நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் வாங்கிய புதிய கார்... அவரை போலவே காரும் முரட்டுத்தனமா இருக்கு!

மஹிந்திரா தார் ஆனது இந்தியாவின் பிரபலமான ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனமாக விளங்குகிறது. இதனாலேயே 3 கதவுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வந்த தார் வாகனத்தை 5 கதவுகளுடன் தார் ராக்ஸ் என்கிற பெயரில் கடந்த 2024ஆம் ஆண்டில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. இந்த அறிமுகத்திற்கு பின் தார் வாகனங்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

எந்த அளவிற்கு அதிகரித்தது என்றால், சாதாரண மக்களை தாண்டி சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளும் மஹிந்திரா தார் வாகனங்களை ஆர்வமாக வாங்க ஆரம்பித்தனர். குறிப்பாக அவர்கள் அதிகமாக வாங்குவது தார் ராக்ஸ் வாகனத்தையே ஆகும். அந்த வகையில் தற்போது ஒரு சினிமா பிரபலம் தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளார்.

actor kabir duhan singh buys mahindra thar roxx

அவர் யார் என்றால், நடிகர் அஜித்தின் வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபீர் துஹான் சிங் ஆவார். வேதாளம் மட்டுமின்றி பல மொழிகளில் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தனது தனித்துவமான நடிப்பு மூலம் கவனத்தை ஈர்த்த நடிகர் கபீர் துஹான் சிங் கருப்பு நிறத்திலான மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை வாங்கியுள்ளார்.

மஹிந்திரா டீலர்ஷிப் ஷோரூமில் இருந்து பிராண்ட்-நியூ தார் ராக்ஸ் வாகனத்தை கேக் வெட்டி கொண்டாடி டெலிவிரி பெற்றுள்ளார். ஷோரூமில் இருந்து டெலிவிரி எடுத்ததும் நேராக அருகில் உள்ள கோவிலுக்கு கொண்டு சென்ற நடிகர் கபீர் துஹான் சிங் அங்கு ஒரு சிறிய பூஜையை போட்ட பின்பே வாகனத்தை வீட்டிற்கு கொண்டுச் சென்றுள்ளார்.

actor kabir duhan singh buys mahindra thar roxx

இதுதொடர்பான காட்சிகள் அனைத்தையும் வீடியோவாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் பதிவில், "உலகிற்கு வேண்டுமாயின் இது காராக இருக்கலாம், ஆனால் எனக்கு, அத்தனை கடினமான நாட்களுக்கு பிறகு புன்னகைக்கும் என் உள்ளிருக்கும் குழந்தையே இது. இங்கு வந்து சேர என்னவெல்லாம் தேவைப்பட்டது என்பது எனக்கு மட்டுமே தெரியும். வீட்டிற்கு நல்வரவு, புதிய மிருகமே" என குறிப்பிட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவரான 39 வயதான கபீர் துஹான் சிங் ஆரம்பத்தில் இரு தெலுங்கு படங்களில் நடித்தார். அதன்பின், நடிகர் அஜித் உடன் வேதாளம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழில் நடிகர் விஜய் சேதுபதியின் றெக்க, காஞ்சனா 3, அருவம், விஷாலின் ஆக்‌ஷன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் கபீர் துஹான் சிங்கின் நடிப்பில் அடுத்ததாக 'கட்டாலன்' என்கிற மலையாள திரைப்படம் திரைக்குவர உள்ளது.

இதற்கிடையில்தான் புத்தம் புதிய மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை கருப்பு நிறத்தில் வாங்கியுள்ளார். இந்த கருப்பு நிறத்தை 'ஸ்டீல்த் பிளாக்' என மஹிந்திரா நிறுவனம் அழைக்கிறது. இது இல்லாமல், எவரெஸ்ட் வெள்ளை, டீப் ஃபாரஸ்ட், நெபுலா நீலம், பேட்டில்ஷிப் கிரே, பர்ண்ட் சியன்னா மற்றும் சிட்ரைன் மஞ்சள் கலர் ஆப்ஷன்களிலும் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது.

எம்.எக்ஸ்.1, எம்எக்ஸ்3, எம்எக்ஸ்5, ஏஎக்ஸ்3 எல், ஸ்டார் எடிஷன், ஏஎக்ஸ்5 எல் உள்ளிட்ட வேரியண்ட்களில் தற்சமயம் தார் ராக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஸ்டார் எடிஷன் ஆனது கடந்த 2026 ஜனவரி மாதத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது. 2 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் தார் ராக்ஸ் கிடைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.12.40 லட்சத்தில் இருந்து ரூ.22.82 லட்சம் வரையில் உள்ளன. ஆன்-ரோடு விலை என்றால் இன்னும் சில லட்சங்கள் அதிகமாக வரும். இத்தனை லட்சங்கள் விலை கொண்டதாக இருப்பினும் நடிகர் கபீர் துஹான் சிங் போன்ற பல மொழிகளில் நடித்துவரும் நடிகருக்கு இத்தகைய வாகனத்தை வாங்குவது எல்லாம் பெரிய விஷயமாகவே இருக்காது.

Article Published On: Sunday, May 24, 2026, 23:55 [IST]
English summary
Vedalam movie villain kabir duhan singh buys mahindra thar roxx suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+