பீஜிங் ஆட்டோ எக்ஸ்போ துவங்கியது:புதிய கார்கள் அறிமுகம்
சீனத் தலைநகர் பீஜிங்கில் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ துவங்கியது. உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது புதிய கார் மாடல்களை பீஜிங் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்துள்ளனர். அதில், தற்போது கிடைத்த தகவல்கள்படி, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள முக்கிய கார் மாடல்களின் செய்திகளை பகிர்ந்து கொள்கிறோம்.
ஃபியட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய கார் நிறுவனமான கிறிஸ்லர் நிறுவனனம் டிராகன் போன்ற வடிவமைப்பு கொண்ட ஜீப் பிராண்டு கார் மாடலை பார்வைக்கு வைத்துள்ளது. இதுகுறித்து ஆசிய பிராந்தியத்துக்கான கிறிஸ்லர் சிஇஓ மைக் மான்லே கூறுகையில், சீனாவில் வெற்றி பெறுவதற்கு சீன வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ப இதுபோன்ற புதுமையான மாடல்கள் அவசியம்," என்று கூறினார்.

மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு, தனது ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவியை பார்வைக்கு வைத்து சீனர்களை கவர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதேபோன்று, இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் வியாஜியோ என்ற புத்தம் புதிய செடான் காரை பார்வைக்கு வைத்திருக்கிறது. சீன மார்க்கெட்டுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வர உள்ளது.
உலகின் பிரபல சூப்பர் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி தனது புத்தம் புதிய உரஸ் எஸ்யூவியை பீஜிங் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைத்து சீனர்களுக்கு விருந்து கொடுக்கிறது.
சொகுசு கார் தயாரிப்பாளரான ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், புதிய எக்ஸ்டன்டு வீல் பேஸ் பான்டம் சீரிஸ்-2 காரை பார்வைக்கு வைத்துள்ளது. உருவத்தில் சற்று பெரிதாக உள்ள இந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க பல சீனர்கள் ஆயத்தமாகி வருகின்றனராம்.
சீனாவின் உள்ளூர் கார் தயாரிப்பாளர்களான செர்ரி மற்றும் பிஒய்டபிள்யூ ஆகியவையும் புதிய கார் மாடல்களை பார்வைக்கு வைத்துள்ளன. இதுதவிர, அடுத்தடுத்து புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








