பெரும் எதிர்பார்ப்புடன் ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோ துவங்கியது

Frankfurt Auto Show 2011
உலகம் முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் வல்லுனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோ நேற்று துவங்கியது.

ஜெர்மனி தலைநகர் பிராங்க்பர்ட்டில் ஆண்டுதோறும் சர்வதேச ஆட்டோ ஷோ நடந்து வருகிறது. இந்த நிலையில், 64வது ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஆட்டோ ஷோ நேற்று துவங்கியது.

கடந்த 2009ம் ஆண்டைவிட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலான இடவசதியுடன் இந்த ஆண்டு ஆட்டோ ஷோ நடக்கிறது. மொத்தம் 32 நாடுகளை சேர்ந்த 1,007 நிறுவனங்கள் கண்காட்சியில் பங்குபெற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் லம்போர்கினி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் உள்பட 89 கார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மொத்தம் 13 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் கான்செப்ட் மாடல்கள் உள்பட 90 புதிய கார் மாடல்கள் இதில் அறிமுகம் செய்யப்படுகின்றன.

ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களும், ஆட்டோமொபைல் வல்லுனர்களும் பார்வையிட வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

(ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்படும் கான்செப்ட் மாடல்கள் மற்றும் புதிய கார்கள் பற்றிய சிறப்பு தகவல்களை தொடர்ந்து வழங்க இருக்கிறோம்)

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2011, 12:54 [IST]
English summary
Frankfurt Motor Show 2011, so let us have a peek within and see what lies ahead. A load more cars, it appears from the blurb, with this already gargantuan biennial motor show pumped up like someone left the airline attached. This year’s show has over 20 per cent more exhibition space than in 2009, with a claimed 1,007 exhibitors from 32 countries and 89 world premieres. With the world’s population of cars recently touching one billion, the motor industry shows no sign of slaking its thirst to provide every man, woman and child on the planet with four wheels and a moto
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+