டவுசர் போட்டுக்கொண்டு காரை டெலிவிரி பெற்றவர் இவ்வளவு பெரிய நடிகரா? வாங்கிய டாடா கார் செம்ம சூப்பர்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சியரா கார் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விளைவாக, பலரும் சியரா காரை ஆர்வத்துடன் வாங்கி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், 62 வயதான அனுபவம் மிக்க நடிகர் ஒருவர் பிராண்ட்-நியூ டாடா சியரா கார் ஒன்றை டெலிவிரி பெற்றுள்ளார். இதுகுறித்தும், அவர் வாங்கியுள்ள சியரா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சினிமா பிரபலங்கள் என்றாலே மெர்சிடிஸ், BMW, ஆடி போன்ற விலையுயர்ந்த கார்களை தான் வாங்குவர் என்கிற பார்வை நம் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அதுவும் பாலிவுட் துறையை சேர்ந்தவர்கள் அடிக்கடி கார்களை வாங்கினாலும் வாங்கும் அனைத்து கார்களும் லக்சரி தரத்தில்தான் இருக்கும் என நம்மில் நிறைய பேர் நினைக்கின்றனர்.

television actor manoj pahwa takes delivery tata sierra suv car

ஆனால் உண்மையில், சினிமா பிரபலங்களும் பட்ஜெட் விலையிலான கார்களை வாங்குவது உண்டு. குறிப்பாக, மார்க்கெட்டில் புதியதாக ஏதாவது ஒரு கார் அறிமுகம் செய்யப்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு விலை குறைவான கார் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தாலோ அதனை முதலாவதாக வாங்குவது சினிமா பிரபலங்கள் தான். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் டாடா சியரா காரை வாங்கியுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை... பாலிவுட்டில் பல ஹிட் அடித்த திரைப்படங்களில் நடித்தவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அனுபவம் மிக்கவருமான நடிகர் மனோஜ் பஹ்வா ஆவார். ஹம் லாக் மற்றும் ஆபிஸ் ஆபிஸ் என்கிற டிவி சீரியல்கள் மூலம் கவனத்தை பெற்ற நடிகர் மனோஜ் பஹ்வா அதன் மூலம் தபாங் 2 மற்றும் ஜாலி LLB போன்ற வெற்றிப் பெற்ற திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

television actor manoj pahwa takes delivery tata sierra suv car

இவர்தான் தற்போது புத்தம் புதிய டாடா சியரா கார் ஒன்றை டெலிவிரி பெற்றுள்ளார். இதுதொடர்பான படங்கள் 'ட்ரிடெண்ட் டாடா' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இந்த படங்களில், டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப் ஷோரூமில் குடும்பத்துடன் நடிகர் மனோஜ் பஹ்வா பிராண்ட்-நியூ சியரா காரை டெலிவிரி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சியரா காருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைப்பதால், அதனை முன்பதிவு செய்துவிட்டு அதிக நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. காரை முன்பதிவு செய்யும்போது, இதனை நடிகர் மனோஜ் பஹ்வாவும் அறிந்திருந்தார். காரை முன்பதிவு செய்துவிட்டு மாதக்கணக்கில் டெலிவிரிக்காக காத்திருக்க வேண்டி வருமோ என பயந்தார்.

ஆனால், விரைவாக காரை டெலிவிரி பெற சம்பந்தப்பட்ட டாடா டீலர்ஷிப் ஷோரூம் அதிகாரிகள் நடிகர் மனோஜ் பஹ்வாவுக்கு உதவியுள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றியையும் காரை டெலிவிரி பெறும்போது மனோஜ் பஹ்வா தெரிவித்துள்ளார். காரை டெலிவிரி பெறும்போது நடிகர் மனோஜ் பஹ்வாவின் மனைவியும், நடிகையுமான சீமா பஹ்வாவும் உடன் இருந்தார்.

காரை டெலிவிரி எடுப்பதற்கு முன் மனோஜ் பஹ்வாவின் குடும்பம் ஷோரூமில் கேக் வெட்டி கொண்டாடினர். டெலிவிரி பெற்ற பின், காரின் மறைப்பு நீக்கப்பட்ட பின்பு காருக்கு இந்து முறைப்படி பூஜை செய்யப்பட்டது. நடிகர் மனோஜ் பஹ்வா வாங்கியிருக்கும் இந்த குறிப்பிட்ட சியரா கார் மூணார் மிஸ்ட் நிறத்தில் உள்ளது. இவர் தேர்வு செய்திருப்பது சியரா காரின் அக்கம்ப்ளிஷ்டு+ வேரியண்ட் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா சியரா காரை இந்தியாவில் இதுவரையில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அதில் நடிகர் மனோஜ் பஹ்வாவும் ஒருவர் ஆவார். 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்டர் கியர்பாக்ஸ் உடன் இவர் வாங்கியிருக்கும் சியரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.21.29 லட்சம் ஆகும். ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும்.

Article Published On: Sunday, June 7, 2026, 22:51 [IST]
English summary
Television actor manoj pahwa takes delivery of tata sierra suv car
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out