கடைசியா படம் நடிச்சு 2 வருஷம் ஆகிடுச்சு... ஆனாலும் பிராண்ட்-நியூ காருடன் பிரபல டிவி தொகுப்பாளனி!
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளனியான DD என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி புதியதாக டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வீடியோ லான்சன்.டொயோட்டா என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. லான்சன்.டொயோட்டா தான் சம்பந்தப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம் ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா கார்களுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு இன்னோவா கார்களின் பருமனான உடலமைப்பிற்காகவும், ஆற்றல்மிக்க என்ஜினுக்காகவும் அதிக பேர் வாங்குகின்றனர். அப்பர் மிடில்-கிளாஸ் மக்கள் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் இன்னோவா கார்களை ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

அந்த வரிசையில்தான் தற்போது தொகுப்பாளனியும், சினிமா நடிகையுமான திவ்யதர்ஷினி இன்னோவா ஹைகிராஸ் காரை வாங்கியுள்ளார். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், பளபளக்கும் வெள்ளை நிறத்திலான இன்னோவா ஹைகிராஸ் காரை நேரில் வந்து டிடி டெலிவிரி பெறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இன்னோவா ஹைகிராஸ் ஆனது டொயோட்டாவின் ஹைப்ரீட் கார் ஆகும். அதேநேரம், வெறும் பெட்ரோல் என்ஜின் உடனும் இந்த காரை வாங்கலாம். ஹைப்ரீட் வெர்சனில் 2 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார் கிடைக்கிறது. அதுவே, பெட்ரோல் வெர்சனில் வெறும் பெட்ரோல் என்ஜின் மட்டுமே வழங்கப்படுகிறது.

இதில் எந்த வெர்சனில் இன்னோவா ஹைகிராஸ் காரை நடிகை டிடி வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. 2 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மட்டும் அதிகப்பட்சமாக 173 பிஎச்பி மற்றும் 209 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
அதுவே, எலெக்ட்ரிக் மோட்டார் உடன் இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் காரில் 184 பிஎச்பி மற்றும் 188 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். ஹைப்ரீட் இன்னோவா காரில் e-CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரீட் காரில் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 23.24கிமீ வரையிலான மைலேஜை பெறலாம் என டொயோட்டா கூறுகிறது.
இன்னோவா ஹைகிராஸ் காரின் முக்கிய சிறப்பம்சம் அது 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் ஆப்ஷன்களில் கிடைப்பதாகும். வழக்கமான லேடார்-ஆன்-ஃபிரேமில் இல்லாமல் TNGA எனப்படும் மோனோகாக் பிளாட்ஃபாரத்தில் MPV வகையை சேர்ந்த காராக இன்னோவா ஹைகிராஸ் உருவாக்கப்படுகிறது. GX, GX (O), VX, VX (O), ZX மற்றும் ZX (O) என ஆறு விதமான வேரியண்ட்களில் இன்னோவா ஹைகிராஸ் விற்பனை செய்யப்படுகிறது.
பளபளக்கும் பிளாகிஷ் அகேஹா ஃப்ளேக், சூப்பர் வெள்ளை, பிளாட்டினம் வெள்ளை பேர்ல், சில்வர் மெட்டாலிக், ஆட்டிட்யூட் பிளாக் மைகா, ஸ்பார்க்லிங் பிளாக் பேர்ல், கிரிஸ்டல் ஷைன் மற்றும் கார்டே வெண்கலம் மெட்டாலிக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா நிறுவனம் வழங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா இன்னோவா கார்களின் ஹைப்ரீட் வெர்சனாக உருவாக்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸின் விற்பனை சமீபத்தில்தான் 2 லட்சம் யூனிட்கள் என்கிற மைல்கல்லை கடந்தது. அந்த 2 லட்சம் கஸ்டமர்களுடன் தொகுப்பாளனியும், நடிகையுமான டிடி எனப்படும் திவ்யதர்ஷினியும் இணைந்துள்ளார். இன்னோவா ஹைகிராஸின் எந்த வேரியண்ட்டை இவர் வாங்கியுள்ளார் என்பது தெரியாவிடினும், எங்களது கணிப்பின்படி விலையுயர்ந்த டாப் வேரியண்ட்டையே வாங்கி இருப்பார். இன்னோவா ஹைகிராஸின் டாப் வேரியண்ட்டின் ஆன்-ரோடு விலை ரூ.41 லட்சம் வரையில் தற்சமயம் உள்ளது.


Click it and Unblock the Notifications