சீனாவுக்காக ஃபியட் தயாரித்த முதல் பிரிமியம் செடான் கார்
சீன மார்க்கெட்டுக்காக புத்தம் புதிய செடான் காரை ஃபியட் தயாரித்துள்ளது. வியாஜியோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் தற்போது பீஜிங்கில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஜிஏசி ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை ஃபியட் வடிவமைத்துள்ளது. டி- செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்பட இருக்கும் இந்த காரின் வடிவமைப்பு நிச்சயம் சீனர்களை அசத்தும் வகையில் இருக்கிறது.

1.4 லிட்டர் டி-ஜெட் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் மார்க்கெட்டுக்கு வர இருக்கிறது.ஆனால், 2 விதமான ஆற்றல் வேறுபாடுகளை கொண்ட 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட மாடல்களாக விற்பனைக்கு கிடைக்கும்.
இந்த காரின் முக்கிய அம்சங்களாக இதன் டச் ஸ்கிரீனை கூறலாம். இந்த காரில் செயற்கைகோள் இணைப்புடன் கூடிய அகன்ற 8.4 இஞ்ச் டச் ஸ்கிரீனை ஃபியட் பொருத்தியுள்ளது. இதேபோன்று, டேஷ்போர்டு வடிவமைப்பும் மிகவும் அசத்தலாக இருக்கிறது.
இந்த கார் இந்தியா வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஏனெனில், இந்தியாவில் டி-செக்மென்ட்டில் எந்த கார் மாடலையும் ஃபியட் வைத்திருக்கவில்லை. ஆனால், இதுகுறித்து இதுவரை ஃபியட் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








