டிவி சீரியல் தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்... சந்தோஷத்தில் வாங்கப்பட்ட BMW கார்!
டிவி சீரியல்களில் ஜோடியாக நடிக்கும் நிஜ உலக தம்பதிகள் பலரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். அவ்வாறான ஒரு இந்தி சின்னத்திரை தம்பதி தான் திவ்யங்கா திரிபாதி- விவேக் தஹியா ஆவர். ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிப்பரப்பப்பட்டு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற 'யே ஹாய் மோஹாப்படின்' என்கிற இந்தி டிவி சீரியலில் நடித்து பிரபலமாகியவர், நடிகை திவ்யங்கா திரிபாதி ஆவார்.
இவருக்கும், டிவி சீரியல் நடிகரான விவேக் தஹியாவுக்கும் 2016ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர தம்பதிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. அதுவும், ஒரே நேரத்தில் இரு குழந்தைகளாக ட்வின்ஸ் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனால் இந்த தம்பதியின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த மகிழ்ச்சியோடு கூடுதல் மகிழ்ச்சியாக இந்த நட்சத்திர தம்பதி புதியதாக விலையுயர்ந்த BMW கார் ஒன்றை வாங்கியுள்ளனர். தங்களது இரட்டை குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதற்காகவே இந்த புத்தம் புதிய BMW காரை இவர்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் 'இன்ஸ்டண்ட் பாலிவுட்' என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படங்களின் மூலம் பார்க்கும்போது, திவ்யங்கா திரிபாதி- விவேக் தஹியா தம்பதியினர் புதியதாக வாங்கியிருப்பது, BMW X7 என்கிற லக்சரியான எஸ்யூவி கார் ஆகும். இந்தியாவில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.26 கோடியில் இருந்து துவங்குகின்றன. அதிகப்பட்சமாக ரூ.1.33 கோடி வரையில் உள்ளன.

சிக்னெச்சர் எடிஷன், எக்ஸ் டிரைவ் 40ஐ எம் ஸ்போர்ட், எக்ஸ் டிரைவ் 40டி DPE 7-சீட்டர், எக்ஸ் டிரைவ் 40டி எம் ஸ்போர்ட் மற்றும் எக்ஸ் டிரைவ் 40டி எம் ஸ்போர்ட் புரோ என ஐந்து விதமான வேரியண்ட்களில் இந்தியாவில் பிஎம்டபிள்யூ X7 கார் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் எந்த வேரியண்ட்டில் இந்த காரை திவ்யங்கா திரிபாதி- விவேக் தஹியா தம்பதியினர் வாங்கியுள்ளனர் என்பது உறுதியாக தெரியவில்லை. பொதுவாக, ஸ்பெஷல் எடிஷன் கார்கள் விலைமிக்கவை ஆக விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால், எக்ஸ்7 காரில் சிக்னெச்சர் எடிஷன் ஆனது விலை குறைவான எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வேரியண்ட்டை பொறுத்து பெட்ரோல் என்ஜின் அல்லது டீசல் என்ஜின் உடன் இந்த காரை பெறலாம். எந்த என்ஜின் உடன் காரை வாங்கினாலும், இந்த காரில் 48 வோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார் கிடைக்கும். ஆதலால், BMW X7 ஆனது ஓர் மைல்ட்-ஹைப்ரீட் கார் ஆகும். 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரில் வழங்கப்படுகிறது.
தோற்றத்தை பொறுத்தவரையில், முன்பக்கத்தில் கிட்னி வடிவிலான க்ரில், காற்று உள்ளே செல்வதற்கான துளைகளில் க்ரோம் இன்செர்ட்கள், 3டி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை X7 காரின் வெளிப்பக்கத்தில் வழங்கப்படுகின்றன. அதுவே உட்புறத்தில், டாஷ்போர்டில் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை மற்றும் 14.9 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த BMW X7 காரை நேவி நீல நிறத்தில் இந்த டிவி சீரியல் தம்பதியினர் வாங்கியுள்ளனர். பிறந்த குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து அழைத்து வருவதற்காகவே பல கோடி ரூபாய் விலையில் புதிய காரை இவர்கள் வாங்கியிருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இரட்டை குழந்தைகள் பிறந்த ராசியும், புதிய BMW X7 காரை வாங்கிய ராசியும் இந்த நட்சத்திர தம்பதியின் வாழ்வை எந்த அளவிற்கு புரட்டிப் போட போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
முகப்பு படம் மாற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications