அடுத்த மாதம் சென்னையில் ஆட்டோ ஷோ!

இந்த கண்காட்சியில் புதிய பைக்குகள், ஆடம்பர கார்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. தவிர ஆட்டோ ஆக்சஸெரீஸ்களும் , வாகன அலங்கார பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆட்டோமொபைல் துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்து கார் தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரிகள் பங்குபெறும் சிறப்பு கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
பார்வையாளர்களை உற்சாகப்படுத்தவும், பொழுதுபோக்குக்கும் பைக் ஸ்டன்ட்டிங் மற்றும் மோட்டோ ராலியும் நடைபெற உள்ளது. சென்னை மக்களுக்கு இந்த ஆட்டோ ஷோ பயன் தரும் விதத்தில் அமையும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








