டெல்லியில் இரண்டு இடங்களில் 2012 ஆட்டோ எக்ஸ்போ-எஸ்.ஐ.ஏ.எம்.

Auto Expo Delhi
டெல்லி: இடப்பற்றாக்குறை காரணமாக டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியை இரண்டு இடங்களில் நடத்த இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு(சியாம்)முடிவு செய்துள்ளது.

சியாம் அமைப்பு சார்பில் டெல்லியில் ஆண்டுதோறும் பிரம்மாண்ட ஆட்டோமொபைல் கண்காட்சி(ஆட்டோ எக்ஸ்போ) நடத்தப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய ஆட்டோ எக்ஸ்போவாக கருதப்படும் இதில், வாகன நிறுவனங்கள் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள் இடம்பெறும்.

கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி ஆட்டோ எக்ஸ்போ புகழ்பெற்ற பிரகதி மைதானத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையி்ல், பிரகதி மைதானத்தின் பாதியளவு இடம் விற்பனை செய்யப்பட்டுவிட்டதால், அடுத்த ஆண்டு கண்காட்சியை நடத்துவதற்கான போதிய இடம் இல்லை.

எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி 6ந் தேதி முதல் 12ந் தேதி வரை நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸோபோவை இரண்டு இடங்களில் நடத்த சியாம் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சியாம் அமைப்பின் தலைவர் விஷ்ணு மாத்தூர் கூறியதாவது:

"பிரகதி மைதானத்தில் கடந்த ஆண்டு நடந்த எக்ஸ்போவின்போது, இடப்பற்றாக்குறையால் ஃபோர்டு உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இடையூறுகளால் பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரகதி மைதானத்தின் பாதி இடம் விற்பனை செய்யப்பட்டுள்ளதால், இடப்பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கு 20 லட்சம் பார்வையாளர்கள் வந்தனர். இது அடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்கும்.

தவிர, அடுத்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் பல புதிய நிறுவனங்கள் பங்கேற்கும் என்பதால், இரண்டு இடங்களில் நடத்த முடிவு செய்துள்ளோம். பிரகதி மைதானம் தவிர்த்து, நொய்டாவிலும் ஆட்டோ எக்ஸ்போவை நடத்த முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து, விரைவில் இறுதி முடிவு எட்டப்படும்,"

More from DriveSpark

Article Published On: Sunday, May 1, 2011, 13:35 [IST]
English summary
Auto Expo 2012 may have a second venue within the capital region because the entire space at Pragati Maidan has been sold and there is a long queue of prospective participants outside.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+