பாரிஸ் மோட்டார் ஷோவில் அசத்தும் சுஸுகியின் புதிய கார்
சில கார்கள் முதல் பார்வையிலேயே பிடித்துப் போகும். அந்த வகையில், பாரிஸ் மோட்டார் ஷோவில் சுஸுகி பார்வைக்கு வைத்திருக்கும் கான்செப்ட் மாடல் எஸ் கிளாஸ் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
அடுத்த ஆண்டு ஐரோப்பிய மார்க்கெட்டில் அறிமுகமாக இருக்கும் இந்த எஸ் கிராஸ் கார் ஆன்ரோடு தகவமைப்புகளை மனதில் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி பார்வைக்கு வைத்திருக்கும் இந்த காரின் புகைப்படங்களை உங்களுக்காக பிரத்யேகமாக வழங்குகிறது டிரைவ்ஸ்பார்க் தளம்.
எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவர் ரக கார் ஐரோப்பிய மார்க்கெட்டில் ஃபியட் பேட்ஜ் கொண்டதாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய கார் சுஸுகியின் பேட்ஜ் கொண்டதாக மட்டும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
வடிவமைப்பில் முற்றிலும் புதுமைகளை தாங்கி வந்திருக்கும் எஸ் கிராஸ் நிச்சயம் ஒரு ரவுண்டு வரும் என்பதை ஆணித்தரமாக கூற முடியும்.

எஸ்எக்ஸ்4 கிராஸ் ஓவருக்கு மாற்றான்!
எஸ்எக்ஸ்4 கிராஸ் ஓவர் ரக காருக்கு மாற்றாக சிறந்த கையாளுமை மற்றும் வடிவமைப்புடன் வருகிறது எஸ் கிராஸ். சி செக்மென்ட்டில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

உற்பத்தி எப்போது?
கான்செப்ட் காராக அறிமுகம் செய்யப்பட்டாலும் விரைவில் உற்பத்தி நிலையை இந்த கார் எட்ட உள்ளதாக சுஸுகி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

4 வீல் சிஸ்டம்
எஸ் கிராஸ் காரின் 4 வீல் சிஸ்டத்திலும் அறிமுகப்படுத்தும் பணிகளில் சுஸுகி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தாராள இடவசதி
பயணிகள் அமர்வதற்கு உட்புறத்திலும், பொருட்களை வைப்பதற்கும் தாராள இடவசதியுடன் எஸ் கிராஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னழகு
முன்புறத்தில் கண்ணை கவரும் கிரில், ஸ்கிட் பிளேட் ஆகியவை எஸ் கிராஸ் காருக்கு கம்பீரமான அழகை கொடுக்கிறது.

எஞ்சின்
ஸ்விப்ட் உள்ளிட்ட சுஸுகியின் கார்களை போன்று நல்ல பெர்ஃபார்மென்ஸ் கொண்டதாகவும், குறைந்த கார்பன் புகை வெளியீடு, அதிக மைலேஜ் தரும் எஞ்சினுடன் வருகிறது எஸ் கிராஸ்.

இதர அம்சங்கள்
எல்இடி ஹெட்லைட், பனி விளக்குகள், டேஞ்சர் விளக்குகள், ரியர் வியூ மிரர் இன்டிகேட்டர் என அனைத்துமே நிச்சயம் கவர்வதாக இருக்கிறது. கூரையின் மீது இழைந்தோடும் ரூஃப் ரெயில் என இஞ்ச் இஞ்ச்சாக பார்த்து எஸ் கிராஸை செதுக்கியுள்ளது சுஸுகி.


Click it and Unblock the Notifications








