ஸ்டீயரிங் சக்கரம் பூ போல செயல்படும்... சிட்டிக்குள் பெண்கள் ஓட்ட போறாங்கன்னா இதில் ஒரு காரை வாங்கலாம்!!

இன்றைய இந்தியாவில் பெண்களுக்கு ஏற்ப எளிதாக ஹேண்ட்லிங் செய்யக்கூடிய கார் மாடல்களில் காம்பாக்ட் எஸ்யூவிகள் (Compact SUVs) தனி இடத்தைப் பிடித்துள்ளன. மேம்பட்ட டிரைவிங் நிலை, இலகுவான ஸ்டீயரிங் மற்றும் நகரப் பயணங்களுக்கு உகந்த வசதிகள் ஆகியவை இத்தகைய எஸ்யூவி கார்களின் சிறப்பம்சங்கள் ஆகும். எளிமையான ஹேண்ட்லிங், சிறந்த சாலை பார்வை மற்றும் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற நடைமுறை கேபின் வசதிகள் கொண்ட அத்தகைய காம்பாக்ட் எஸ்யூவி கார்களுள் சிறந்த ஐந்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கார் வாங்கும் பெண்கள் எளிதான பார்க்கிங் மற்றும் தெளிவான சாலைப் பார்வையினை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், மதுரை போன்ற மாநகரங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள் போக்குவரத்து நெரிசலிலும் மற்றும் குறுகலான சந்துகளிலும் எளிதாக பயன்படுத்துவதற்கு இலகுவான ஸ்டீயரிங் வசதியை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல், உயர்ந்த சீட் பொசிஷன் ஆனது கார் ஓட்டும்போது காருக்குள் இருந்து காருக்கு வெளியே ஓரங்களையும் அருகிலுள்ள வாகனங்களையும் கணிக்க உதவுகிறது.

compact suv cars for female drivers

பாதுகாப்பையும், சௌகரியத்தையும் கருத்தில் கொண்டு, இந்த ஐந்து எஸ்யூவி கார் மாடல்கள் மேற்கூறிய தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. சில பெண்களுக்கு அதிக போக்குவரத்து நெரிசலில் வாகனம் ஓட்டுவது இன்னும் மன அழுத்தத்தைத் தரக்கூடியதாக உள்ளது. அளவில் பெரியதான கார்களை அன்றாடம் ஓட்டுவது கடினமாகத் தோன்றலாம். காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் அவற்றின் சிறிய வடிவமைப்புடன் இந்த கவலையைக் குறைக்கின்றன.

அத்தகைய காம்பாக்ட் எஸ்யூவி காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) மற்றும் குறைந்த வேகத்தில் இலகுவாக செயல்படும் ஸ்டீயரிங் சக்கரம் ஆகியவை ஓட்டுநர் அனுபவத்தை மேலும் சவுகரியமாக்குகின்றன. ஸ்டீயரிங்கின் எடை, இருக்கை உயரம், காருக்குள் இருந்து டிரைவருக்கான முன் மற்றும் பக்கவாட்டுப் பார்வை ஆகியவை இந்த பட்டியலில் உள்ள முக்கிய காரணிகளாகும்.

கேபின் வடிவமைப்பு, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் இங்கே முக்கியம் ஆகும். இந்த அம்சங்கள் பெண் டிரைவர்களுக்கு மட்டுமில்லாமல், புதிய ஓட்டுநர்கள் மற்றும் உயரம் குறைவானவர்களுக்கும் பெரிதும் உதவுகின்றன. பெண்கள் அன்றாடம் மேற்கொள்ளும் பள்ளிப் பயணம் மற்றும் அலுவலகப் போக்குவரத்து போன்ற அன்றாடப் பயணங்களை இவை சோர்வில்லாமல் ஆக்குகின்றன.

compact suv cars for female drivers

ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue), இலகுவான ஸ்டீயரிங் மற்றும் மென்மையான ஆட்டோமேட்டிக் வசதிகளுடன் வருகிறது. இந்த காரின் பெரும்பாலான வேரியண்ட்களில் ஓட்டுநர் இருக்கையின் உயரத்தைச் சரிசெய்யலாம். டேஷ்போர்டு வடிவமைப்பு சாலைப்பாதையின் தெளிவான பார்வையினை வழங்குகிறது. எளிமையான கட்டுப்பாடுகள் மற்றும் தெளிவான கேமரா வசதியை பல பெண்கள் விரும்புகின்றனர். இது, அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களுக்கு மட்டுமின்றி புதிய ஓட்டுநர்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

compact suv cars for female drivers

கியா சொனெட் (Kia Sonet), வென்யூவுடன் ஒப்பிடுகையில் இது ஒத்த அம்சங்களைக் கொண்டுள்ளது. நகரப் பயணங்களில் இதன் ஸ்டீயரிங் இலகுவாகவும், பார்க்கிங் செய்ய எளிமையானதாகவும் உள்ளது. அகலமான கண்ணாடிகள் மற்றும் தெளிவான பின்பக்க கேமரா குறுகிய இடங்களிலும் சமாளித்து பயணிக்க உதவுகின்றன. கேபினில் பல அம்சங்கள் இருந்தாலும், பயன்படுத்த எளிதாக உள்ளன. பல இளம் பெண்கள் சொனெட்டின் ஸ்டைலான வடிவமைப்பைப் பெரிதும் விரும்புகின்றனர்.

compact suv cars for female drivers

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), எளிமையான மற்றும் பயனர் நட்புடைய கார் ஆகும். இதன் செங்குத்தான முன்பக்க விண்ட்ஷீல்டு பகுதி சிறந்த பார்வையினை வழங்குகிறது. நகரப் பயணங்கள் மற்றும் வேகத்தடைகளில் இதன் ஸ்டீயரிங் சக்கரம் இலகுவாகச் செயல்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதி போக்குவரத்து நெரிசலுக்கு உதவுகிறது. தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு மாருதியின் பரந்த சர்வீஸ் நெட்க்வொர்க் ஒரு முக்கிய வசதியாக இருக்கும்.

compact suv cars for female drivers

டாடா நெக்ஸான் (Tata Nexon), உறுதியான கட்டுமானத்தையும், நம்பிக்கையான தோற்றத்தையும் கொண்டுள்ளது. பல பெண்கள் இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களையும், திடமான இயக்கத்தையும் பாராட்டுகின்றனர். உயர்ந்த டிரைவர் சீட் பொசிஷன் போக்குவரத்து மற்றும் மற்ற வாகனங்களைக் கண்காணிக்க உதவுகிறது. நகரப் பயன்பாட்டிற்கு ஏற்ப ஸ்டீயரிங் இலகுவாக உள்ளது, மேலும் தேர்ந்தெடுக்கக்கூடிய டிரைவ் மோட்களும் உள்ளன. இது நெடுஞ்சாலைகள் மற்றும் நெரிசலான சந்துகள் என இரண்டிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது.

compact suv cars for female drivers

நிசான் மேக்னைட் (Nissan Magnite), பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்பும் நகரவாசிகளுக்காகவே விற்பனை செய்யப்படும் கார் இது ஆகும். சிறிய பரப்பளவிலேயே யு-டர்ன் அடிக்கடி கூடிய இத்தகைய கார்கள் நெரிசலான இடங்களிலும் பார்க்கிங்கை எளிதாக்குகின்றன. குறிப்பாக சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இந்த காரின் ஸ்டீயரிங் மிகவும் இலகுவாக உள்ளது. பெரிய ஜன்னல்கள் நகர போக்குவரத்திற்கு போதுமான பக்கவாட்டுப் பார்வையினை வழங்குகின்றன. இது புதியதாக கார் கற்றுக்கொள்பவர்களுக்கும், எப்போதாவது வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ஏற்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேற்கண்ட கார் மாடல்கள் சிறந்த சாலை பார்வை, ஸ்டீயரிங் உணர்வு மற்றும் ஆட்டோமேட்டிக் வசதிகளின் அடிப்படையில் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன என்பதன் ஒரு சுருக்கமான கண்ணோட்டம் ஆகும். கார் வாங்குவோர் டெஸ்ட் டிரைவ்களை மேற்கொள்வதற்கு முன் இவற்றை தெரிந்துக் கொள்வது நல்லது. காரின் வேரியண்ட் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளை அந்தந்த உள்ளூர் டீலர்களிடம் எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

பல பெண் ஓட்டுநர்கள் இன்னமும் மோசமான சாலைகள் மற்றும் கவனக்குறைவான வாகன ஓட்டிகள் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். சிறந்த சாலை பார்வையினை வழங்கும் காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் இந்த கவலையைக் குறைக்கும். இலகுவான ஸ்டீயரிங் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் வசதிகள், நீண்ட தூர பயணங்களுக்குப் பிறகு ஏற்படும் சோர்வைக் குறைக்கின்றன. முன்பதிவு செய்வதற்கு முன், கவனமாக டெஸ்ட் டிரைவ்களை மேற்கொள்வது மற்றும் இருக்கை சௌகரியம் & பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்வது அத்தியாவசியமானது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 5, 2026, 5:00 [IST]
English summary
Top 5 compact suv cars for female drivers hyundai venue and kia sonet and tata nexon
மேலும்... #suv car #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X