கிளட்ச் புடிக்க தேவையில்ல, பிரேக் கொடுத்தா மட்டும் போதும்! கேடிஎம் கம்பெனியின் சூப்பர் ஐடியா!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்திற்குச் சொந்தமான ஆஸ்திரிய பைக் தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் (KTM), தனது பைக்குகளில் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (Automated Manual Transmission - AMT) கியர்பாக்ஸை அறிமுகப்படுத்த ஆரம்பித்துள்ளது. இது மேனுவல் (Manual) கியர்பாக்ஸின் அம்சங்களுடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் அம்சங்களை இணைக்கிறது.

தனது சக்திவாய்ந்த பைக்குகளில் ஒன்றான கேடிஎம் 1390 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் எவோ (1390 Super Adventure S EVO) பைக்கில் ஏஎம்டி கியர்பாக்ஸ் (Gearbox) ஆப்ஷனை கேடிஎம் வழங்க ஆரம்பித்துவிட்ட நிலையில், இந்த பைக்கில் பின் சக்கரத்திற்கு என்ஜின் ஆற்றல் செல்வதை மேம்படுத்தியுள்ளது. பாரம்பரிய மோட்டார்சைக்கிள்கள் போல கிளட்ச் லீவரை பைக் ஓட்டுபவர் பயன்படுத்த வேண்டிய அவசியமின்றி, AMT அமைப்பு கிளட்ச்சை தானாகவே இயங்க அனுமதிக்கிறது.

ktm automated manual transmisson gearbox - explanation

2026ஆம் ஆண்டுக்கான மேம்பாட்டின் ஒரு பகுதியாக, கேடிஎம் 1390 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் எவோ பைக்கில் இந்தத் தொழில்நுட்பம் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பவர்ஃபுல்லான கேடிஎம் அட்வென்ச்சர் பைக்கில் AMT கியர்பாக்ஸ் ஆனது 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆகும். இது பைக்கை ஓட்டுபவர் கிளட்ச்சை பயன்படுத்தாமல் கியர்களை மாற்ற உதவுகிறது.

வழக்கமான பாரம்பரிய மோட்டார்சைக்கிள்களில், ஓட்டுபவர் கிளட்ச்சை அழுத்தி, பின்னர் கால் லீவர் மூலம் கியரைத் தேர்வு செய்ய வேண்டும். AMT அமைப்பு இந்தத் தேவையை ஒரு சென்ட்ரிஃபியூகல் கிளட்ச் (centrifugal clutch) மெக்கானிசம் மூலம் தானாகவே கிளட்ச்சை கண்ட்ரோல் செய்கிறது. இது கிளட்ச் கட்டுப்பாடு இல்லாமல் மென்மையான ஸ்டார்ட் மற்றும் நிறுத்தங்களை அனுமதிக்கிறது.

ktm automated manual transmisson gearbox - explanation

என்ஜின் கண்ட்ரோல் யூனிட் (ECU) மற்றும் டெடிகேட்டட் டிரான்ஸ்மிஷன் கண்ட்ரோல் யூனிட் (TCU) மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒரு எலக்ட்ரோ மெக்கானிக்கல் (Electromechanical)-ஐப் பயன்படுத்தி AMT வழக்கமான கிளட்ச் லீவரின் தேவை இல்லாமல் கியர்களை மாற்றுகிறது. இந்த அமைப்பு, கியர் மாற்றங்களை மின்னணு முறையில் கட்டுப்படுத்தப்பட்டதாக நிகழ்த்துகிறது.

இதனால் ஓட்டுபவரின் நேரடி கிளட்ச் உள்ளீடு தேவையில்லை. கேடிஎம் நிறுவனத்தின் AMT அமைப்பானது, வழக்கமான மோட்டார்சைக்கிள் கியர் வரிசையில் இருந்து வேறுபட்ட கியர் செலக்டர் அமைப்பை பயன்படுத்துகிறது. பாரம்பரியமான 1-N-2-3-4-5-6 என்ற கியர் வரிசைக்குப் பதிலாக, கேடிஎம் AMT கியர்பாக்ஸ் P-N-1-2-3-4-5-6 என்ற கியர் வரிசையைக் கொண்டுள்ளது.

ktm automated manual transmisson gearbox - explanation

P (பார்க்) நிலை என்பது கியர்பாக்ஸுக்குள் ஒரு மெக்கானிக்கல் லாக் குறிக்கிறது. இது பைக் சாய்வான இடங்களில் நிறுத்தப்படும்போது உருளுவதைத் தடுக்கிறது. P மற்றும் N (நியூட்ரல்) நிலைகளை ஹேண்டில்பார் சுவிட்ச் க்யூபில் உள்ள ஷிஃப்ட் பேடில்களைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நியூட்ரலில் இருந்து முதல் கியருக்கு போக, பைக்கை ஓட்டுபவர் பிரேக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

முதல் கியருக்கு பின், த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் (Throttle Response) காரணமாக சென்ட்ரிஃபியூகல் கிளட்ச் இயக்கப்பட்டவுடன், மோட்டார்சைக்கிள் திடீரென நிற்கும் அபாயமின்றி முன்னோக்கி நகரத் தொடங்குகிறது. இதில் கியர் மாற்றங்கள் மிக வேகமாக, சுமார் 50 மில்லி விநாடிகளில் நிறைவு செய்யப்படுகிறது. இது குயிக் ஷிஃப்டர் (Quick Shifter) தொழில்நுட்பத்துடன் கூடிய அமைப்புகளுக்கு இணையான கியர் மாற்றத்தை வழங்குகிறது.

AMT கியர்பாக்ஸில் பார்க் மற்றும் நியூட்ரல் நிலைகள் என்ஜின் நிலையைப் பொருட்படுத்தாமல் ஹேண்டில்பார் பேடில்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. முதல் கியருக்கு செல்ல முன் அல்லது பின் பிரேக்கைப் பயன்படுத்த வேண்டும். இந்த வடிவமைப்பு என்ஜினுடன் இணைக்கப்பட்ட பைக்கின் டிரான்ஸ்மிஷனை பாதுகாப்பாகச் செயல்பட வைக்கிறது. மேலும் நிறுத்தும்போது எதிர்பாராத குலுக்கல்களைத் தடுக்கிறது.

ktm automated manual transmisson gearbox - explanation

கேடிஎம் 1390 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் எவோ பைக்கில் மேனுவல் (M) மோடில் பயணம் செய்பவர் வழக்கமான கால் கியர் லீவர் அல்லது ஹேண்டில்பாரின் இடதுப்பக்க சுவிட்ச் க்யூபில் உள்ள பேடில் ஷிஃப்டரைப் பயன்படுத்தி கியர் மாற்றங்களைத் தொடங்கலாம். ஆட்டோமேட்டிக் (A) மோடில், டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் ஆனது அப்போதைய கியர் நிலை, என்ஜின் வேகம், என்ஜினின் டார்க் திறன், பைக்கின் சாய்வு கோணம், ஆக்ஸலரேஷன், பைக்கின் வேகம் மற்றும் ஓட்டுபவரின் உள்ளீடுகள் போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் கியர் மாற்றங்களைத் தீர்மானிக்கிறது.

1390 அட்வென்ச்சர் எஸ் எவோ பைக்கில், பைக்கை ஓட்டுபவர்கள் கியர் ஷிஃப்ட் ஆகுவதை கம்ஃபோர்ட் (Comfort), ஸ்ட்ரீட் (Street) மற்றும் ஸ்போர்ட் (Sport) என்கிற மூன்று முறைகள் மூலம் தேர்ந்தெடுக்கலாம். இந்த முறைகள் ஆட்டோமேட்டிக் கியர் மாற்றம் எவ்வாறு, எப்போது நிகழும் என்பதைப் தீர்மானிக்கின்றன. கேடிஎம் AMT அமைப்பில் ஒரு கிக்-டவுன் (Kick-down) செயல்பாடும் அடங்கும். இது வேகமான த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் கிடைக்கும்போது முன்னெச்சரிக்கையாக முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச் செல்வதற்கோ அல்லது பைக்கை வேகப்படுத்துவதற்கோ குறைவான கியரை அமைக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மோட்டார்சைக்கிளில் ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படுவது ஆச்சிரியமாக உள்ளது. ஏனெனில், இது கார்களில் தான் விலை குறைவான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், கேடிஎம் ஏற்கனவே அட்வான்ஸாக யோசிக்க ஆரம்பித்துவிட்டது என்பதை அறிய முடிகிறது. 1390 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் எவோ என்கிற கேடிஎம் நிறுவனம் உருவாக்குவதிலேயே விலையுயர்ந்த பைக்கில் வழங்கப்படும் ஏஎம்டி ஆப்ஷன் ஆனது வரும் நாட்களில் மற்ற 1390சிசி கேடிஎம் பைக்குகளிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 8, 2026, 5:00 [IST]
English summary
What is ktm automated manual transmission gearbox for bikes simple explanation
மேலும்... #ktm #amt #automatic gear
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X