வெறும் 6,000 ரூபாய்க்கு கார் வாங்கிய தமிழக வெற்றி கழக வேட்பாளர் செங்கோட்டையன்

தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் இன்று வெளிவர இருக்கும் நிலையில், முக்கிய வேட்பாளர்கள் மற்றும் வெற்றி வேட்பாளர்கள் குறித்த ருசிகர தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் முக்கிய தலைவர்களுள் ஒருவரான செங்கோட்டையன் குறித்த ருசிகரமான தகவல் ஒன்று நமக்குக் கிடைத்திருக்கிறது.

ஒரு வேட்பாளர் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று பார்க்கும் அதே நேரத்தில், அவர் என்னென்ன விதமான வாகனங்களைப் பயன்படுத்துகிறார் என்பது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் முக்கியமான தவெக தலைவரான செங்கோட்டையனிடம் உள்ள வாகனங்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.

Toyota Innova Crysta

தன்னிடம் சுமார் ஆறு வாகனங்கள் இருப்பதாக செங்கோட்டையன் தன்னுடைய வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அதில் 1985-ல் வாங்கிய அம்பாஸிடர் கார் முதல் கடந்த 2025ம் ஆண்டு வாங்கிய இன்னோவா வரையிலான கார்கள் மற்றும் டிராக்டர்கள் அடக்கம். வேட்புமனுவில் குறிப்பிட்டிருப்பதன்படி அவரிடம் தற்போது மூன்று டிராக்டர்களும், மூன்று கார்களும் உள்ளன.

1985-ல் முதன் முதலாக அம்பாஸிடர் கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். இதில் ருசிகரமான விஷயம் என்னவென்றால், அப்போது அதன் விலை வெறும் ரூ.5,973 மட்டுமே. இப்போது அது போன்ற சிறப்பான ஒரு காரை வாங்க ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நாம் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதேபோல் 1987-ல் ஃபோர்டு டிராக்டர் ஒன்றையும் வெறும் ரூ.7,400-க்கு அவர் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Ambassador

இதனைத் தவிர்த்து சிம்பா சீரிஸ் டிராக்டர் மற்றும் நியூ ஹோலாண்டு டிராக்டர் ஆகிய டிராக்டர் மாடல்களும் செங்கோட்டையனிடம் உள்ளன. கார்களில் அம்பாஸிடரைத் தவிர்த்து இரண்டு டொயோட்டா இன்னோவா கார்களையும் வைத்திருக்கிறார் அவர். வேட்புமனுவில் குறிப்பிட்டிருப்பதன்படி, இதில் ஒரு இன்னோவா காரை 2019ம் ஆண்டிலும், மற்றொன்று 2025ம் ஆண்டிலும் அவர் வாங்கியிருக்கிறார். இரண்டு இன்னோவா கார்களுமே கிட்டத்தட்ட ரூ.25 லட்சம் மதிப்புடையவை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு டிராக்டர்களில் ஒன்றை ரூ.8.10 லட்சம் விலையிலும், மற்றொன்றை ரூ.9.75 லட்சம் என்ற விலையிலும் அவர் வாங்கியிருக்கிறார். ஒட்டுமொத்தமாக ரூ.67.95 லட்சம் மதிப்புடைய வாகனங்கள் செங்கோட்டையனிடம் உள்ளன. இதில் மற்றொரு ருசிகரமான அம்சமும் இருக்கிறது. செங்கோட்டையனுக்கு 3 மற்றும் 9 ஆகிய எண்கள் பிடித்தமானவையாக இருக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில் அவருடை வாகனங்களின் பதிவெண்கள் இதனைச் சுற்றியே உள்ளன.

அவருடைய அம்பாஸிடர் கார், நியூ ஹோலாண்டு டிராக்டர் மற்றும் ஒரு இன்னோவா கார் ஆகியவை 9393 என்ற பதிவெண்ணைக் கொண்டிருக்கின்றன. மற்றொரு இன்னோவா காரானது 3399 என்ற பதிவெண்ணைக் கொண்டுள்ளது. இதன் மூலம் 3, 9 மற்றும் அதன் மடங்கு எண்களை தனக்கு ஏற்றவையாக அவர் பார்ப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

2026 தமிழக தேர்தல் களத்தில் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறார் செங்கோட்டையன். தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் திமுகவை சேர்ந்த நல்லசிவத்தை விட 9,275 (தற்போதைய நிலவரப்படி) அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். கோபிசெட்டிபாளையும் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி 43,865 வாக்குகளைப் பெற்றிருக்கிறார் செங்கோட்டையன்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தங்கள் தொகுதியில் வெற்றி பெரும் வேட்பாளர் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அந்த வகையில் செங்கோட்டையனிடம் உள்ள வாகனங்கள் குறித்த விவரங்களை நாம் பார்த்தோம். இதன் மூலம் கடந்த 40 ஆண்டுகளில் கார் மற்றும் பைக்குகளின் விலை கணக்கில்லாத வகையில் உயர்ந்திருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடிந்தது. தற்போது முன்னிலையில் இருக்கும் அவர் வெற்றிபெறுவாரா இல்லையா என்பது இந்நாளின் முடிவில் தெரியவரும்.

Article Published On: Monday, May 4, 2026, 13:30 [IST]
English summary
Tvk candidate sengottaiyan brought ambassador car for just 6000 rupees
மேலும்... #cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+