புதிது போல் மாற்றப்பட்ட அம்பாசடர் கார்... கிருஷ்ணகிரி டார்க்மேக்ஸ் கைவண்ணத்தில் அழகோ, அழகு!!

ஒரு காலத்தில் இந்திய சாலைகளின் அடையாளமாக இருந்த ஹிந்துஸ்தான் அம்பாசடர் கார், இன்று அரிதாகவே சாலைகளில் தென்படுகிறது. ஆனால் பழைய கார்களை மீண்டும் புதுப்பித்து உயிர்ப்பிக்கும் ஆர்வலர்களால், இந்த செடான் கார் இன்றும் புதிய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த டார்க்மேக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அழகான அம்பாசடர் கார் சமூக வலைத்தளம் மூலமாக தற்போது கவனம் பெற்றுள்ளது. 'Ambassador Love - The Signature Edition' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த கார், அதன் பழமையான தோற்றத்தை பாதுகாத்தபடியே மிக நேர்த்தியாக சீரமைக்கப்பட்டு உள்ளது.

Hindustan Ambassador Restoration

இந்த காரின் மிகப்பெரிய சிறப்பு அதன் வெளிப்புற தோற்றத்தில் இருக்கிறது. பழைய அம்பாசடர் காரின் அடையாளமான வட்ட வடிவ ஹெட்லைட்டுகள், நீளமான முன்பக்க கிரில், வளைந்த முன்புற பானட் அமைப்பு மற்றும் பாரம்பரிய டிசைன் தாத்பரியங்கள் ஆகியவை அப்படியே பாதுகாக்கப்பட்டுள்ளன.

Also Read

அதே நேரத்தில், காருக்கு வழங்கப்பட்டுள்ள ஆழமான பச்சை வண்ணம் அழகு சேர்க்கிறது. மேலும், அதன் பாரம்பரியத்தை மேலும் அழகாக வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, கார் முழுவதும் வெளிப்புறத்தில் காணப்படும் பளபளப்பு பூச்சு காரணமாக இந்த சீரமைப்புப் பணியில் கொடுக்கப்பட்டுள்ள கவனத்தை வெளிப்படுத்துகிறது.

பழைய கார்களை மறுசீரமைப்பு செய்யும்போது அதன் வடிவமைப்பில் எந்த ஒரு பிசகும் இல்லாமல் புதிய காரைப் போல மாற்றுவது சவாலான விஷயமாக இருக்கும். அதுவும் அம்பாசடர் போன்ற பழைய கார்களுக்கு இது இன்னும் முக்கியமானது. ஏனெனில் அம்பாசடர் காரின் டிசைன், க்ரோம் பாகங்கள், ஹெட்லைட் டிசைன், உட்புற வடிவமைப்பு உள்ளிட்டவை அதன் காலகட்டத்துடன் நெருக்கமாக தொடர்புடையவை.

எனவே, மறுசீரமைப்புப் பணியில் அவற்றை அவற்றை அதிகமாக மாற்றிவிட்டால், அது அம்பாசடர் என்ற அடையாளத்தையே இழந்துவிடும். ஆனால், கிருஷ்ணகிரியை சேர்ந்த டார்க்மேக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் இந்த காரை சிறப்பாகவே மாற்றி அசத்தி உள்ளது. மேலும், முன்னாள் தமிழக முதலமைச்சர் காமராஜருடன் தொடர்புடையதாக கூறப்படும் 1952 செவர்லே ஸ்டைல் லைன் டீலக்ஸ் காரை டார்க்மேக்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம்தான் மறுசீரமைப்பு செய்ததாக டீம் பிஎச்பி தளத்தின் செய்தி தெரிவிக்கிறது.

Also Read

ஹிந்துஸ்தான் அம்பாசடர் என்பது வெறும் பழைய கார் மட்டுமல்ல. பல தசாப்தங்களாக இந்திய அரசியல், நிர்வாகம், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையுடன் இணைந்திருந்த ஒரு வாகனம். அம்பாசடர் கார் நீண்ட காலம் உற்பத்தியில் இருந்தது. Mk II, Mk III, Mk IV, Nova, Classic, Grand போன்ற பல தலைமுறைகள் மாற்றங்களுடன் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டன.

இன்றைய எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் வகை கார்கள் ஆதிக்கம் உள்ள உலகில், அம்பாசடர் காரின் தனித்துவமான செடான் வடிவமைப்பு, வசதியான கேபின், எளிமையான மெக்கானிக்கல் பாகங்கள் உள்ளிட்டவை முற்றிலும் வேறுபட்ட அனுபவத்தை வழங்குவதாக இருக்கும். அந்த வகையில், இந்த காரை பார்க்கும்போது, இது வெறும் பழைய அம்பாசடர் காரை மறுசீரமைப்பு செய்வதைவிட ஒரு தனித்துவமான அடையாளத்தை மீண்டும் கொண்டு வரும் முயற்சியாக பார்க்கலாம்.

Article Published On: Wednesday, September 9, 2026, 15:26 [IST]
English summary
Torquemax automotive restored hindustan ambassador signature edition krishnagiri
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out