அடுத்த ஜென்மத்தில் ஆவது இப்படியொரு பணக்கார குடும்பத்தில் பிறக்கனும்! ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு ஃபெராரி கார்

பிறந்த நாளுக்கு கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் பலரது நீண்ட நாள் கனவாக உள்ளது. அப்படியிருக்கையில், இங்கு ஒரு தொழிலதிபர் தனது மகனின் ஒவ்வொரு வருட பிறந்த நாளுக்கும் விலையுயர்ந்த ஃபெராரி காரை பரிசளிப்பதை கடந்த 12 வருடங்களாக வாடிக்கையாக கொண்டுள்ளார். யார் அந்த தொழிலதிபர் என்பதை பற்றியும், தனது மகனுக்கு அவர் வாங்கிக் கொடுக்கும் ஃபெராரி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இன்றைய கால மாடர்ன் உலகின் பிரபலமான கிரிக்கெட் தொடராக விளங்கும் ஐபிஎல்-ஐ உருவாக்கிவிட்டு, அதன்பின் இங்கிலாந்திற்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டவர் லலித் மோடி ஆவார். இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரான இவருக்கு சொந்தமாக இலண்டனில் பல சொகுசு கார்கள் உள்ளன. இருப்பினும், ஒவ்வொரு வருட பிறந்த நாளின் போதும் தனது மகனுக்கு ஒரு விலையுயர்ந்த ஃபெராரி காரை பரிசாக வழங்குவதை இவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

why lalit modi buys his son a brand-new ferrari on every birthday

இதனை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் லலித் மோடி தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக தொடர்ச்சியாக நேர்காணல்களை வழங்கி வரும் இந்த இலண்டன்-வாழ் இந்திய தொழிலதிபர், தனது இளம் பருவத்தில் விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்றை கூட வாங்க முடியாமல் இருந்ததால், தனது மகனுக்கு இவ்வாறு ஒவ்வொரு வருடமும் ஒரு ஃபெராரி காரை பரிசாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

லலித் மோடியின் இளமை பருவ காலத்தில் அவரது குடும்பம் ஏழ்மையாக ஒன்றும் இல்லை. அப்போதும் அவரது குடும்பம் நல்ல செல்வ செழிப்பாகவே இருந்தது. இருப்பினும், லலித் மோடிக்கு அந்த சமயத்தில் ஃபெராரி கார் கிடைக்காமல் போனதற்கு காரணம், ஃபெராரி கார்கள் மீதான அவரது அதிகமான ஈர்ப்பாகும்.

why lalit modi buys his son a brand-new ferrari on every birthday

இளமை காலத்தில் லலித் மோடிக்கு மிகவும் பிடித்தமான கார்களாக ஃபெராரி கார்கள் இருந்துள்ளன. எப்படியாவது ஒரு ஃபெராரி காரை ஆவது பெற்றுவிட வேண்டும் என அந்த சமயத்தில் விரும்பியுள்ளார். ஆனால், லலித் மோடியின் இந்த ஆர்வத்தின் காரணமாகவே அவருக்கு ஃபெராரி காரை வாங்கி தர அவரது தந்தை தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனாலேயே லலித் மோடிக்கு ஃபெராரி கார்கள் மீது இளம் வயதில் இருந்தே தனி ஈர்ப்பு இருந்தது. அதுவே, தனது மகனுக்கு ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் புதியதாக ஃபெராரி கார் ஒன்றை வாங்கி தர தூண்டியுள்ளது. இதன்படி, லலித் மோடியின் மகன் தனது 21 முதல் 31ஆம் வயது வரையில் மொத்தம் 12 ஃபெராரி கார்களை தந்தையிடம் இருந்து பிறந்தநாள் பரிசாக பெற்றுள்ளார்.

அவ்வாறு மகனின் பிறந்தநாள் பரிசாக ஃபெராரியில் எந்தெந்த கார் மாடல்களை லலித் மோடி வழங்கினார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இருப்பினும், இலண்டனில் லலித் மோடியின் குடும்பத்திற்கு சொந்தமாக இருக்கும் ஃபெராரி கார்களில் ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் 812 GTS உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பிரத்யேகமான 'CRI3KET' மற்றும் 'MOD IR' என்கிற நம்பர் பிளேட்கள் உடன் இருக்கும் ஃபெராரி கார்கள் இலண்டனில் சர்வ சாதாரணமாக சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் படங்கள் முன்னதாக வெளியாகி இருந்தன.

ஃபெராரி கார்களுடன், இவரிடம் மெர்சிடிஸ்-பென்ஸ் மேபக் GLS600 கார் ஒன்றும் உள்ளது. லலித் மோடி தனது முதல் ஃபெராரி காரை தனது 40வது வயதில் தான் பெற்றுள்ளார். அதுவும் அவராக காசு கொடுத்து வாங்கவில்லை; பரிசாகவே கிடைத்துள்ளது. லலித் மோடியின் 40வது பிறந்தநாளுக்கு அவரது மனைவியின் சகோதரர் பிறந்தநாள் பரிசாக பரிசளித்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிலதிபர் லலித் மோடியிடம் ஏகப்பட்ட சொகுசு கார்கள் இருக்கும் விஷயம் நம் எல்லாருக்கும் தெரிந்ததே. இருப்பினும், ஃபெராரி கார்களுக்கும், லலித் மோடிக்கும் இடையே இப்படியொரு பிணைப்பு இருப்பது இப்போதுதான் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. மேலும், லலித் மோடி கடந்த 12 வருடங்களாக தனது மகனின் பிறந்த நாளுக்கு புத்தம் புதிய ஃபெராரி கார் ஒன்றை பரிசளித்துவரும் விஷயமும் இப்போதுதான் நமக்கு தெரியவந்துள்ளது.

Article Published On: Friday, June 5, 2026, 22:49 [IST]
English summary
Why lalit modi buys his son a brand new ferrari on every birthday
மேலும்... #england
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out