மிரட்டலான புதிய நேக்டு க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்திய ஹோண்டா
டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா வல்கைரி என்ற புதிய மோட்டார்சைக்கிள் ஆட்டோமொபைல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
கோல்டு விங் டூரர் ரக மோட்டார்சைக்கிளின் பேரிங் பேனல்கள், பின்புற பெட்டிகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, நேக்டு க்ரூஸர் பைக்காக மாற்றியுள்ளது ஹோண்டா. டோக்கியோ மோட்டார் ஷோவில் பார்வையாளர்களை நகர விடாமல் செய்த அந்த மோட்டார்சைக்கிளின் படங்கள், தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
கோல்டு விங் மோட்டார்சைக்கிளில் பொருத்தப்பட்டிருக்கும், அதே 1,832சிசி 6 சிலிண்டர் எஞ்சின்தான் இந்த மோட்டார்சைக்கிளிலும் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்
410 கிலோ எடை கொண்ட கோல்டு விங் மோட்டார்சைக்கிளின் எஞ்சின் 117 பிஎச்பி ஆற்றலையும், 166 என்எம் டார்க்கையும் அளிக்கும். ஆனால், எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் நீக்கப்பட்ட இந்த புதிய மோட்டார்சைக்கிள் 340 கிலோவாக குறைந்துள்ளதால், பவர் அதிகரித்துள்ளது.

தாழ்வான இருக்கை
இந்த மோட்டார்சைக்கிளின் இருக்கை தரையிலிருந்து 28.8 இஞ்ச் உயரத்தில் இருப்பதால் எளிதில் கையாள முடியும் என்பதோடு, அதிவேகத்தில் சிறப்பான சமநிலையை வழங்கும்.

வீல் பேஸ்
ஃப்ரேமேயைும், பின் சக்கரத்தையும் பாலமாக வலு சேர்க்கும் வகையில் ஒற்றை அலுமினியம் ஸ்விங் ஆர்ம் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், வீல் பேஸ் 67.2 இஞ்ச் கொண்டிருக்கிறது.

ஏபிஎஸ் பிரேக்
டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் ஆப்ஷனலாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்டு விங் மோட்டார்சைக்கிளை விட இதில் கூடுதல் விட்டம் கொண்ட 310மிமீ ட்வின் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 316 மிமீ விட்டம் கொண்ட சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன.
வீடியோ
இந்த மோட்டார்சைக்கிளின் பெர்ஃபார்மென்ஸ் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








