24 வயதில் தந்தைக்கு 'பிரம்மாண்டமான' பரிசை வழங்கிய கிரிக்கெட் வீரர்! ஷோரூமில் கொண்டாடப்பட்ட தந்தையர் தினம்!

ஜூலை 1 முதல் தொடங்கவிருக்கும் பரபரப்பான இந்திய- இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இளம் ஓபனிங் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்விற்காக பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளார். அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

வரவிருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சுற்றுப்பயணத்தில் ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆனால், இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்திய கிரிக்கெட் அணியில் தற்போதைக்கு மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி உடைய மிக சில வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருவராவார்.

young cricketer yashasvi jaiswal gifted mercedes-benz gle luxury car to his father

சமீபத்தில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அசத்தினார். இருப்பினும் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இடம் கிடைக்காத ஏமாற்றம் இருந்தாலும், மறுபுறம் தனது ஒட்டுமொத்த குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கார் வாங்கச் சென்றுள்ளார் ஜெய்ஸ்வால்.

ஆம், உலகமே கொண்டாடும் தந்தையர் தினத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது தந்தைக்கு மிக ஆடம்பரமான மெர்சிடிஸ்-பென்ஸ் ஜிஎல்இ (Mercedes-benz GLE) காரைப் பரிசாக வழங்கி வியக்க வைத்துள்ளார். இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.1.32 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் அழகிய புகைப்படங்களை அவரது சகோதரர் தேஜஸ்வி ஜெய்ஸ்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.

young cricketer yashasvi jaiswal gifted mercedes-benz gle luxury car to his father

பென்ஸ் கார் ஷோரூமில் கார் டெலிவிரி பெறும் போது எடுக்கப்பட்ட படங்களில் அவரது பெற்றோர் மிகவும் எளிய உடைகளில் காட்சியளித்தது ரசிகர்களின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஒரு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் தந்தையாக இருந்தும், அவரது இந்த எளிய குணத்தைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தந்தைக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் வாங்கிக் கொடுத்திருக்கும் GLE காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் நிமிர்ந்த தோற்றம் கொண்ட, லக்சரியான SUV காராக விளங்குகிறது. மைல்ட்-ஹைப்ரிட் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும் இந்த பென்ஸ் கார் இந்தியாவில் ரூ.1 கோடி முதல் ரூ.1.16 கோடி வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இது, காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஆன்-ரோடு விலைகள் இன்னும் ரூ.25 லட்சம்- ரூ.30 லட்சம் அளவிற்கு அதிகமாக வரும். ஏற்கனவே கூறியதுபோல், இது ஒரு மைல்ட்-ஹைப்ரிட் கார் ஆகும். அதாவது, காரில் என்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. அந்த என்ஜின் பெட்ரோல் என்ஜினா அல்லது டீசல் என்ஜினா என்பதை வாடிக்கையாளர் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

மெர்சிடிஸ் GLE காரில் புதியதாக நைட் எடிஷன் கடந்த மார்ச் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்பட்டது. GLE காரின் இந்த ஸ்பெஷல் எடிஷனையும் பெட்ரோல் என்ஜின் அல்லது டீசல் என்ஜின் உடன் வாங்கலாம். இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே GLE கார் விற்பனையில் உள்ளது. கடைசியாக 2023ஆம் ஆண்டின் இறுதியில் மிக முக்கிய அப்கிரேட்கள் இந்த காருக்கு வழங்கப்பட்டன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுக்க தந்தையர் தினம் ஒரே நாளில் கொண்டாடப்படுவது இல்லை. வருடத்தின் வெவ்வேறு மாதங்களில் கொண்டாடப்படுகின்றன. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஜூன் 3ஆம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. எந்த தினத்தில் கொண்டாடுகிறோம் என்பது முக்கியமல்ல, கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை போல தந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

Article Published On: Tuesday, June 23, 2026, 6:27 [IST]
English summary
Young cricketer yashasvi jaiswal gifted mercedes benz gle luxury car to his father
மேலும்... #celebrity cars #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out