இது அவர்தான்னு எத்தனை பேர் ஏமாந்தீங்க? மாருதி கார் ஷோரூமில் கெத்தாக நிற்கிறார்!
நடிகர், நடிகைகளை போலவே தோற்றத்தில் இருக்கும் நபர்கள் பலரை பற்றி பார்த்திருக்கிறோம். அவ்வாறு, பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவை போன்று இருக்கும் தெருகூத்து கலைஞரான மணிபாலன் புதியதாக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் ஒன்றை பாண்டிச்சேரியில் வாங்கி உள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனது வித்தியாசமான முக அமைப்பின் மூலம் தமிழ்நாட்டை தாண்டி இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த காமெடி நடிகர், யோகி பாபு ஆவார். நடிகர் ஷாரூக்கான் உடன் 'ஜவான்' திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக நாடு முழுக்க இவரது முகம் பலருக்கு பரீட்சையமாகியது. எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும், யோகி பாபுவின் முகத்தை மட்டும் தனியாக அடையாளம் காண முடியும்.

இதனாலேயே அவரது முகத்தை போன்று இன்னொருவரின் முகம் மற்றும் உடலமைப்பு இருப்பது என்பது ஆச்சிரியமான ஒன்று என்றே சொல்ல வேண்டும். இருப்பினும், அத்தகைய யோகி பாபுவின் உடலமைப்பை அச்சு அசலாக மணிபாலன் என்பவர் கொண்டுள்ளார். இதனாலேயே தனது பெயரையும் 'யோகி மணிபாலன்' என சூட்டிக் கொண்டுள்ளார்.
ஊர் திருவிழாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பம்பை ஆட்டம், காளி ஆட்டம் போன்ற தெருகூத்து நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர், மணிபாலன் ஆவார். இருப்பினும், தமிழ்நாட்டில் இவரது சொந்த ஊர் எங்கு உள்ளது என்பதை எங்களால் அறிய முடியவில்லை. கடலூர் & பாண்டிச்சேரி பகுதியில் இவர் வசிக்கலாம் என கூறப்படுகிறது.

ஏனெனில், கடலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் மணிபாலன் கலந்துக் கொண்டுள்ளார். அதேபோல், தற்போது பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மாருதி சுஸுகி அரேனா டீலர்ஷிப் ஷோரூமில் பிராண்ட்-நியூ பிரெஸ்ஸா காரை வாங்கியுள்ளார். இதனை சம்பந்தப்பட்ட மாருதி சுஸுகி அரேனா டீலர்ஷிப் ஷோரூமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளது.
மனைவி, மகன்கள் மற்றும் சுற்றம் குடும்பத்தினர் உடன் ஷோரூமுக்கு சென்ற மணிபாலன், அங்கிருந்து வெள்ளை நிறத்திலான புத்தம் புதிய பிரெஸ்ஸா காரை டெலிவிரி பெற்றுள்ளார். இந்த காரின் முன்பக்கத்தில் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச நம்பர் பிளேட் உள்ளதை காணலாம். பிரெஸ்ஸா காரை பொறுத்தவரையில், இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பாக்ட் SUV காராக விளங்குகிறது.
இதில் வழங்கப்படும் 1.5 லிட்டர் 4-சிலிண்டர் K15C பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 103.1 பிஎச்பி மற்றும் 136.8 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.
மேலும், பிரெஸ்ஸா கார் CNG ஆப்ஷனிலும் விற்பனை செய்யப்படுகிறது. பிரெஸ்ஸா CNG காரில் அதிகப்பட்சமாக 88 பிஎச்பி மற்றும் 121.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடிகிறது. இந்த CNG காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நடிகர் யோகி பாபுவின் போலி என கலைஞன் மணிபாலனை கூறினாலும், அவர் வாங்கியிருப்பது உண்மையான மாருதி சுஸுகி பிரெஸ்ஸா கார் ஆகும். பிரெஸ்ஸா காரில் எந்த குறிப்பிட்ட வேரியண்ட்டை இவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் தெரியவரவில்லை.


Click it and Unblock the Notifications