இதை 5 டைம் திரும்ப பண்ணா உங்க லைசென்ஸே கேன்சல் ஆகிடும்! பாதி பேருக்கு இந்த ரூல்ஸ் இருக்குறதே தெரியாது!

இந்தியாவில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் போக்குவரத்து வாகன சட்ட விதிமுறையில் சில மாற்றங்களை செய்துள்ளனர். அதன்படி ஒரு வாகன ஓட்டுநர் ஒரே ஆண்டில் 5 அல்லதுஅதற்கும் மேற்பட்ட சட்டவிதிமுறை மீறல்களை செய்தால் அவரது உரிமம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவரது உரிமம் இடைநீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் சாலையில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். இவர்கள் மீண்டும் மீண்டும் தவறு செய்து அதற்கான அபராதங்களை செலுத்த வருகின்றனர். விதிமுறைகளை மீறும் பலர் மீண்டும் மீண்டும் விதிமுறை மீறலில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது.

Traffic Violations New Rules

இந்நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டது. அதன்படி தொடர்ந்து விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்களின் உரிமமம் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரே ஆண்டில் 5 முறை அல்லது அதற்கு மேல் மோட்டார் வாகன சட்டவிதி முறையை மீறியவர்களின் ஓட்டுநர் உரிமம் மீது நடவடிக்கை எடுக்க சட்டதிருத்தத்தை செய்துள்ளது.

இந்த சட்டவிதிமுறைப்படி ஹெல்மெட் அணிவது, சீட்பெல்ட் அணியாமல் இருப்பது, சிவப்பு லைட் எரியும் போது சிக்னலை கடப்பது, பார்க்கிங் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, அதிக பாரம் ஏற்றி வருவது, வாகன திருட்டு, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களை தொடர்ந்து செய்பவர்களுக்கு இது பொருந்தும். இந்த குற்றங்களை ஒரே ஆண்டில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட முறை பயன்படுத்தினால் அவர்களுக்கு மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Traffic Violations New Rules

என்ன நடவடிக்கை என்ற முடிவை ஆர்டிஓ எடுக்க முடியும். அவர் அதிகபட்சமாக ஓட்டுநர் உரிமம் இடைநீக்கத்தை செய்ய முடியும். எவ்வளவு காலம் இடைநீக்கம் என்பது எல்லாம் ஆர்டிஓ முடிவு செய்வது தான். 3 மாதம் முதல் பல ஆண்டுகள் வரை கூட இந்த உரிமம் சஸ்பெண்ட் செய்ய முடியும்.

இந்த 5 குற்றங்கள் பட்டியலில் 24 விதமான குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் சிறிய சிறிய போக்குவரத்து மீறல்கள் கூட அடங்கும். அப்படி பார்த்தால் சின்ன சின்ன மீறல் 5 முறை ஒரே ஆண்டில் செய்தால் அவர்களது ஒட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் இனி வாகன ஓட்டிகள் அபராதம் விதிக்கப்படுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

Traffic Violations New Rules

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்ந்து மீறப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்றி அபராதத்திலிருந்து தப்பிக்கொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Sunday, January 25, 2026, 14:30 [IST]
English summary
Traffic violations new rules five violations license year
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X