குறைந்த விலையில் புதிய செடான் கார்: வோக்ஸ்வேகன் அறிமுகம்

Volkswagen Lavida
பீஜிங் ஆட்டோ ஷோவில் லேவிடா செடான் காரின் குறைந்த விலை வேரியன்ட்டை வோக்ஸ்வேகன் பார்வைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்து வரும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான புதிய கார்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், வோக்ஸ்வேகன் பார்வைக்கு வைத்துள்ள லேவிடா செடான் காரும் ஒன்று.

நம்மூரில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா மான்ஸா, டொயோட்டோ எட்டியோஸ் ஆகிய என்ட்ரி லெவல் செடான் கார் ரகத்தை சேர்ந்ததுதான் இந்த லேவிடா. இந்த கார் இந்தியாவில் வோக்ஸ்வேகன் விற்பனை செய்து வரும் வென்ட்டோ காரை விட நீளத்திலும், அகலத்திலும் சிறிய செடான் காராக இருக்கிறது.

வெளிப்புறம், உட்புறம் என அனைத்து இடங்களிலும் லேவிடாவில் ஏராளமான மாற்றங்கள் கண்டிருக்கின்றன. இந்த கார் மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட உள்ளதாக வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

ஆனால், எஞ்சின் பற்றிய விபரங்களை அந்த நிறுவனம் வெளியிடவில்லை. இந்த காரில் ஏபிஎஸ் பிரேக், ஏர்பேக்குகள், இஎஸ்பி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கும். இருப்பினும், சீன வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் அம்சங்களுடன் குறைந்த விலையில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 25, 2012, 12:25 [IST]
English summary
Volkswagen, the leading international carmaker in China has unveiled a new variant of its cheap sedan Lavida at the Beijing Auto Show. The Volkswagen Lavida is a much loved car in China as it is affordable and yet gives buyers an opportunity to own a Volkswagen.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+