட்ட சியரா காரின் உரிமையாளர், தனது வாகனத்திற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை வழங்கியுள்ளார்.
கார் டெலிவிரி செய்யப்பட்டு கைக்கு வந்தவுடனேயே, அதன் சக்கரங்கள் அனைத்தையும் மாற்றுவற்காக அதை மேலே குறிப்பிடப்பட்ட பஞ்சாபில் உள்ள கேபி டயர் கடைக்கு கொண்டு சென்றுள்ளார். பொதுவாக, டாடா சியரா எஸ்யூவி காரின் விலை குறைவான எண்ட்ரி-லெவல் வேரியண்ட்களில் 17 இன்ச் சக்கரங்களும், மிட்-ஸ்பெக் வேரியண்ட்களில் 18 இன்ச் சக்கரங்களும், டாப்-ஸ்பெக் வேரியண்ட்களில் 19 இன்ச் சக்கரங்களும் வழங்கப்படுகின்றன.

இந்த உரிமையாளர், தனது உயர் ரக சியராவை மேலும் பெரியதாக்க எண்ணி, மிகப்பெரிய 20 இன்ச் சக்கரங்களைத் தேர்வு செய்துள்ளார். 5 ஸ்போக்குகளை கொண்ட நட்சத்திர வடிவிலான இந்த சக்கரங்கள், வீல் ஆர்ச்களை கிட்டத்தட்ட முழுமையாக நிரப்பியுள்ளதை படங்களில் காணலாம். இந்த சக்கரங்களில் பொருத்தப்பட்ட டயரின் அளவு குறித்து தெளிவான தகவல்கள் இல்லை.
இந்த பிரம்மாண்டமான சக்கரங்களுக்கு இடமளிக்கும் வகையில், சியராவின் சஸ்பென்ஷன் சற்று உயர்த்தப்பட்டதாகத் தெரிகிறது. வழக்கமான சியரா காரிலேயே 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (தரையில் இருந்து காரின் அடிப்பகுதியின் உயரம்) வழங்கப்படும் நிலையில், சக்கரங்கள் மாற்றப்பட்ட இந்த எஸ்யூவியில் கிரவுண்ட் கிளியரன்ஸ் இன்னும் அதிகரித்துள்ளது. இதனால் காரின் ஒட்டுமொத்த தோற்றமும் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது.

இந்த சியரா காரில் சக்கரங்கள் மாற்றப்பட்டது மட்டுமே ஒரே மாடிஃபிகேஷன் கிடையாது. டாடா மோட்டார்ஸ், சியராவுக்காக பல்வேறு ஆக்சஸரீஸ் தொகுப்புகளை வழங்குகிறது. இதில் ஆர்.ஓ.க்யூ (ROQ) மற்றும் ஆர்.ஓ.க்யூ+ என இரண்டு தொகுப்புகள் உள்ளன. ஆர்.ஓ.க்யூ தொகுப்பு ஆனது காரின் பல்வேறு பகுதிகளில் காஸ்மெட்டிக் பேனல்கள் மற்றும் பாகங்களைச் சேர்த்து, தனித்துவமான தோற்றத்தை அளிக்கிறது.
ஆர்.ஓ.க்யூ+ தொகுப்பில், செயல்பாட்டு அம்சமாக ரூஃப் ரேக், காரின் பக்கவாட்டில் பொருத்துவதற்கான ஏணி போன்ற கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட சியரா காரில் ஆர்.ஓ.க்யூ தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி, காரின் முன்பக்க கிரில், டெயில்கேட், பொனெட், பக்கவாட்டுப் பகுதிகள், வீல் ஆர்ச்கள் மற்றும் முன்புற ஃபெண்டர்களில் அலங்கார வேலைப்பாடுகளைக் காணலாம். முன் மற்றும் பின்பக்க பம்பர்களும் வேறுபடுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாடா சியரா காரின் உரிமையாளர் ஆர்.ஓ.க்யூ தொகுப்பிற்காக கூடுதலாக ரூ.41,000 செலவழித்தது மட்டுமில்லாமல், பெரிய 20-இன்ச் சக்கரங்களுக்காகவும் கூடுதலாக செலவு செய்துள்ளார். இதனால்தான், இந்த குறிப்பிட்ட சியரா கார் ஆனது மற்ற அனைத்து சியரா கார்களில் இருந்தும் தனித்து தெரிகிறது. இருப்பினும், இவ்வாறான மாடிஃபிகேஷன் பணிகளால் காரின் இன்ஸ்சூரன்ஸ் பாதிக்கும் என்பதை மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications









