இனி இதை பண்ணலேன்னா உங்க காரை விக்க முடியாது! மத்திய அரசு கொண்டு வந்த அதிரடி ரூல்ஸ்!

மத்திய அரசு இந்தியாவில் வாகனங்களை விற்பனை செய்ய புதிய விதியை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி இனி வாகனங்களை விற்பனை செய்யும் போது குறிப்பிட்ட சில கட்டணங்கள் நிலுவையில் இருந்தால் வாகனம் பெயர் மாற்றம் செய்ய முடியாது. இது போக அந்த வாகனத்திற்கு ஃபிட்னஸ் சான்று வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நீங்கள் உங்கள் காரை விற்கும் மனநிலையில் இருக்கிறீர்களா? அல்லது உங்கள் வாகனத்திற்கான ஃபிட்னஸ் சான்று வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கான முக்கியமான செய்தியை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இப்படியாக வாகன விற்பனை மற்றும் ஃபிட்னஸ் சான்றுக்கான புதிய விதிமுறைகளை அரசு கொண்டு வந்துள்ளது.

Toll Due Clearance

தற்போது கார்களை விற்பனை செய்யும் போது அதன் உரிமத்தை மாற்றுவோம். இனி கார்களை விற்பனை செய்பவர்கள் உரிமத்தை மாற்ற விண்ணப்பிக்கும்போது வாகனத்திற்கான சுங்ககட்டணம் வசூல் பாக்கியிருந்தால் அந்த உரிம மாற்றத்தை செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. வாகனத்தின் சுங்க கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்ட பின்பே உரிமத்தை மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நேரடியாக மத்திய மோட்டார் வாகன சட்டத்திலேயே திருத்தமாக கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது இந்தியாவில் உள்ள சுங்கசாவடிகளை மல்டிலேன் ஃப்ரீ ஃப்ளோ என்ற முறையில் சுங்கசாவடிகளை மாற்ற திட்டமிட்டுள்ளது. இதன்படி சுங்கசாவடிகளில் தற்போது உள்ள முறைபடி ஃபாஸ்ட்டேக் கார்டுகளை ஸ்கேன் செய்யும் வரை வாகனத்தை நிறுத்த தேவையில்லை.

Toll Due Clearance

மாறாக சுங்கசாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டை ரீட் செய்யும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது அந்த வழியாக செல்லும் வாகனங்களின் நம்பர்பிளேட்டை ரீட் செய்து அதில் உள்ள நம்பருக்கு ஆன்லைன் மூலம் தற்போது எப்படி ஃபாஸ்ட் டேக் கார்டில் எப்படி பணம் கழிக்கப்படுகிறதோ அதே போல கழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான சோதனை முயற்சிகள் துவங்கப்பட்டுவிட்டது. வருங்காலத்தில் அனைத்து சுங்கசாவடிகளிலும் இது அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உள்ள வாகன விதிமுறைப்பபடி இனி சுங்கசாவடி கட்டண பாக்கி உள்ள வாகனங்களுக்க வாகனத்தை உரிமம் மாற்றம் செய்ய தடையில்லாத சான்று வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல வாகனத்தின் பதிவெண்ணை நீக்கி வேறு மாநிலத்திற்கு வாகனத்தை மாற்றமும் முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toll Due Clearance

இது மட்டுமல்ல வாகனத்திற்கான ஃபிட்னஸ் சான்று மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கு பெர்மிட் வழங்குவது உள்ளிட்டவைகளும் இனி செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமத்தை மாற்ற பாரம் 28 தேவை இதில்இனி வாகனத்திற்கான சுங்கசாவடி கட்டண பாக்கி குறித்த தகவல் இடம் பெற வேண்டும். பாக்கி கட்டணம் இருந்தால் தடையில்லா சான்று வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது மட்டுமல்ல குறிப்பிட்ட நாட்களுக்குள் சுங்ககட்டணம் செலுத்தவிட்டவில்லை என்றால் வாகன உரிமையாளருக்கு இ நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும் அதற்கும் பதில் இல்லை என்றால் அவரது ஃபாஸ்ட்டேக் கார்டு முடஙக்கப்படும். இதற்கான அபராதங்களும் விதிக்கப்படும். புதிய விதிமுறையில் சுங்கசாவடியில் மாற்றம் வரும் போது 3 -15 சதவீதம் வரை சுங்க கட்டணம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 22, 2026, 16:10 [IST]
English summary
Toll due clearance mandatory before vehicle transfer
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X