ஏழாம் தலைமுறை போர்ச்சே-911 கரீரா: ப்ராங்க்பர்ட்டில் அறிமுகம்

கடந்த 1963ம் ஆண்டு போர்ச்சே-911 கரீரா கார் அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இன்று வரை தனது வடிவமைப்பாலும், பெர்ஃபார்மென்சாலும் சர்வதேச சந்தையில் தனக்கென தனி அங்கீகாரத்துடன் ஆட்டிப்படைத்து வருகிறது போர்ச்சே-911 கரீரா சூப்பர் கார்.
இந்த நிலையில், புதிய தலைமுறைக்கான அம்சங்களுடன் அவ்வப்போது 911-கரீரா காரை போர்ச்சே அறிமுகம் செய்து வருகிறது. தற்போது ப்ராங்க்பர்ட் ஆட்டோ ஷோவில் ஏழாம் தலைமுறை 911-கரீரா காரை போர்ச்சே அறிமுகப்படுத்தியுள்ளது.
பயணிகளின் சொகுசு, பாதுகாப்புக்கான கூடுதல் அம்சங்களுடன் புதிய 911-கரீரா வந்துள்ளது. புதிய கரீரா 350 ஹார்ஸ்பவர் எஞ்சின் மற்றும் 400 ஹார்ஸ்பவர் எஞ்சின் ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது.
இதுகுறித்து போர்ச்சே சிஇஓ மேத்தியாஸ் மியூல்லர் கூறுகையில்," கடந்த 1963ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை சர்வதேச அளவில் 7 லட்சம் 911- கரீரா கார்களை விற்பனை செய்துள்ளோம்.
இதில், 80 சதவீத கார்கள் இன்னும் நல்ல நிலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன. எனவே, தரம் அது நிரந்தரம் என்ற தாரக மந்திரத்துடன் புதிய போர்ச்சே 911- கரீராவை அறிமுகம் செய்துள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








