பாரிஸ் மோட்டார் ஷோவில் அசத்தும் டாப்-5 கான்செப்ட் கார்கள்

புதுமையான வடிவமைப்பு, அடுத்த தலைமுறை அம்சங்கள் கொண்ட கான்செப்ட் கார்கள் மீது ஆட்டோமொபைல் பிரியர்களுக்கு தனி ஈர்ப்பு இருக்கும். அதை பற்றி தெரிந்துகொள்வதிலும் ஆர்வம காட்டுகின்றனர்.

உலக அளவில் மிகப் பிரபலமான பாரிஸ் மோட்டார் ஷோவில் ஏராளமான புதிய கான்செப்ட் மாடல் கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த பிரத்யேக அம்சங்கள் கொண்ட டாப் 5 கான்செப்ட் கார்களை ஸ்லைடரில் காணலாம்.

ஸ்மார்ட் ஃபார்ஸ்டார்ஸ்

ஸ்மார்ட் ஃபார்ஸ்டார்ஸ்

பென்ஸ் போன்று டெய்ம்லரின் துணை பிராண்டான ஸ்மார்ட் வடிவமைத்திருக்கும் புதிய கார்தான் ஃபார்ஸ்டார்ஸ். புரொஜெக்டர் இருப்பதுதான் இந்த காரின் முக்கிய சிறப்பம்சம்.. காரை நிறுத்திவிட்டு முன்புற கிரில்லுக்கு நடுவில் பொருத்தப்பட்டு இருக்கும் புரொஜெக்டர் மூலம் எதிரில் இருக்கும் சுவர் அல்லது ஸ்கிரீனை வைத்து சினிமா மற்றும் வீடியோ கிளிப்பிங்குகளை பார்க்க முடியும்.

இதற்காக, சிறப்பு ஆடியோ சிஸ்டமும். ஸ்மார்ட்போனை இணைத்துக்கொள்ளும் வசதிகளும் இருக்கின்றன. இந்த காரில் 80 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கூரை முழுவதும் கண்ணாடியால் வேய்ப்பட்டிருக்கிறது.

நிசான் டெர்ரா

நிசான் டெர்ரா

டெர்ரரான வடிவமைப்பு கொண்ட இந்த கான்செப்ட் எஸ்யூவி சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் லீஃப் எலக்ட்ரிக் காரின் தத்துவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பத்திலும் வர இருக்கிறது. இதன் ஒவ்வொரு வீலிலும் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார்கள் மூலம் உந்து சக்தியை பெறும்.

ஹைட்ரஜன் எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட காரை விரைவில் அறிமுகப்படுத்துவதற்கு ஆயத்தமாகிவிட்டதை டெர்ரா மூலம் நிசான் உறுதிப்படுத்தியுள்ளதாக ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.

பீஜோ ஓனிக்ஸ்

பீஜோ ஓனிக்ஸ்

தனது வடிவமைப்பு திறனை உலகுக்கு பரைசாற்றும் வகையில் புதிய கான்செப்ட் மாடல் சூப்பர் காரை பிரெஞ்சு கார் நிறுவனமான பீஜோ பார்வைக்கு வைத்துள்ளது. லீ மேன்ஸ் மாடலின் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் 600 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட 3.7 லிட்டர் வி8 ஹைபிரிட் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த கார் மணிக்கு 180கிமீ வேகம் வரை செல்லும். இதன் டேஷ்போர்டு மறுசுழற்சி செய்யப்பட்ட செய்தித்தாள்களின் கூழ் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

பிஎம்டபிள்யூ ஆக்டிவ் டூரர்

பிஎம்டபிள்யூ ஆக்டிவ் டூரர்

பிஎம்டபிள்யூவின் முதல் ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார். இந்த கார் ஹைபிரிட் தொழில்நுட்பத்தை கொண்டது. 190 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது.முதல் 8 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டி பிடிக்கும் ஆற்றல் கொண்டது. மணிக்கு அதிகபட்சம் 200 கிமீ வேகத்தில் செல்லும்.

சாங்யாங் இ-எக்ஸ்ஐவி

சாங்யாங் இ-எக்ஸ்ஐவி

மஹிந்திரா கீழ் இயங்கும் சாங்யாங் மோட்டார்ஸ் இ-எக்ஸ்ஐவி என்ற புதிய எலக்ட்ரிக் கார் கான்செப்ட் மாடலை பார்வைக்கு வைத்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட சாதனங்களோடு எளிதில் இயைந்து வசதிகளை தரும் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. 107 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிமீ வரை செல்லும். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியில் 4 பேர் அமர்ந்து சொகுசாக பயணம் செய்ய பக்கெட் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 10, 2012, 16:08 [IST]
English summary
People are always crazy about the concepts cars. Here we are giving some detail about top 5 concept cars which are unveiled in Paris Motor Show 2012.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+